நாசாவையே தூக்கி சாப்பிடும் இஸ்ரோ - வியப்பூட்டும் தகவல்கள்!

Posted By:
Subscribe to Boldsky

விண்வெளி தொழில் நூட்பங்களையும், பயன்பாடுகளையும் உருவாக்குவதன் மூலம் நாட்டுக்கு தேவையான அனைத்து பணிகளையும் நிறைவேற்றுவது தான் இஸ்ரோவின் குறிக்கோள் ஆகும். 1975 ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டா இஸ்ரோவால் உருவாக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தில் இருந்து ஏவப்பட்டது.

ஒவ்வொரு இந்தியனையும் பெருமையடைய வைக்கும், இந்திய ராணுவத்தை பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்!!!

கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரோ இந்திய செயற்கை கோள்கள் மட்டுமின்றி, பிற நாடுகளின் செயற்கை கோள்களையும் ஏவ உதவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக பல சாதனைகள் செய்த இஸ்ரோ, விண்வெளி ஆராய்ச்சியில் உலகளவில் ஆறாவது இடத்தில் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தகவல் #1

தகவல் #1

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கடந்த 1969-ம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தன்று டாக்டர் விக்ரம் சாராபாய் அவர்களால் உருவாக்கப்பட்டது.

 தகவல் #2

தகவல் #2

எஸ்.எல்.வி-3 தான் இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் ஆகும். மற்றும் இந்த ப்ராஜக்ட்-ன் இயக்குனராக பணியாற்றியவர் நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள்.

 தகவல் #3

தகவல் #3

நாசாவின் ஓராண்டு பட்ஜெட்டில் அரைவாசி பங்கு அளவு தான் இஸ்ரோ-வின் நாற்பது ஆண்டு செலவு ஆகும்.

 தகவல் #4

தகவல் #4

இந்திய மத்திய அரசின் ஓராண்டு பட்ஜெட்டில் இஸ்ரோ-விற்கு ஒதுக்கப்படும் சதவீதம் 0.34% தான்.

 தகவல் #5

தகவல் #5

இஸ்ரோ புவன் என்ற செயற்கைக் கோளை உருவாக்கியுள்ளது. இது கூகுள் எர்த்தை போன்ற 3டி புகைப்பட கருவி சார்ந்தது ஆகும்.

 தகவல் #6

தகவல் #6

இந்தியாவில் மொத்தம் 13 இஸ்ரோ மையங்கள் நாடு முழுவதும் இருக்கின்றன.

 தகவல் #7

தகவல் #7

கடந்த வருடம் மட்டும் இஸ்ரோ மூலம் இந்தியாவிற்கு 14 பில்லியன் ரூபாய் வருமானம் வந்துள்ளது.

 தகவல் #8

தகவல் #8

இஸ்ரோ மார்ஸ் மிஷனில் செலவு செய்தது வெறும் 450 கோடி தான். இது தான் இருப்பதிலேயே மிக குறைவான செலவில் உருவாக்கப்பட்ட மார்ஸ் மிஷனாகும். ஏறத்தாழ கிலோமீட்டர்-க்கு 12 ரூபாய் என்ற செலவில் இதை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

 தகவல் #9

தகவல் #9

மார்ஸ் மிஷனில் முதல் முறையிலேயே வெற்றி கண்ட முதல் நாடு இந்தியா (இஸ்ரோ) தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 தகவல் #10

தகவல் #10

உலகில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையங்களிலேயே அதிக திருமணமாகாத நபர்கள் பணிபுரியும் ஆராய்ச்சி மையம் ஐ,எஸ்.ஆர்.ஓ தான்.

 தகவல் #11

தகவல் #11

மார்ஸ் மிஷனுக்கு அமெரிக்க போன்ற நாடுகளிடம் இருந்து பொறியியல் உதவி நாடலாம் என்ற போது நமது ஆராய்ச்சியாளர்கள் அதற்கு மறுத்து, அனைத்து வேலைப்பாடுகளையும் சொந்தமாகவே செய்து வெற்றிக் கண்டுள்ளனர்.

 தகவல் #12

தகவல் #12

உலகிலேயே ஆறு நாடுகள் மட்டும் தான் சொந்த நாட்டில் இருந்து செயற்கைக்கோள்கள் ஏவ திறன் கொண்டுள்ளது. அதில் இந்தியாவும் ஒன்று என்பது பெருமைக்குரிய விஷயம்.

 தகவல் #13

தகவல் #13

இஸ்ரோ இதுவரை தொடர்ந்து வெற்றிகரமாக 23 பி.எஸ்.எல்.வி செயற்கைகோள்களை ஏவியுள்ளது.

 தகவல் #14

தகவல் #14

இஸ்ரோ நமது நாட்டின் சொந்த செயற்கை கோள்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளின் 29 செயற்கை கோள்களையும் ஏவியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Every Indian Must Know These Proud Facts About ISRO

Every Indian Must Know These Proud Facts About ISRO