இடது கை பழக்கமுள்ளவர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாகவே நண்பர்கள் மத்தியில் கூட இடது கை பழக்கம் உள்ளவர்களை காண்பது மிகவும் அரிது தான். அதையும் தாண்டி அப்படிப்பட்ட ஓர் நபர் நமது நண்பர் அல்லது உடன் பணிபுரியும் நபராக இருந்தால், அவர் கண்டிப்பாக தனித்தன்மையுடன் காணப்படுவார். மேலும் அவர் அனைத்து வகையிலும் சிறந்து செயல்படும் நபராக காணப்படுவார்.

உண்மையிலேயே இடது கை பழக்கம் உள்ளவர்கள் உலகளவில் சிறந்து காணப்படுகிறார்கள். கலை, அறிவு, செயல்பாடு, மல்டி டாஸ்கிங், கோபம் என அனைத்தும் இவர்களுக்கு அதிகமாக வருகிறது......

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறந்த கலைஞர்கள்

சிறந்த கலைஞர்கள்

இடது கை பழக்கமுள்ளவர்கள் சிறந்த கலைஞர்களாக திகழ்கிறார்கள். கலை, இசை, நடிப்பு என எந்த படைப்பாற்றல் துறையாக இருப்பினும் இவர்கள் அதில் சிறந்து விளங்குகிறார்கள். மெக்கின்டோஷ் வடிவமைப்பாளர்களில் ஐந்தில் நால்வர் இடது கை பழக்கமுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபலமானவர்கள்

பிரபலமானவர்கள்

வலது கை பழக்கமுள்ளவர்களோடு ஒப்பிடுகையில் சராசரி சதவீதத்தில் இடது கை பழக்கமுள்ளவர்கள் தான் அதிகம் பிரபலமாக இருக்கிறார்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பெஞ்சமின் பிராங்க்ளின்,பில் கேட்ஸ், லியோனார்டோ டாவின்சி என இந்த பட்டியல் நீள்கிறது.

மல்டி டாஸ்கிங்

மல்டி டாஸ்கிங்

இடது கை பழக்கமுள்ளவர்களது மூளை சிறந்து செயல்படுகிறதாம். இதனால் இவர்கள் மல்டி டாஸ்கிங்கிலும் சிறந்து காணப்படுகிறார்கள்.

சமநிலை

சமநிலை

உடலளவிலும் கூட சமநிலையை கட்டிப்பாட்டில் வைத்திருப்பதில் இவர்கள் மேலோங்கிக் காணப்படுகிறார்கள். வலது கை பழக்கமுள்ளவர்களால் இடது கையில் வேலை செய்வது கடினம், ஆனால், இடது பழக்கம் உள்ளவர்கள் எளிதாக வலது கையிலும் வேலை செய்வார்கள்.

வாழ்நாள்

வாழ்நாள்

வலது கை பழக்கம் உள்ளவர்களை விட இடது கை பழக்கம் உள்ளவர்கள் சராசரியாக 9 வருடங்கள் குறைவாக தான் உயிர் வாழ்கிறார்கள்.

குடிப் பழக்கம்

குடிப் பழக்கம்

உலகளவில் 12 நாடுகளை சேர்ந்த 25000 பேரை வைத்து நடத்திய ஆய்வில், வலது கை பழக்கம் உள்ளவர்களை விட, இடது கை பழக்கம் உள்ளவர்கள் தான் அதிகம் குடிக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

கோபம்

கோபம்

இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு விரைவாக கோபம் வந்துவிடும். இவர்களது மூளை வேகமாக செயல்படுவது தான் இதற்கான காரணம் என கூறப்படுகிறது.

பார்வை

பார்வை

தண்ணீருக்கு கீழேயும் கூட நல்ல பார்வை திறன் இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு இருக்கிறது.

வயது வருவது

வயது வருவது

வலது கை பழக்கம் உள்ளவர்களோடு ஒப்பிடுகையில் சராசரியாக 4-5 மாதங்களுக்கு முன்னரே இடது கை பழக்கம் உள்ளவர்கள் வயது வந்துவிடுகிறார்கள்.

ஐ. க்யூ

ஐ. க்யூ

அறிவியல் ரீதியாகவே இடது கை பழக்கம் உள்ளவர்கள் புத்திசாலிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள செயின்ட். லாரன்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டது. ஐ. க்யூ அளவு 140க்கு மேல் உள்ளவர்களில் அதிகமானவர்கள் இடது கை பழக்கம் உள்ளவர்கள் தான். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன், சார்ல்ஸ் டார்வின், மற்றும் பெஞ்சமின் பிராங்க்ளின் போன்ற அனைவரும் இடது கை பழக்கம் உள்ளவர்கள் தான்.

ஆகஸ்ட் 13

ஆகஸ்ட் 13

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 13ஆம் நாள் உலக இடது கை பழக்கம் உள்ளவர்கள் நாளாக கொண்டாடப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top 10 Interesting Facts About Left Handed People

Top 10 Interesting Facts About Left Handed People
Please Wait while comments are loading...
Subscribe Newsletter