For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணத்தை மாற்றி புரட்சி செய்கிறேன் என தட்டுத்தடுமாறி சரிவை கண்ட நாடுகள்!

இந்தியாவை போல பணத்தை மாற்றி புரட்சி செய்ய முயற்சித்த நாடுகள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

|

பல வருடங்களாக தண்ணீர் இல்லாமல் குடங்களை தூக்கிக் கொண்டு அங்கும், இங்கும் ஓடிக் கொண்டிருந்த மக்கள். கடந்த சில வாரங்களாக பணம் இல்லாமல் கார்டுகளையும், அத்தாட்சிகளையும் எடுத்துக் கொண்டு பணத்திற்காக வங்கிகளை தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

Here's A List Of Countries That Have Tried Demonetisation Before India

மோடி கொண்டுவந்த இந்த முடிவு பல மேல்தட்டு, நடுத்தர மக்கள் ஆதரவளித்தாலும். இந்த முடிவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது ஏழை எளிய மக்கள் தான். அன்றாட செலவிற்கே பல இடங்களில் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், இது நமது உலகுக்கு புதியதல்ல. ஏற்கனவே பல நாடுகள் இப்படி ஒரு முடிவை எடுத்து பொருளாதார வீழ்ச்சியை கண்டுள்ளனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நைஜீரியா!

நைஜீரியா!

முகமது புகாரி ஆட்சியின் போது கடந்த 1984-ல் பழைய நோட்டுகளை தடை செய்தது நைஜீரிய அரசு. ஆனால், நைஜீரிய அரசின் பொருளாதாரத்தில் பெரிய தாக்கம் உண்டானது.

Image Credit : facts.ng

கானா!

கானா!

1982-ல் கானா கருப்பு சந்தையை வெளுக்க மாற்றத்தை கொண்டுவந்தது. ஆனால், இதனால் இந்நாட்டின் பொருளாதாரம் தான் அடி வாங்கியது.

Image Credit : newsarchives

பாகிஸ்தான்!

பாகிஸ்தான்!

வருகிற டிசம்பர் மாதம் பாகிஸ்த்தான் பழைய நோட்டுகளை மாற்றி, புதிய டிசைனில் நோட்டுகளை வெளியிடவுள்ளது. இதற்காக ஒன்றரை வருடத்திற்கு முன்னரே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டன. பொதுமக்களும் பணத்தை மாற்றிக் கொள்ள முடிந்தது.

Image Credit : quora

வடக்கொரியா!

வடக்கொரியா!

2010-ல் வடக்கொரியா பணத்தை மாற்றிய போது மக்கள் சாப்பிட உணவு இல்லாமல் அல்லாடிய நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கருப்பு சந்தையை ஒழிக்க தான் கிம்-ஜாங் II இம்முடிவை எடுத்தார்.

Image Credit : wikipedia

சோவியத் யூனியன்!

சோவியத் யூனியன்!

கருப்பு சந்தையை ஒழிக்க மிகைல் கோர்பச்சேவ் பெரிய மதிப்பிலான பணத்தை திரும்ப பெற உத்தரவிட்டார். ஆனால், இந்த முடிவை ஆதரிக்காத மக்கள், ஆட்சியை கவிழ்த்து. சோவியத் பிரிவு உண்டாக்கினர்.

Image Credit : worldbanknotes

ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா!

பிளாஸ்டிக்கில் பணத்தை உண்டாக்கிய முதல் நாடு ஆஸ்திரேலியா. காகிதத்தில் இருந்து பிளாஸ்டிக்காக மட்டும் தான் மாற்றம் இருந்ததே தவிர, வேறு எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

Image Credit :quora

மியான்மர்!

மியான்மர்!

1987-ல் மியான்மர் கருப்பு சந்தையை ஒழிக்க, 80% பணத்தை செல்லாமல் போக செய்தது. இதனால் ஏற்பட்ட பெரியளவிலான போராட்டங்களால் பல மக்கள் உயிரிழந்தனர்.

Image Credit :myanmartravel

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Here's A List Of Countries That Have Tried Demonetisation Before India

Here's A List Of Countries That Have Tried Demonetisation Before India
Desktop Bottom Promotion