இந்தியாவில் பலத்த சேதம் உண்டாக்கிய சமீபத்திய சூறாவளிகள்!

Posted By:
Subscribe to Boldsky

நாம் இயற்கையை அழிக்க பல காலம் எடுத்துக் கொள்கிறோம். ஆனால், அதற்கு பதிலாக மனிதர்களை பழிவாங்க இயற்கைக்கு ஓரிரு நொடிகள் போதுமானதாய் இருக்கிறது.

சுனாமி, பூகம்பம், எரிமலை வெடிப்பு, சூறாவளி என இயற்கை சீற்றங்கள் ஒரு நிமிடத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தில் இருந்து மீண்டு வர நமக்கு பல காலம் எடுத்துக் கொள்கிறது.

இதோ, சமீப காலத்தில் இந்தியாவை பதம் பார்த்த ஒருசில சூறாவளி காற்றுகள் பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வர்தா (2016)

வர்தா (2016)

சமீபத்தில் பேய் காட்டு காட்டிவிட்டு சென்ற புயல் வர்தா. எப்போதும் பெண்களின் பெயரையே வைப்பவர்கள், ஆண் பெயர் சாயலில் வைத்தனர். அதன் தாக்கம் இதுவரை காணாத வண்ணம் இருந்தது.

இலட்சக்கணக்கான மரங்கள், ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்தன. பெருமளவில் பொருட்சேதம் உண்டாகியிருக்கிறது என அரசு தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

நடா (2016)

நடா (2016)

வங்காள விரிகுடாவில் துவங்கி தமிழ்நாடு, கேரளாவை கடந்து சென்றது. பெருமளவில் தாக்கம் உண்டாகும் என எதிர்பார்க்கப்பட்டு பிறகு சிறியளவிலான மழை மட்டும் தான் பெய்தது. மீனவர்களுக்கும் எந்தவிதமான பதிப்புகளும் ஏற்படவில்லை.

கியான்ட் (2016)

கியான்ட் (2016)

கியான்ட் எனும் இந்த முதலை சூறாவளியும் வங்காள விரிகுடாவில் தான் உருவானது. இதன் தாக்கமாக ஒடிசா, ஆந்திரா கடலோர பகுதிகளில் பலமான காற்று வீசியது. ஆனால், எதிர்பார்த்த அளவில் சேதங்கள் ஏதும் நடக்கவில்லை.

ரோனு (2016)

ரோனு (2016)

இவ்வருடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய புயல் ரோனு. இது இலங்கையில் ஆரம்பித்தது. இலங்கை, வங்காள தேசத்தில் ஏறத்தாழ 200-க்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கியது ரோனு. இதன் தாக்கத்தால் தென்னிந்தியாவில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது.

குஜராத் (2015)

குஜராத் (2015)

டீப் டிப்ரஷன் எ.ஆர்.பி 02 என அழைக்கப்பட்ட இந்த சூறாவளியால் 80-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மேலும், எண்ணற்ற பயிர்கள், கால்நடைகள் இதன் தாக்கத்தால் பதிக்கப்பட்டன.இந்த புயல் காற்றால் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது.

ஹூட்ஹூட் (2014)

ஹூட்ஹூட் (2014)

கிழக்கு இந்தியா மற்றும் நேபாளத்தில் மிகுந்த பாதிப்புகளை உண்டாக்கியது இந்த புயல். பலத்த காற்று, வெள்ளம் என இந்த சூறாவளி காற்றால் 124 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் தங்களுடைய சொத்துக்களையும், உடைமைகளையும் இழந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Cyclones That Hit India Recently

India has faced 5 cyclones in the recent times and the damage is severe. Check on to know more about the disasters caused.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter