இதுவரை யாரும் அறியாத பில் கேட்ஸ் பற்றிய திகைப்பூட்டும் உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

பில் கேட்ஸ் உலகின் பணக்கார நபர்களில் ஒருவர் என்பதை காட்டிலும், மனித நேயம் அதிகமாக உள்ள நபர் என்று தான் கூற வேண்டும். ஒருமுறை அதிகபட்சமாக இவரது சொத்து மதிப்பு $100 பில்லியன் டாலர்களை கடந்தது.

மற்றொரு நபராக இருந்தால் இதை எப்படி $200 பில்லியன் டாலர்கள் ஆக்கலாம் என்று தான் யோசித்திருப்பார். ஆனால், பில் கேட்ஸ் உலகின் முதல் பணக்கார நபராக இருப்பதை காட்டிலும், மனித நேயமிக்க நபராக் இருப்பது தான் சிறந்தது என்று எண்ணினார்.

இதையும் படிங்க: இனிமேல் யூடியூப்பில் வீடியோ பாக்குறதுக்கு முன்னாடி இத கொஞ்சம் தெருஞ்சுக்குங்க!

அதனால் தான் இதுவரையிலும் $28 பில்லியன் டாலர்கள் நன்கொடையாக மட்டுமே அளித்துள்ளார் பில் கேட்ஸ். இனி, பில் கேட்ஸ் பற்றி பலரும் அறியாத உண்மைகள் பற்றி காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

தனது முப்பது வயதில் ஓர் மில்லினியர் ஆகிவிட வேண்டும் என ஆசைப்பட்டார் பில் கேட்ஸ். ஆனால், தனது 31வது வயதில் ஓர் பில்லினியராக இருந்தார் பில் கேட்ஸ்.

உண்மை #2

உண்மை #2

பில் கேட்ஸ் என்பவர் ஓர் நாடாக இருந்தால், அவர் தான் உலகின் 63வது பணக்கார நாடாக இருப்பார்.

உண்மை #3

உண்மை #3

$72 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு கொண்டுள்ள பில் கேட்ஸ்-ன் சொத்தில், வெறும் $10 மில்லியன் டாலர்கள் மட்டுமே அவரது ஒவ்வொரு பிள்ளைகளுக்கு சேரும்.

உண்மை #4

உண்மை #4

1977-ம் ஆண்டு பில் கேட்ஸ் சிகப்பு விளக்கை தாண்டி சென்றதற்கும், லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஒட்டியதற்கும் நியூ மெக்ஸிகோ பகுதியில் கைது செய்யப்பட்டார்.

உண்மை #5

உண்மை #5

2004-ம் ஆண்டு, ஈ-மெயில் ஸ்பாம்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் முற்றிலுமாக ஒழிந்துவிடும் என கணித்தார் பில் கேட்ஸ்.

உண்மை #6

உண்மை #6

ஆபிரகாம் லிங்கன், வால்ட் டிஸ்னி, பில் கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க், ஹென்றி ஃபோர்டு, தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் இவர்கள் அனைவரும் கல்லூரி பட்டம் பெறாதவர்கள்.

உண்மை #7

உண்மை #7

பில் கேட்ஸ் மருத்துவ உலகிற்கு உதவியதன் காரணமாக, அதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளின் காரணமாக இதுவரை 6 மில்லியன் மக்களின் உயிர்கள் காக்கப்பட்டிருக்கிறது.

உண்மை #8

உண்மை #8

இதுவரை $28 பில்லியன் டாலர்கள் வரை நன்கொடையாக வழங்கியுள்ளார் பில் கேட்ஸ்.

உண்மை #9

உண்மை #9

பில் கேட்ஸ் 2035-ம் ஆண்டு வாக்கில் உலகில் ஏழை நாடு என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்றும் கணித்துள்ளார்.

உண்மை #10

உண்மை #10

ஒரு நாளுக்கு ஒரு மில்லியன் டாலர் என்ற கணக்கில் செலவு செய்தாலும் கூட பில் கேட்ஸ் மொத்த சொத்தையும் செலவு செய்ய 218 ஆண்டுகள் ஆகும்.

உண்மை #11

உண்மை #11

டெட் டாக் (TED Talk) நிகழ்ச்சியில் மலேரியா பற்றி உரையாட வந்திருந்த போது, பில் கேட்ஸ் ஓர் ஜாரில் கொசுக்கள் கொண்டுவந்த அந்த அரங்கில் திறந்துவிட்டார். இதனால், அதன் தாக்கத்தை பற்றி அவர்கள் புரிந்துக் கொள்ள முடியும் என செய்தார்.

உண்மை #12

உண்மை #12

ஐநாவின் உலக சுகாதார அமைப்பு செய்யும் செலவுகளை விட, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்திற்காக பில் கேட்ஸ் ஃபௌண்டேஷன் செலவு செய்கிறது.

உண்மை #13

உண்மை #13

பள்ளியின் ப்ரோக்ராம் கோடுகளை மாற்றியதால், பில் கேட்ஸ் மாணவிகள் அதிகம் இருக்கும் வகுப்பில் அமர்த்தப்பட்டார்.

உண்மை #14

உண்மை #14

பில் கேட்ஸ் எப்போதும் ஒன்று கூறுவார், சோம்பேறியான ஊழியர்களிடம் தான் கடினமான வேலைகளை தரவேண்டும். ஏனெனில், அவர்கள் தான் அதை சீக்கிரமாக செய்து முடிப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Interesting Facts about Bill Gates

In 2004, Gates predicted that the problem of spam email would be gone within two years, read more interesting facts about Bill Gates here.
Story first published: Tuesday, July 12, 2016, 16:50 [IST]
Subscribe Newsletter