இந்தியாவில் மக்கள் ஏன் மரங்களை வழிபடுகின்றனர் என்று தெரியுமா?

Posted By: Ashok CR
Subscribe to Boldsky

பல்வேறு தரப்பட்ட பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை கொண்டுள்ள நாடு தான் இந்தியா. ஆனாலும் கூட சில வகையான சடங்குகளை இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஒரே மாதிரி பின்பற்றி வருகின்றனர். அதற்கு காரணம் இயற்கை அன்னையின் மீது இந்திய பண்பாடு கொண்டுள்ள பெருமதிப்பும், மரியாதையுமே. அதில் ஒரு மரபு தான் மரங்களை வழிபடுவது. மரங்களை வழிபடும் மரபு தொடர்பாக பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் புகழ்பெற்ற பல கதைகளைப் பற்றி பார்க்கலாம்.

சிவலிங்கத்திற்கும் வாடிகன் நகரத்திற்கும் உள்ள அதிர்ச்சியூட்டும் தொடர்பு!!!

புராணங்களின் அடிப்படையில் தான் மரங்களை வழிபடும் மரபு நிலவுகிறது. அதில் சில மதம் சார்ந்த நம்பிக்கைகள் ஆகும். இதில் நம்பிக்கை இல்லாதவர்களும் கூட மரங்கள் மீது மரியாதையயும், ரசனையையும் கொண்டுள்ளார்கள். அதற்கு காரணம் பழங்கள், பூக்கள், நற்பதமான ஆக்சிஜென் மற்றும் நிழல் என மரங்களிடம் இருந்து நமக்கு கிடைக்கும் எண்ணிலடங்கா பயன்கள்.

திருமணங்களில் ஜாதக பொருத்தங்களின் முக்கியத்துவம்!

இந்து மத புராணத்தின் படி, இந்து மதத்தில் மரங்களை வழிபட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. மோட்சம், அமரத்துவம், கருவுறும் தன்மை மற்றும் ஆசைகளை நிறைவேற்றுதல் போன்றவைகளாக இருக்கலாம். இவையனைத்தும் பல்வேறு சடங்குகளுடன் ஒன்றுக்கொன்று தொடர்பில் உள்ளது. இவற்றை நாம் மிகுந்த ஆன்மீக உணர்வுடன் செயல்படுத்துகிறோம். இந்து மத புராணத்தின் படி, ஆலமரங்கள் மற்றும் அரச மரங்களை தான் நாம் அதிகமாக வழிபடுகிறோம்.

இந்து மத வழக்கங்களின் பின்னணியில் உள்ள அருமையான அறிவியல் காரணங்கள்!!!

சரி, இந்தியாவில் மர வழிபாடு ஏன் பரவலாக பின்பற்றப்படுகிறது என்பதைப் பற்றி பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விஷ்ணு பகவானை வழிபடுதல்

விஷ்ணு பகவானை வழிபடுதல்

ஒரு முறை அசுரர்கள் கடவுள்களின் மீது தாக்குதல் நடத்தி, அவர்களை வென்ற போது, அரச மரத்திற்குள் விஷ்ணு பகவான் மறைந்து கொண்டதாக பிரம்ம புராணமும், பத்ம புராணமும் கூறுகின்றன. அதனால் அரச மரத்தை வழிபடுவது என்பது, படம் இல்லாமலோ அல்லது கோவிலுக்கு செல்லாமலோ விஷ்ணு பகவானை வழிபடுவது போன்றது என நம்பப்படுகிறது.

மும்மூர்த்தி கருத்துப்படிவம்

மும்மூர்த்தி கருத்துப்படிவம்

புனிதமான மரங்கள் என்பது பிரம்மன், விஷ்ணு மற்றும் சிவபெருமானின் ஒற்றுமையை குறிக்கிறது என்று சிலர் நம்புகின்றனர். அதனால் இந்து புராணத்தின் நம்பிக்கையில் பார்க்கப்படும் மரங்களை வழிபடுவதால் மும்மூர்த்திகளின் ஆசியும், ஆன்மீக ஞானமும் கிடைக்கும்.

மூன்று லோகத்தின் கருத்துப்படிவம்

மூன்று லோகத்தின் கருத்துப்படிவம்

மரங்களின் இயற்பியல் சார்ந்த அமைப்பினால் அதற்கு வானம், பூமி மற்றும் பாதாளம் என மூன்று லோகங்களுடன் இணைப்பு உள்ளது என கருதப்படுகிறது. மரங்களுக்கு நாம் செலுத்தும் காணிக்கை இந்த மூன்று லோகங்களுக்கும் செல்லும் என நம்பப்படுகிறது.

பஞ்சவிருக்ஷம்

பஞ்சவிருக்ஷம்

இந்திரனின் தோட்டத்தில் உள்ள ஐந்து மரங்களான பஞ்சவிருக்ஷம் என்பது - மந்தாரை (எரித்ரினாஸ்ரிக்டா), பாரிஜாதம் (நிக்டாண்டெஸ் ஆர்பர்-ட்ரிஸ்டிஸ்), சம்டனகா, ஹரிச்சந்தனா (சண்டலம் ஆல்பம்) மற்றும் கல்பவிருக்ஷம் (கல்படரு). இந்தியாவில் ஏன் மரங்கள் வழிபடுகிறது என்ற கேள்வி எழும் போது, இந்த மரங்களின் மூலம் மற்றும் வளர்ச்சியை குறிக்கும் புராணங்கள் சுட்டிக் காட்டப்படுகிறது.

துறவிகளுடனான தொடர்பு

துறவிகளுடனான தொடர்பு

வழிபடக்கூடிய சில மரங்கள் புனிதமாக பார்க்கப்படுவதற்கான காரணம், மிகப்பெரிய துறவிகளுடனான அவைகளின் தொடர்பே. ஆலமரத்தின் கிளைகளில் மார்கண்டேயன் மறைந்து கொண்டதால் இந்த மரம் புனிதமாக கருதப்படுகிறது. புத்தரின் பிறப்பு மற்றும் இறப்புடன் சாலா மரம் தொடர்பை கொண்டுள்ளதால் புத்த மதத்தினரால் அது புனிதமான மரமாக கருதப்படுகிறது.

நீடித்து நிலைக்கும் திருமண வாழ்க்கைக்கு

நீடித்து நிலைக்கும் திருமண வாழ்க்கைக்கு

நீடித்து நிலைக்கும் திருமண வாழ்க்கைக்காக, இந்தியாவில் சில பகுதிகளில் இளம் பெண்களை அரச மரத்துடன் திருமணம் செய்து வைப்பார்கள். இதனை நிறைவேற்ற, மரத்தின் தண்டில் நீண்ட கயிறு ஒன்று கட்டப்படும். அதனை 108 முறை சுற்றி வர வேண்டும். அதன் பின் இந்த மரத்தின் மீது சந்தனம் பூசப்பட்டு, மண் விளக்கு ஏற்றப்படும்.

கடவுளுக்கு காணிக்கை

கடவுளுக்கு காணிக்கை

குறிப்பிட்ட கடவுள்களை வணங்க அக்கடவுளுடன் தொடர்பில் உள்ள குறிப்பிட்ட மரத்தின் இலைகள், பூக்கள் அல்லது பழங்களை கடவுளுக்கு படைப்பதால், சில மரங்கள் புனிதமாக கருதப்படுகிறது. அதே நேரம், கடவுளுக்கு காணிக்கை செலுத்திட பயன்படுத்தக்கூடாத சில செடிகளும் இருக்கவே செய்கின்றன.

சுற்று சூழல் காரணங்கள் போக, மரங்கள் வைத்திருப்பது என்பது இந்திய பாரம்பரியம் மற்றும் பண்பாட்டில் முக்கிய பங்கை வகிக்கிறது. மனிதர்களை இயற்கை அன்னையுடன் இணைக்க இது ஒரு புனிதமான இணைப்பாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Why People Worship Trees In India

    Why do people worship trees in India? There are many stories regarding this tradition of worshiping trees. Know the reasons of this tradition.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more