For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனிதர்களை விட மிகப்பெரிய விந்தணுவைக் கொண்ட பூச்சி பற்றி தெரியுமா?

By Babu
|

உடலுறவில் ஈடுபடும் போது ஆண்களுக்கு பல மில்லியன் அளவில் விந்தணுக்கள் வெளியேறும். சாதாரண ஒரு மனித விந்தணுவின் அளவு என்ன தெரியுமா? 50 மைக்ரோமீட்டர்கள், அதாவது 0.05 மில்லிமீட்டர் அல்லது 0.002 இன்ச் தான்.

ஒன்றிற்கு மேற்பட்ட இதயங்களைக் கொண்ட உயிரினங்கள் எவையென்று தெரியுமா?

ஆனால் ஒரு பூச்சிக்கு மனித விந்தணுவை விட மிகப்பெரிய விந்தணுவைக் கொண்டுள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா? நிச்சயம் நம்பமாட்டீர்கள். ஆனால் உண்மையிலேயே ஒரு சிறு பூச்சி 2.5 இன்ச் விந்தணுவைக் கொண்டுள்ளது என மான்செஸ்டர் பல்கலைகழகம் மற்றும் ஜூரிச் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுக்குறித்து விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1000 பாலூட்டி இனங்கள்

1000 பாலூட்டி இனங்கள்

மான்செஸ்டர் பல்கலைகழகம் மற்றும் ஜூரிச் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராச்சியாளர்கள் 1000 பாலூட்டி இனங்களைக் கொண்டு ஆய்வு மேற்கொண்ட போது, சிறிய உடலைக் கொண்ட பழ ஈக்களுக்கு மிகப்பெரிய விந்தணு இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.

பழ ஈக்கள்

பழ ஈக்கள்

மனிதர்கள் மற்றும் விலங்குகளின் ராஜ்ஜியத்தில் மிகப்பெரிய விந்தணுவைக் கொண்டிருக்கும் ஓர் பூச்சி தான் பழ ஈக்கள் (Fruit Flies).

2.5 இன்ச் நீளமுள்ள விந்தணு

2.5 இன்ச் நீளமுள்ள விந்தணு

இந்த பழ ஈக்களின் விந்தணுக்கள் ஒவ்வொன்றும் 6 சென்டிமீட்டர், அதாவது 2.5 இன்ச் நீளமுள்ளது. அதாவது இதன் உடலை விட 20 மடங்கு நீளமாகவும், மனித விந்தணுவை விட 1000 மடங்கு நீளமாகவும் உள்ளது.

பந்து போன்று இருக்கும்

பந்து போன்று இருக்கும்

பழ ஈக்களின் விந்தணுக்கள் ஆரம்பத்தில் பந்து போன்று சுருண்டு இருக்கும். பின் பெண் இனப்பெருக்க பாதையில் நுழைந்ததும் அது நீண்டு, அதன் உண்மையான நிலைக்கு வந்துவிடும்.

800 விந்தணுக்கள்

800 விந்தணுக்கள்

பழ ஈக்கள் தன் இனப்பெருக்க பாதையில் ஒரே நேரத்தில் 800 விந்தணுக்களைக் கொண்டிருக்குமாம்.

பெரிய விந்தகங்கள்

பெரிய விந்தகங்கள்

பழ ஈக்கள் ராட்சத விந்தணுக்களை உற்பத்தி செய்யும் பொருட்டு, அதன் உடல் எடையில் கிட்டத்தட்ட 11 சதவீத எடையுள்ள மிகப்பெரிய விந்தகங்களை உருவாக்குகின்றன.

பாலியல் முதிர்ச்சி தாமதம்

பாலியல் முதிர்ச்சி தாமதம்

இவ்வளவு பெரிய இனப்பெருக்க உறுப்பை உருவாக்க நிறைய ஆற்றல் தேவைப்படுவதால், ஆண் பழ ஈக்களின் பாலியல் முதிர்ச்சி தாமதமாக இருக்குமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This Insect Has Bigger Sperm Than Humans And All Other Animals

Do you know the fruit fly has the largest sperm in the animal kingdom. Read on to know more...
Desktop Bottom Promotion