இந்திய மக்கள் விரும்பி சாப்பிடும் சில விசித்திர உணவுகள்!!!

Posted By: Babu
Subscribe to Boldsky

உலகில் வாழும் மக்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் வேறுபாடுகள் நிச்சயம் இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரியான உணவுகளை சாப்பிடுவார்கள். அத்தகைய உணவுகளில் சில நம்மை மெய்சிலிர்க்க வைக்கக்கூடியவாறும் இருக்கும். அதற்கு வாழும் புவியியல் இடம் தான் முக்கிய காரணம்.

உலகின் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகள்....

உலகின் மற்ற பகுதிகளில் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் நம் இந்தியாவின் சில பகுதிகளில் ஒருசில விசித்திர உணவுகள் மக்களால் உண்ணப்படுகிறது. மேலும் அவை அப்பகுதிகளில் மிகவும் பிரபலமானதும் கூட.

நம்ப முடியாத சில விசித்திரமான உண்மைகள்!

இங்கு அப்படி இந்திய மக்களால் விரும்பி சாப்பிடப்படும் சில விசித்திர உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தவளை கால்கள்

தவளை கால்கள்

தவளையைக் கண்டால் தலைதெறிக்க ஓடுவோம். ஆனால் சிக்கிம் பகுதியில் தவளை கால்கள் மிகவும் பிரபலமான ஓர் உணவு. இப்பகுதியில் வாழும் மக்கள் தவளை கால்களை சுவையாக சமைத்து பண்டிகை காலங்களில் சாப்பிடுவார்களாம். உங்களுக்கு தவளை கால்களை சாப்பிட விருப்பம் இருந்தால், இப்பகுதிக்கு சென்று சுவைத்துப் பாருங்கள்.

கோரிஷா

கோரிஷா

கோரிஷா என்பது மூங்கில் தளிர்களை பச்சையாகவோ, ஊறுகாய் வடிவிலோ, அஸ்ஸாம் பகுதி மக்கள் சாப்பிடுவார்களாம். மேலும் இது அப்பகுதியில் மிகவும் பிரலமான ஓர் சைவ உணவும் கூட. மேலும் இதனை அசைவ உணவை தயாரிக்கும் போதும் சேர்ப்பார்களாம். மேலும் இதனை சமைக்கும் முறை வித்தியாசமாக இருந்தாலும், சுவையாக இருக்குமாம்.

அழுகிய உருளைக்கிழங்கு

அழுகிய உருளைக்கிழங்கு

அழுகிய உருளைக்கிழங்கை நாம் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் இந்தியாவின் சில பகுதியில் வாழும் மக்கள் அழுகிய உருளைக்கிழங்கை, மசாலாக்கள் சேர்த்து சமைத்து சாப்பிடுவார்களாம். (இதுக்கு பேர் தான் சாப்பாட வீணாக்காம சாப்பிடுறதோ?)

சுள்ளெறும்பு சட்னி

சுள்ளெறும்பு சட்னி

இந்தியாவில் சாப்பிடும் மற்றொரு விசித்திரமான உணவு தான் சுள்ளெறும்பு. பொதுவாக எறும்பு மொய்க்கும் இனிப்பு பண்டத்தை தூக்கி எறிந்துவிடுவோம் அல்லது சுத்தம் செய்து சாப்பிடுவோம். ஆனால் சத்தீஸ்கர் பகுதியில் உள்ள சுள்ளெறும்பு மற்றம் அதன் முட்டையைக் கொண்டு இனிப்பு பதார்த்தம் அல்லது சட்னி செய்து சாப்பிடுவார்களாம்.

சுறா மீன் குழம்பு

சுறா மீன் குழம்பு

கோவாவில் இந்த சுறா மீன் குழம்பு மிகவும் பிரபலமானது. இந்த சுறா மீன் குழம்பை சுவைக்கவே, உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்கள் இங்கு வருவார்களாம். உங்களுக்கும் ஆசை இருந்தால், கோவா சென்று சுவைத்து மகிழுங்கள்.

கருவாட்டுடன் சாம்பல்

கருவாட்டுடன் சாம்பல்

மேகாலயாவில் உள்ள கரோ மலைப் பகுதியில் வாழும் மக்கள் கருவாடு, சாம்பல் மற்றும் காய்கறிகளைக் கொண்டு குழம்பு போன்று செய்து சாப்பிடுவார்களாம். இதன் செய்முறை வித்தியாசமாக இருப்பதோடு, இதன் சுவையும் வித்தியாசமாக இருக்குமாம்.

நாய் இறைச்சி

நாய் இறைச்சி

இந்தியாவில் சாப்பிடப்படும் வித்தியாசமான உணவுகளில் ஒன்று தான் இது. நாகாலாந்து, மிஜோரம் போன்ற பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள் நாய் இறைச்சியை விரும்பி சாப்பிடுவார்களாம்.

கருப்பு அரிசி

கருப்பு அரிசி

அரிசியில் கருப்பு நிறத்தில் அரிசி இருந்தால், அதனை தூக்கி எறிவோம். ஆனால் மணிப்பூர் பகுதி மக்கள் வெள்ளை அரிசி சாதத்தை விட, கருப்பு அரிசி சாதத்தை தான் சாப்பிடுவார்களாம். மேலும் இந்த அரிசியானது சமைத்த பின் ஊதா நிறத்தில் மாறிவிடும். முக்கியமாக இது மிகவும் ஆரோக்கியமானதும் கூட.

பட்டுப்புழு

பட்டுப்புழு

இந்தியாவில் சாப்பிடப்படும் விசித்திரமான உணவுகளில் ஒன்று தான் பட்டுப்புழு. அதுவும் அஸ்ஸாம் பகுதியில் வாழும் மக்கள் பட்டுப்புழுவை சமைத்து சாப்பிடுவார்களாம். அதுவும் இந்த பட்டுப்புழுவை அறுவடை செய்து, அதனை கொதிக்கும் நீரில் போட்டு அதிலிருந்து கிடைக்கும் மூலப்பொருளான பட்டு நூலை எடுத்துவிட்டு, எஞ்சியுள்ள புழுவை சமைத்து சாப்பிடுவார்கள்.

Source

எருமையின் மண்ணீரல்

எருமையின் மண்ணீரல்

பூனேவில் எருமையின் மண்ணீரல் கொண்டு செய்யப்படும் ரெசிபியானது பண்டிகைக் காலங்களில் அப்பகுதி மக்களால் சமைத்து சாப்பிடப்படுமாம். மேலும் பூனேவில் உள்ள ஹோட்டல்களில் இந்த ரெசிபி கிடைக்குமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Weird Foods Indians Love To Eat

Here are some weird foods that Indians love to eat. These are the bizarrre foods that people want to eat. Take a look at the strange foods that people love to eat.