For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

118 வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருக்கும் ஆலமரம் - ஏன்? எதற்காக?

விசித்திரமான காரணத்தால் பிரிட்டிஷ் அதிகாரி ஒருவரின் உத்தரவால் 118 ஆண்டுகளாக ஒரு ஆலமரம் சிறைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

|

வடிவேலு ஒரு படத்தில் கிணத்தை காணவில்லை என் புகார் அளித்த சம்பவத்திற்கு நேர் எதிர் மாறாக அமைந்திருக்கிறது இந்த ஆலமர கைது சம்பவம்.

நமது உலகில் விசித்திரங்களுக்கு பஞ்சம் இல்லை தான். அதற்காக ஆலமரத்தை நூறாண்டுகளுக்கு மேலாக சிறைப்பிடித்து வைத்திருப்பது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லண்டி கோட்டல்!

லண்டி கோட்டல்!

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இருக்கும் மாவட்டம் லண்டி கோட்டல். லண்டி கோட்டலில் இருக்கும் ஒரு இராணுவ முகாமில் தான் ஒரு ஆலமரம் நூறாண்டுகளுக்கு மேலாக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

விசித்திரம்!

விசித்திரம்!

அப்படி என்ன காரணத்திற்காக இந்த மரத்தை சிறைப்பிடித்து வைத்திருக்கின்றனர் என்று விசாரித்தால், அவர்கள் கூறும் தகவல் விசித்திரமாக இருக்கிறது. மேலும், இவர்கள் கூறும் கதையில் துளி அளவு கூட லாஜிக் இல்லை.

Image Courtesy: Dawn

பிரிட்டிஷ் அதிகாரி!

பிரிட்டிஷ் அதிகாரி!

பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் ஜேம்ஸ் ஸ்குவிட் என்பவர். குடிபோதையில் இருந்த இவர் மரம் தன்னை நோக்கி வந்ததாக கூறியுள்ளார். இதனால் அச்சமடைந்த அதிகாரி. அந்த மரத்திற்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என அதை கைதும் செய்துள்ளார்.

இன்றளவும்!

இன்றளவும்!

பிரிட்டிஷ் ஆட்சி முடிந்து பல காலம் ஆனபிறகும் கூட. இன்றளவும் அந்த மரம் சங்கலிகளால் கட்டுப்பட்டு தான் வைத்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் காலத்தில், இந்த மரத்தை ஆணையை மீறி யாரேனும் செயற்பட்டால், அவர்களுக்கும் இதே தண்டனை என பிரிட்டிஷ் அதிகாரி கண்டித்தும் இருந்தாராம்.

Image Source :samaa.tv

சுற்றுலா இடம்!

சுற்றுலா இடம்!

விசித்திரமான காரணத்தால் இந்த மரத்தை கைது செய்த காரணத்தால். இப்போது இந்த இடம் இரு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக மாறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source: tribune.com.pk

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A Banyan Tree Is Under Arrest In Pakistan For 118 Years

A Banyan Tree Is Under Arrest In Pakistan For 118 Years
Desktop Bottom Promotion