உலகெங்கிலும் உள்ள சில வினோதமான உடலுறவு சார்ந்த சடங்குகள்!!

Posted By:
Subscribe to Boldsky

என்னதான் நாம் மார்ஸ் கிரகம் வரை சென்றுவிட்டோம் என்று மார்தட்டிக் கொண்டாலும். மரங்கள் சூழ்ந்துள்ள அடர்ந்த காட்டைவிட்டு வெளிவராத, வெளி உலகை அறியாத இனத்து மக்கள் நிறையவே இருக்கிறார்கள். அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப்பிய என அனைத்து கண்டங்களிலும் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

நீங்கள் பயன்படுத்தும் இந்த மருந்துகளின் விசித்திர பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இவர்கள் மத்தியில் இருக்கும் சடங்குகள் இன்றைய தலைமுறை மக்களுக்கு வினோதமாக தான் இருக்கும். ஆனால், காலம் காலமாக இவர்கள் பல சடங்குகளை கைவிடாமல் கடைபிடித்து வருகிறார்கள். இதில் உடலுறவு சார்ந்த சடங்குகள் தான் மிகவும் வினோதமானது. வேறு நபர்களுடன் மனைவியை பகிர்தல், சகோதரனுடன் பகிர்தல் என நிறைய சடங்குகள் இருக்கின்றன....

இந்திய மக்கள் விரும்பி சாப்பிடும் சில விசித்திர உணவுகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனைவிகளை பரிமாற்றம் செய்தால்

மனைவிகளை பரிமாற்றம் செய்தால்

வட அமெரிக்காவை சேர்ந்த ஆர்டிக் பகுதி, கிழக்கு சைபீரியா பகுதிகளில் இது ஒரு பொதுவான சடங்காக திகழ்கிறது. தீய சக்திகளை குழப்ப தங்களது மனைவிகளை வேறொருவருடன் பரிமாற்றம் செய்யும் சடங்கு இவ்விடங்களில் நடக்கிறது.

சகோதரனுடன் மனைவியை பகிர்தல்

சகோதரனுடன் மனைவியை பகிர்தல்

ஹிமாலயாவில் இருக்கும் விவசாயம் செய்து வரும் ஓர் சிறு மலைவாழ் பகுதியில் ஒரு மகனுக்கு மேல் இருக்கும் வீடுகளில் அனைத்து மகன்களுக்கும் ஒரே பெண்ணை திருமணம் செய்து வைக்கும் வினோத வழக்கம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தோனேசியா

இந்தோனேசியா

இந்தோனேசியாவில் பொன் - "Pon" என்ற விழா கொண்டாடப்படுகிறது. இங்கு எதிர்காலத்தில் அதிர்ஷ்டமாக அமைய மற்ற ஆண், பெண்ணுடன் கணவன் மனைவி உடலுறவு வைத்துக் கொள்வது ஓர் சடங்காக நடத்தப்படுகிறது.

மேற்கு ஆப்ரிக்கா

மேற்கு ஆப்ரிக்கா

மேற்கு ஆப்ரிக்காவில் வாழும் வோடாபி எனும் மலைவாழ் மக்கள் இனத்தில் வேறொருவரின் மனைவியை கடத்தி வருவது ஓர் சடங்காக இருந்து வருகிறது. இங்கு பெற்றோர்கள் செய்து வைக்கும் முதல் திருமணம் போக, ஜெரவோல் - "Gerewol" எனப்படும் ஓர் திருவிழாவின் போது ஆண்கள் அலங்காரம் செய்துக் கொண்டு மற்ற பெண்களை கவர்ந்து வருவது ஓர் சடங்காக நடந்து வருகிறது.

வடமேற்கு ஐரோப்பிய

வடமேற்கு ஐரோப்பிய

வடமேற்கு ஐரோப்பியாவில் பெற்றோர் முன்னிலையில் வயது வந்த ஆண் மற்றும் பெண் ஒரே அறையில் படுக்கையில் ஓர் இரவை கழிக்க வேண்டும் என்பது ஓர் சடங்காக இருக்கிறது. இந்த சடங்கின் போது ஆண், பெண் இருவரும் தனித்தனியாக துணியில் முழுதாக கட்டிவைக்க படுவார்கள். இது ஆசை பெருக மட்டுமே தவிர உடலுறவில் ஈடுபட அல்ல என்று கூறப்படுகிறது.

பப்புவா

பப்புவா

இந்தோனேசியாவில் இருக்கும் பப்புவா எனும் பழங்குடி மலைவாழ் இனத்தினர் மத்தியில் பதின் வயதுகளிலேயே ஆண், பெண், உடலுறவில் ஈடுபடலாம் என்ற சடங்கு இருக்கிறது. நினைத்துக் கொள்ளும் போதெல்லாம் உறவில் ஈடுபடலாம் என்றும் கூறப்படுகிறது. அனால், திருமணம் ஆகும் முன்னர் உணவை மட்டும் பகிர்ந்துக் கொள்ள கூடாது என்று கூறுகிறார்கள்.

கனநிஜா

கனநிஜா

ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஓர் பழங்குடியினர் இடையே கனநிஜா எனப்படும் ஓர் சடங்கு முறை இருக்கிறது. இதில் தங்கள் மனைவிகளை மற்றவருடன் பரிமாற்றம் செய்துக் கொள்வது வழக்கமாக வைத்துருக்கிறார்கள். இதை ஓர் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.

பெண்களே விரும்பி அழைத்தல்

பெண்களே விரும்பி அழைத்தல்

வடக்கு பௌகன்வில்லே எனும் இடத்தில் இளம் பெண்கள் மற்றும் மூத்தவர்கள் என நேரடியாக உடலுறவிற்கு அழைக்கும் வழக்கம் ஒன்று இருந்து வருகிறது. இது சாலமன் தீவுகளிலும் கூட பொதுவாக நடக்கும் வழக்கம் தான் என கூறப்படுகிறது.

படுக்கையை பகிர்தல்

படுக்கையை பகிர்தல்

நார்வே, ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து, போன்ற நாடுகளில் எதிர் பாலினத்தை சேர்ந்தவர்கள் தங்கள் படுக்கையை பகிர்ந்துக் கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது. இது உடலுறவில் ஈடுபட அல்ல, குளிரிலிருந்து தற்காத்துக் கொள்ள மட்டுமே என்று கூறப்படுகிறது.

கானா

கானா

கானாவில் கணவன் இழந்த பெண், அவளை சுத்தம் செய்துக் கொள்ள அன்றிரவு வேறு ஒரு தெரியாத நபருடன் இரவை கழிக்க வேண்டும் என்ற சடங்கு இருக்கிறதாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Image Courtesy

English summary

Weird Intercourse Rituals From Around The World

Here we have shared info about some weird Intercourse rituals from around the world, read here in tamil.
Subscribe Newsletter