விந்தணு பற்றி உங்களுக்குத் தெரியாத சுவாரஸ்யமான 8 விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

விந்தணு என்பது ஓர் ஆண் இனப்பெருக்க அணு. ஆண்கள் ஒருமுறை உடலுறவில் ஈடுபடும் போது மில்லியன் கணக்கிலான விந்தணுக்கள் வெளிவரும் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் ஒரு ஆணின் உடலில் ஒரு நொடியில் 1,500 விந்தணுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இப்படி ஒரு நொடியில் ஏராளமான விந்தணுக்கள் உற்பத்தி செய்யப்படுவதால் தான், ஒரு ஆணுக்கு ஒருமுறை விந்து வெளியேறும் போது மில்லியன் கணக்கில் விந்தணுக்கள் வெளியேற்றப்படுகின்றன.

ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் குறைந்த விலையில் கிடைக்கும் சில உணவுப் பொருட்கள்!!!

பெண்களின் உடலினுள் வெளியேறும் அந்த விந்தணுக்களுள் ஒருசில மட்டுமே உயிரோடு நீந்திச் சென்று பெண்களின் கருப்பையை அடைந்து, கருவுறச் செய்கின்றன. ஆனால் இறந்த விந்தணுக்களும் கருவுற உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதுமட்டுமின்றி, விந்தணுக்கள் பெரும்பாலும் சிதைக்கப்பட்ட நிலையில் இருப்பவை என்பது தெரியுமா?

ஒரு ஆண் கருவளத்துடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிய சில அறிகுறிகள்!!!

இதுப்போன்று விந்தணுக்கள் குறித்து ஏராளமான சுவாரஸ்யமான விஷயங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக இவை அனைத்தும் உங்களுக்கு வியப்பூட்டும் வகையில் இருக்கும்.

இயற்கை முறையில் விந்தணுக்கள் சீக்கிரம் வெளியேறுவதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இறந்த விந்தணுவும் ஆரோக்கியமானது

இறந்த விந்தணுவும் ஆரோக்கியமானது

என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், IVF முறையில் ஆண்களின் இறந்த விந்தணுக்களைக் கொண்டு ஆரோக்கியமான கருவை உருவாக்க முடியுமாம்.

ஒரு விதைப்பை போதும்

ஒரு விதைப்பை போதும்

பொதுவாக ஆண்களுக்கு இரண்டு விதைப்பை இருக்கும். மேலும் இரண்டு இருந்தால் தான் ஆரோக்கியமானவராக கருதப்படுகிறது. ஆனால் ஒரே ஒரு விதைப்பையைக் கொண்டும் விந்தணுக்களை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் ஒரு விதைப்பை இருந்தால், விந்தணுக்கள் உற்பத்தியாவதற்கு சற்று நேரம் எடுத்துக் கொள்ளும். அவ்வளவு தான் வித்தியாசமே தவிர, மற்றபடி ஒருவிதைப்பை இருப்பவரும் ஆரோக்கியமானவரே.

விந்து ஆயுட்காலம்

விந்து ஆயுட்காலம்

ஆய்வு ஒன்றில், பாய்ச்சப்பட்ட விந்தணுக்கள் பெண்களின் உடலினுள் 30 நொடியில் இருந்து, 6 நாட்கள் வரை (சூழலைப் பொறுத்தது) உயிரோடு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

விந்து பாலினம்

விந்து பாலினம்

ஆண்களின் உடலில் இருந்து வெளியேறும் விந்தணுக்கள் அனைத்தும் ஆண் குரோமோசோம்களைக் கொண்டிருப்பதில்லை. ஆண் வெளியேற்றும் விந்துவில் X குரோமோசோம்களும் இருக்கும், Y குரோமோசோம்களும் இருக்கும்.

சுயஇன்பம் ஆரோக்கியமானதே

சுயஇன்பம் ஆரோக்கியமானதே

ஒவ்வொரு ஆரோக்கியமான ஆணுக்கும் சுயஇன்பம் காண்பது அவசியமானது. சுயஇன்பம் காணாமல் இருந்தால், அதனால் புரோஸ்டேட் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது. அதே சமயம் அடிக்கடி அளவுக்கு அதிகமாக சுயஇன்பம் காண்பது தான் ஆரோக்கியமற்றதே தவிர, எப்போதாவது ஒருமுறை சுயஇன்பம் காண்பது ஆரோக்கியமான செயலே.

உயர் வெப்பநிலை விந்தணுக்களுக்கு நல்லதல்ல

உயர் வெப்பநிலை விந்தணுக்களுக்கு நல்லதல்ல

எப்போதும் விந்தணுக்களின் உற்பத்தி கோடையில் குறைவாகவும், குளிர்காலத்தில் அதிகமாகவும் இருக்கும். எனவே கோடையில் ஆண்கள் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும் உணவுப் பொருட்களை அதிகம் உட்கொண்டு வர வேண்டியது அவசியம்.

விந்தணு Vs விந்து நீர்மம்

விந்தணு Vs விந்து நீர்மம்

விந்தணு என்பது வெள்ளை நிற விந்து நீர்மத்தில் உள்ள ஒரு பகுதி. பல விந்தணுக்கள் தான் உடலினுள் வெள்ளை நிற திரவத்துடன் கலந்து, விந்து நீர்மமாக வெளியேற்றப்படுகிறது.

சிதைக்கப்பட்ட விந்தணுக்கள்

சிதைக்கப்பட்ட விந்தணுக்கள்

விந்துத்தள்ளலின் போது பெரும்பாலான விந்தணுக்கள் சிதைக்கப்பட்டிருக்கும். அப்படி சிதைக்கப்பட்ட விந்தணுக்களுக்கு இரண்டு தலைப்பகுதியும், இரண்டு வால் பகுதியும் இருக்கும். இந்த இயல்பு மாற்றங்களால் தான், நிறைய விந்தணுக்களை கருப்பையை அடையும் முன் இறந்துவிடுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Interesting Facts About Sperm Everyone Should Know

Here are some of the healthy facts about sperm, we are sure you were unaware about. Take a look at these human sperm facts, guys.