For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எவரெஸ்ட் சிகரம் பற்றி நீங்கள் அறிந்திராத உண்மைகள்!!!

By Srinivasan P M
|

விண்ணோடு உரசி விளையாடும் பிரமிக்க வைக்கும் 8848 மீட்டர் உயரம் என உலகிலேயே மிக உயரமான சிகரம் எவரெஸ்ட். ஆனால் அந்த கண்ணிற்கெட்டாத உயரம் மனிதன் அதன் உச்சியில் ஏறுவதற்கு தடையாக இருந்ததா? சர் எட்மண்ட் ஹில்லாரி மற்றும் டென்சிங் நார்கி ஆகியோர் வரலாற்று சிறப்புமிக்க அந்த உலக சாதனையை முதன் முதலில் செய்து 60 வருடங்கள் ஆகிவிட்டன. அன்று முதல் ஒவ்வொரு பருவத்திலும் பல வீரர்கள் இந்த சிகரம் தொடும் ஆசையில் கண்ணில் எண்ணற்ற கணவுகளுடன் மலையேறுகின்றனர். இவர்களில் சிலர் அந்த சாதனையைப் படைக்கின்றனர். ஆனால் சிலர் அந்த கடும் பனியில் உறைந்து மறைந்தே போகின்றனர்.

இமய மலைத் தொடர்கள் ஆராய மிகவும் பெரியவை. எவரெஸ்ட் சிகரமும் அதன் உயரமும் நம் மனதில் ஆச்சரியத்தை தொடர்ந்து எழுப்பிய வண்ணம் உள்ளது. பல புத்தகங்களிலிருந்து எவரெஸ்ட் சிகரம் குறித்த பல தகவல்களைப் படித்திருப்பீர்கள். இவற்றில் சில உண்மையானவை. இன்னும் சில உண்மையற்ற கற்பனைத் தகவல்கள். உலகின் மிக உயரமான இந்த சிகரம் தனக்குள்ளே என்ன அடக்கி வைத்திருக்கிறது என்று யாருக்குத் தான் தெரியும்?

எவரெஸ்டைப் பற்றின் நாமறிந்த தகவல்களில், அதன் உயரம், சூழ்நிலை மற்றும் அதன் உச்சியை அடைந்தவர்களின் வரலாறு ஆகியவை அடங்கும். ஆனால் அதைப் பற்றிய பல அரிய யாரும் அறிந்திராத தகவல்கள் உங்களுக்கு மிகுந்த ஆர்வத்தைத் தரக்கூடியதாக இருக்கும். நீங்கள் அறிந்திராத இந்த உண்மைகளில் பின்வரும் சில முக்கிய இடம் வகிக்கின்றன. அந்த உண்மைகள் உங்களுக்காக இதோ:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எவரெஸ்ட் உலகின் மிக உயர்ந்த சிகரம் அல்ல

எவரெஸ்ட் உலகின் மிக உயர்ந்த சிகரம் அல்ல

இந்த நகைச்சுவையான உண்மை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். ஆமாம், அதன் முகடு கடல் பரப்பிலிருந்து கணிக்கப்படுகிறது. ஆனால், அது ஒரு உயரமான பகுதியில் அமைந்துள்ளதாலும் அதன் உயரம் அதிகமாக உள்ளது.

மிகவும் அசுத்தமான மலை

மிகவும் அசுத்தமான மலை

இது எவரெஸ்டைக் குறித்த வெட்கப்பட வேண்டிய தரக்குறைவான உண்மை. ஒவ்வொரு சீசனிலும் மலையேறுபவர்கள் அங்கு சென்று வரலாற்றைப் படைக்கிறார்கள். நீங்கள் உண்மையில் என்ன செய்கிறீர்கள் என்பதை உணர வேண்டியுள்ளது. அங்கே செல்பவர்கள் விட்டுச்செல்லும் பொருட்கள், பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் அந்த மலையையும் சுற்றுப்புற சூழலையும் மிகவும் அசுத்தப்படுத்துகின்றன.

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

ஆச்சரியமா இருக்கா? உண்மை தான். ஆனால் இது வாகன நெரிசல் அல்ல. மனிதர்கள் நெரிசல். எவரெஸ்ட்டில் ஏற பெரும் பணம் தேவைப்பட்டாலும், பல மலையேறுபவர்கள், செலவுக்கு பயந்து தங்கள் எவரெஸ்ட் சிகரம் தொடும் கனவினை விட்டுவிடுவதில்லை என்பது தான் உண்மை. விளைவு, மனிதர்கள் கூட்டம் சேருவதால், இவ்விடத்தில் நெரிசல் ஏற்படுகிறது.

பல பெயர்கள்

பல பெயர்கள்

உலகின் மிக உயர்ந்த சிகரம் சோமோலுங்மா அல்லது சாகர்மாதா என்று சொன்னால் ஆச்சரியப்படாதீர்கள். இதில் முதலாவது திபெத்தியப் பெயர் மலைகளின் தாயாகிய கடவுள் எனப் பொருள் பெறும். இரண்டாவது பெயர் வானின் நெற்றி என்று நேபாள மொழியில் பொருள்படும். எனவே இச்சிகரத்திற்கு பலப் பெயர்கள் உண்டு.

அது இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது

அது இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது

வெளியில் தெரியாத எவரெஸ்ட் சிகரம் குறித்த தவல்களில் சில ஆச்சரியமானவை. ஒரு ஆராய்ச்சிக் குறிப்பு, இந்த சிகரம் வருடத்திற்கு நான்கு சென்டிமீட்டர்கள் வரை வளர்கிறது என கண்டறிந்துள்ளது. புவி அடுக்குகள் நகர்ந்து கொண்டிருப்பதால் இதன் உயரம் கூடிக்கொண்டே போகிறது.

உயரத்தில் உள்ள குழப்பங்கள்

உயரத்தில் உள்ள குழப்பங்கள்

இதன் உயரம் 8848 மீட்டர் என கணக்கிடப்பட்டாலும், அதில் பல விவாதங்கள் நடந்த வண்ணம் தான் உள்ளன. உண்மையில், சீனா மலைகளின் உயரத்தைக் கணக்கிட மலைகளின் உள்ள கற்களின் உயரத்தையே கணக்கில் கொள்ள வேண்டும் எனக் கூறிவந்தது. பின்னர் இந்த விவாதங்கள் முடிவுக்கு வந்துவிட்டன.

வரலாற்றை பறைசாற்றுகிறதா எவரெஸ்ட்?

வரலாற்றை பறைசாற்றுகிறதா எவரெஸ்ட்?

இதில் உள்ள சுண்ணாபு மற்றும் மணற்பாறைகள் கடலுக்கடியில் மறைந்து கிடக்கும் 45 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பாறைகளை ஒத்துள்ளன. மேலும் கடல்வாழ் உயிரி படிமங்களும் இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளன.

மலையேறுபவர்களிடையே மிகவும் பிரபலம்

மலையேறுபவர்களிடையே மிகவும் பிரபலம்

இது ஒன்றும் உங்களுக்குத் தெரிந்திராத விஷயம் அல்ல. ஆனால் அதில் சுவாரசியம் என்ன? இதன் புகழின் அளவு என்ன? எனப் பார்த்தால் புள்ளி விவரங்களின் படி, நான்காயிரத்திற்கும் அதிகமானோர் அதன் உச்சியைத் தொட முயற்சி செய்துள்ளனர்.

சிகரத்தில் புகழ்மிக்க இரு மனிதர்கள்

சிகரத்தில் புகழ்மிக்க இரு மனிதர்கள்

பலர் இந்த மலையின் உச்சியை அடைந்துள்ளனர். அதில் என்ன பெரிய விஷயம்? அபா ஷெர்பா மற்றும் பூர்பா தாஷி ஆகிய இருவர் இந்த சிகரத்தை 21 முறை ஏறி சாதனை புரிந்துள்ளனர். இவங்களுக்கு எவெர்ஸ்ட் சிகரம் காய்கறி மார்கெட்டுக்கு போய்ட்டு வர மாதிரி இருக்கே? பாராட்டுக்கள்...

சிலந்தி உலகம்

சிலந்தி உலகம்

மூச்சு விடுவதற்கே அவதிப்படும் அந்த உயரங்களில், கருப்பு நிற மலை சிலந்திகள் மற்ற இடங்களில் இருந்து காற்றில் பரந்து வரும் சிறு பூச்சிகள் போன்ற உயிரினங்களை உண்டு உயிர் வாழ்கின்றன. இவை பொதுவாக மலை இடுக்குகளில் வசிக்கின்றன.

ம்ம்.. எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது எவரெஸ்ட் பற்றித் தெரிந்து கொள்ள? எவெரெஸ்டுக்குப் போய்ட்டு வந்தது போல இருக்கா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unknown Facts About Mount Everest

There are some unknown facts about mount everest that we all need to know. Here are list of unsual facts about mount everest.
Story first published: Saturday, April 4, 2015, 17:24 [IST]
Desktop Bottom Promotion