16 வயது டீனேஜ் தாய், பெற்ற குழந்தையை 2-வது மாடியில் இருந்து வீசி கொன்றார்!

Posted By:
Subscribe to Boldsky

எதை நோக்கி இந்த உலகம் சென்றுக் கொண்டிருக்கிறது? 16 வயதில்ஒரு பெண் கருத்தரித்த விஷயமே அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அதிலும், அவர் பெற்ற குழந்தையை ஒருசில நிமிடத்தில் கொஞ்சமும் இறக்கம் இன்றி இரண்டாவது மாடியில் இருந்து வீசி கொன்றிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

அமெரிக்காவின் ஒமாஹா, நெப்ராஸ்கா பகுதியை சேர்ந்த 16 வயது டீனேஜ் பெண் பிறந்த குழந்தையை இரண்டாவது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக தூக்கி வீசி கொன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அந்தோனியா லோபஸ்!

அந்தோனியா லோபஸ்!

அந்த டீனேஜ் தாயின் பெயர் அந்தோனியா லோபஸ். குழந்தை துன்புறுத்தி கொலை செய்ததன் பேரில் இவரை டக்லஸ் கவுண்டி யூத் சென்டரில் வைத்துள்ளனர்.

போலீஸ் ரிபோர்ட்!

போலீஸ் ரிபோர்ட்!

அப்பகுதி போலீசார் அந்தோனியா லோபஸ் சிறு பருவத்திலேயே முன்னரே கருத்தரித்து, தனது படுக்கை அறையிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். விடியற்காலை 3.40 மணியளவில் பிறந்த குழந்தையை அவர் ஜன்னல் வழியாக வீசியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் பதிவு!

ஃபேஸ்புக் பதிவு!

பச்சிளம் குழந்தையை இரண்டாவது மாடியில் இருந்து வீசி கொன்ற பிறகு, அதன் பிறகு முகநூலில் யார் எனக்கு ஒரு பெரிய உதவி செய்ய முடியும்? யாரிடம் கார் இருக்கிறது என பதிவு செய்துள்ளார்.

அந்தோனியா லோபஸ்-ன் அம்மா!

அந்தோனியா லோபஸ்-ன் அம்மா!

அந்தோனியா லோபஸ்-ன் தாய் அரைமணி நேரம் கழித்து தான் இந்த சம்பவத்தை அறிந்துள்ளார். உடனே அவர் 911 அவசர உதவிக்கு கால் செய்து வரவைத்துள்ளார். ஆனால், மருத்துவமனைக்கு எடுத்து சென்றதும், மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டது என கூறிவிட்டனர்.

பிரேத பரிசோதனை!

பிரேத பரிசோதனை!

போலீசார் பிரேத பரிசோதனை ரிபோர்ட் கிடைக்க ஒருசில நாட்கள் ஆகும் என தெரிவித்துள்ளனர்.

16 வயதில்ஒரு பெண் கருத்தரித்த விஷயமே அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அதிலும், அவர் பெற்ற குழந்தையை ஒருசில நிமிடத்தில் கொஞ்சமும் இறக்கம் இன்றி இரண்டாவது மாடியில் இருந்து வீசி கொன்றிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

16-Year-Old Mother Charged with Murder

16-Year-Old Mother Charged with Murder
Story first published: Thursday, October 6, 2016, 17:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter