2016-ல் நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான சவால்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

இந்தாண்டு, நமது சொந்த வாழ்க்கையில் இருந்து தமிழகம், இந்தியா, உலகம் என பல கோணங்களில் நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் நிறைய இருக்கின்றன. இந்த சவால்களின் மூலம் நாம் அழிவை சந்திக்கும் வாய்ப்புகளும் இருக்கின்றன. வல்லரசாகும் வாய்ப்புகளும் இருக்கின்றன.

நாம் இயற்கைக்கு செய்த துரோகம், இயற்கை நமக்கு புகட்டிய பாடம் போன்றவை 2015-ல் நாம் மறக்க முடியாதவை. இது அரசியல் ரீதியாகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மறதி என்பதை நாம் மறக்க வேண்டும். இந்த மறதியினால் தான், மனிதத்தில் இருந்து, உறவுகளின் உணர்ச்சிகள் வரை பலவற்றை நாம் இழந்துக் கொண்டிருக்கிறோம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மறதி

மறதி

ஒரு கொசு கடித்ததினால், நேற்று நமக்கு நடந்த அநீதியை முற்றிலுமாக மறந்துவிடுவது எவ்வளவு பெரிய நோய். சென்னை மழையின் சோகத்தை, ஓங்கி வளர்ந்த மனிதத்தை, இளைஞர்கள் எழுச்சியை பீப் பாடலுக்கு இரையாக்கி விட்டோமே நாம். எனவே, இந்த மறதியில் இருந்து நாம் வெளிவர வேண்டும்.

தேர்தல்

தேர்தல்

இந்த வருடத்தில் நாம் முக்கியமாக எதிர்கொள்ள வேண்டியவற்றில் முதலில் இருப்பது தமிழக தேர்தல் தான். சீசா போல, மாற்றி, மாற்றி ஏற்றி இறக்குவதை நிறுத்தி, உண்மையான, நேர்மையான ஓர் நபரை தேர்ந்தெடுக்க வேண்டிய சவால் உங்கள் கையில் இருக்கிறது, தேர்ந்தெடுக்க தான் வேண்டும் என்றில்லை. நீங்களே கூட தேர்வாகலாம், யோசியுங்கள்!!!

பாதுகாப்பு

பாதுகாப்பு

2016 நமக்கு கற்பித்து சென்றுள்ள பாடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். முக்கியமாக இயற்கையிடம் இருந்து. இனிமேலும் குளம், ஆறு, காடுகளை அழித்து வந்தால் உலகம் அழிகிறதோ இல்லையோ, மனித இனம் அழிந்துவிடும். ஏற்கனவே, துருவங்கள் மற்றும் கிரீன்லாந்து பனிப்பாறைகள் உருகி வருவதால் கடல் மட்டம் அதிகரிக்கும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது

அழிவு

அழிவு

நோஸ்ராடாமஸ், இவர் ஒரு பிரெஞ்சு ஜோதிட ஆலோசகர், எழுத்தாளர் ஆவார். இவர் எழுதி வைத்த குறிப்புகள் பலவன உண்மையான சம்பவங்களாக, நிகழ்வாக நடந்துள்ளன. இரட்டைக் கோபுரம் சதிவேலை குறித்து கூட இவர் முன்கூட்டியே கூறியிருந்ததாக சில நாட்கள் செய்திகள் வெளியிட்டன. இவரது குறிப்பில் 2016-ம் ஆண்டு இயற்கை பேரழிவுகள் ஏற்படும், கடல் சீற்றம் மற்றும் காட்டுத்தீ போன்றவையின் காரணமாக பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடைசி அதிபரா ஒபாமா?

கடைசி அதிபரா ஒபாமா?

மேலும் நோஸ்ராடாமஸ் குறிப்பில் இருக்கும் தகவலை வைத்து பார்க்கையில் ஒபாமா தான் அமெரிக்காவின் கடைசி அதிபர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்களால் அமெரிக்கா அழிவை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகுமோ என்ற அச்சமும் இருக்கிறது.

மூன்றாம் உலக போர்

மூன்றாம் உலக போர்

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் எழுச்சி மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் பட்சத்தில் மூன்றாம் உலகப்போர் எழும் வாய்ப்புகளும் இந்த ஆண்டில் இருக்கிறது. இந்த போரின் போது நட்பு நாடுகளாக சில நாடுகள் கைக்கோர்த்து நின்றால் அப்பாவி மக்களின் உயிர்கள் தான் லட்சங்களில் இறக்கப் போகிறது.

இந்தியா வல்லரசு ஆகுமா ??

இந்தியா வல்லரசு ஆகுமா ??

இந்தியா 2020-ல் வல்லரசாக வேண்டும் எனில், இந்த வருடத்தையும் சேர்த்து நம் கையில் இருக்கும் ஐந்து வருடங்களை சரியாக பயன்படுத்தி உழைத்தால் மட்டுமே வல்லரசாக முடியும். இதற்கான திட்டங்களை அரசு தான் முழுவீச்சில் தொடங்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Challenges You Have To Face In 2016

Challenges You Have To Face In 2016
Please Wait while comments are loading...
Subscribe Newsletter