மாயன்களை பற்றி யாராலும் நம்ப முடியாத ஆச்சரியமூட்டும் தகவல்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

மாயா நாகரிகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரிகமாகும். இந்த பகுதியில் தான் தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ, குவாத்தமாலா, ஹொண்டுராஸ் போன்ற நாடுகள் பரவியிருக்கிறது. கொலம்பசுக்கு முந்தியகால அமெரிக்காவின் முழு வளர்ச்சிப் பெற்ற ஒரே எழுத்து மொழியைக் கொண்டிருந்தது இந்த நாகரிகத்தைச் சேர்ந்த மக்களே மாயன்கள் ஆவர்கள்.

ஏலியன்கள் நமது உலகிற்கு வந்து சென்றதற்கான வியக்கவைக்கும் ஆதாரங்கள்!!!

கி.மு. 2600-ல் மாயன் நாகரிகம் தோன்றி இருக்கலாம். மாயன் இனத்தவர் கணிதம், எழுத்துமுறை, வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர். மிக விசாலமான, நுணுக்கமான கட்டிடக்கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும். கி.பி. 150-ல் மாயன் நாகரிகம் உச்சத்தை அடைந்தது.

சீனாவை பற்றி யாராலும் நம்ப முடியாத அதிர்ச்சிகரமான தகவல்கள்!!!

அதன்பின் பல்வேறு காரணங்களால் அது சீரழியத் தொடங்கியது. ஸ்பெயின் நாட்டவர் குடியேற்றம், விசித்திரமான மூட நம்பிக்கைகள், மற்றும் முறையற்ற விவசாயம் போன்றவை மாயன் கலாசாரப் பேரழிவுக்குக் காரணிகளாக இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏழு மில்லியன் மாயன்கள்

ஏழு மில்லியன் மாயன்கள்

இன்றளவிலும் கூட உலகில் யுக்காடன் தீபகற்பம் (Yucatan Peninsula) பகுதியிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் ஏழு மில்லியன் மாயன்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

Image Courtesy

"ஷார்க்" - Shark

ஷார்க் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சுறாவின் பெயர், உண்மையில் மாயன் மொழியில் இருந்து வந்த சொல் என சில மொழியியலாளர்கள் கூறுகிறார்கள்.

பெயர் வைக்கும் வழக்கம்

பெயர் வைக்கும் வழக்கம்

மாயன் இனத்தில், குழந்தை பிறந்த தினத்தை வைத்து பெயர் வைக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. பிறந்தநாள் மற்றும் அதன் நாள்குறிப்பை வைத்து தான் குழந்தைகளுக்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

பல், முடி மருத்துவம்

பல், முடி மருத்துவம்

மாயன்களின் மருத்துவம் கொஞ்சம் மேம்பட்டு தான் இருந்திருக்கிறது. தையல் இடுவதற்கு மனிதர்களின் முடியும், பற்களையும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இயற்கை மருத்துவம்

இயற்கை மருத்துவம்

மாயன்கள் வலி நிவாரணத்திற்கு இயற்கை மூலிகைகளை தான் மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள்

விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள்

"Mesoamerican Ballgame" எனும் விளையாட்டை மாயன்கள் ஆர்வமாக விளையாடி இருக்கலாம் என அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதற்கான சான்றுகளும் இருக்கின்றன.

நீராவி குளியல்

நீராவி குளியல்

நீராவி குளியல் மாயன்களின் கலாச்சாரத்தில் ஓர் முக்கிய பங்கு வகித்துள்ளது. நீராவி குளியல் அசுத்துங்களை அகற்ற சிறந்து விளங்குவதை மாயன்கள் கருதியிருந்தனர்.

கடைசி மாயன் இனம்

கடைசி மாயன் இனம்

இன்றும் உயிரோடு வாழ்வதாக கருதப்பட்டாலும் கூட, கடைசியாக ஸ்பானிஷின் ஆட்சிக்கு கீழ் 1697ஆம் ஆண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

மாயன் காலண்டர்

மாயன் காலண்டர்

மாயன்களின் காலண்டர் முடிவடைவதை வைத்து உலகம் 2012-ல் அழிந்துவிடும் என்ற புரளி உலக அளவில் பரவி வந்தது.

விசித்திரமான எழுதும் பழக்கம்

விசித்திரமான எழுதும் பழக்கம்

மாயன்களின் எழுத்து பழக்கம் கூட மிகவும் மேலோங்கி இருந்தது. இவர்கள் சித்திரங்களின் மூலம் படித்து வந்துள்ளனர். அசம்பாவிதமாக ஸ்பானிஷ் உடனான சண்டையின் போது பெரும்பாலான அவர்களது ஆதாரங்கள் அழிந்து போய்விட்டன.

Image Courtesy

மாயன்களின் போர் கருவிகள்

மாயன்களின் போர் கருவிகள்

மற்றவர்களை போல இரும்பை போர் கருவியாக பயன்படுத்தாமல். எரிமலை கற்களை போர் கருவிகளாக மாயன்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

கூர்மையான பற்கள்

கூர்மையான பற்கள்

மாயங்களின் பற்கள் மிகவும் கூர்மையானதாக இருந்ததாய் கூறப்படுகிறது.

பூஜ்ஜியம்

பூஜ்ஜியம்

பூஜ்ஜியத்தை வெளிப்படையாகப் பயன்படுத்திய முதல் குடியினர் மாயங்கள் என்ற ஓர் கருத்தும் நிலவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Unbelievable Facts About The Mayans That Might Surprise You

Do you know The Unbelievable Facts About The Mayans That Might Surprise You? Read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter