ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கிய பனாமா கால்வாய் பற்றிய திகைக்க வைக்கும் உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

வட அமெரிக்கா, தென் அமெரிக்கா இடையே பசுபிக் பெருங்கடல் மற்றும் அட்லான்டிக் பெருங்கடலை இணைக்கும் மாபெரும் கால்வாய் தான் பனாமா கால்வாய். தென் அமெரிக்காவை சுற்றி நெடுங்காலம் எடுத்து செல்ல வேண்டியிருந்த போது பயண நேரம் மற்றும் பொருளாதார அதிக விரயம் ஆனது.

இதை குறைக்கவே இந்த கால்வாய் பணி மிக முக்கியமாக இருந்தது. இதன் கட்டுமானம் பல உயிர்களை பலிவாங்கியுள்ளது. தோல்விகளை கடந்து நூற்றாண்டுகள் கடந்து தான் பனாமா நினைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

15-ம் நூற்றாண்டில் ஸ்பானிஷ் கடற்பயணி வாஸ்கோ நூனஸ் முதல் முறையாக இரு அமெரிக்க கண்டங்களுக்கு நடுவே பசுபிக், அட்லாண்டிக் கடலை பிரித்து சிறிய அளவில் ஒரு கால்வாய் போவதை கண்டார். அது தான் பனாமா.

Image Source

உண்மை #2

உண்மை #2

1534-ல் ரோம பேரரசர் ஐந்தாம் சார்லஸ் அவ்விடத்தில் கப்பல் செல்லும் வகையில் கால்வாய் கட்ட முடியுமா ஆய்வு செய்ய கூறினார். ஆய்வு முடிவுகளில் அவ்விடத்தில் கப்பல் செல்லும் அளவிற்கு கால்வாய் கட்டுவது இன்றியமையாத காரியம் என தெரிவிக்கப்பட்டது.

Image Source

உண்மை #3

உண்மை #3

ஈபிள் டவர் மற்றும் சூயிஸ் கால்வாய் கட்டியவர் பனாமா கால்வாய் காட்டுமான முயற்சியில் தோல்வியுற்றார். 1880-களிலேயே கால்வாய் கட்ட முயற்சிகள் எடுத்து, சரியான திட்டங்கள் இல்லாமல் தோல்வியில் முடிந்தது.

உண்மை #4

உண்மை #4

சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால், ட்ராபிக்கல் நோய் காரணமாக பனாமா கால்வாய் கட்டுமான பணியில் ஈடுப்பட்ட பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உண்மை #5

உண்மை #5

முதலில் அமெரிக்கா பனாமாவில் இல்லாமல், நிகரகுவாவில் கால்வாய் கட்டலாம் என்று தான் திட்டமிட்டது. ஆனால், நிகரகுவா பகுதியில் எரிமலை அபாயங்கள் இருப்பதால் பின்னர் நிபுணர்களின் அறிவுரைக்கு ஏற்ப முயற்சியை கைவிட்டனர்.

Image Source

உண்மை #6

உண்மை #6

பிறகு மீண்டும் 1900களில் ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாய் கட்டுமான பணியைத் தொடங்கி 1914 -ல் பனாமா கால்வாய் திறக்கப்பட்டது. பிரெஞ்சு, ஐக்கிய அமெரிக்க முயற்சிகளில் மொத்தமாக 27,500 தொழிலாளர் இறந்ததாக மதிப்பிடப்பட்டது.

உண்மை #7

உண்மை #7

பனாமா கால்வாய் 78 கிமீ நீளமும் 33.5 மீட்டர் அகலமும் உடையது. பனாமா கால்வாய் 1999 -ல் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வருடமும் ஏறத்தாழ 13,000 - 14,000 வரையிலான எண்ணிக்கையில் கப்பல்கள் பனாமா கால்வாயை கடந்து செல்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Fascinating Facts About the Panama Canal

Fascinating Facts About the Panama Canal, check it out here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter