உலகிலேயே மிகவும் ரணக் கொடூரமான சிறைச்சாலைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

சிறை என்பது ஓர் மனிதனை திருந்தி வாழ வைக்கவே தவிர, பயந்து வாழ்வதற்கு அல்ல. சிறை ஓர் பல்கலைகழகமாக இயங்க வேண்டும். ஆனால், உலகின் பல இடங்களில் பல உயிர்களை பலி வாங்கும் இடமாக தான் இருக்கிறது சிறைச்சாலைகள்.

அடிப்படை உரிமைகள் வழங்க மறுக்கப்பட்டு, விலங்குகளை விட மோசமான நிலைக்கு அவர்களை உட்படுத்தி, சித்திரவதை, கற்பழிப்பு என பல கொடுமைகள் இழைக்கப்பட்டு, தவறு செய்து வந்த கைதியை மேலும் குற்ற எண்ணங்கள் அதிகரிக்கும் வகையில் தான் பெரும்பாலான சிறைகள் செயல்பட்டு வருகின்றன.

அந்த வகையில், உலகிலேயே மிகவும் ரணக் கொடூரமான சிறைச்சாலைகள் சில இருக்கின்றன. அவற்றை பற்றி தான் நாம் இங்கு காணவிருக்கிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எண்:10

எண்:10

ரிக்கேர்ஸ் தீவு, இந்த இடம் நியூயார்க் பகுதியில் இருக்கிறது. சராசரியாக ஒவ்வொரு நாளும் 12,000 கைதிகள் இருந்து வருகின்றனர். இந்த சிறையில் 17,000 கைதிகள் வரை அடைத்து வைக்கலாம். இந்த சிறையில் ஒரு பாதுகாவலரின் உத்தரவின் படி, வேடிக்கைக்காக சண்டையிட்டு கொள்ளலாம். மிகவும் ஆக்ரோஷமான கைதிகளை கொண்ட சிறை இது.

எண்: 09

எண்: 09

லா செண்டே சிறை, இந்த சிறை பிரான்சின் பாரிஸ் பகுதியில் இருக்கிறது. இந்த பகுதி பாரிஸின் முக்கியமான பகுதியில் இடம்பெற்றுள்ளது. இங்கு மிகவும் கடுமையான பாதுகாப்புடன் கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். காதல் நகரமான பாரிஸில் இப்படி ஒரு சிறை இருக்கிறது என்பது வியக்கத்தக்கது.

எண்: 08

எண்: 08

பெடக் தீவு சிறை, இந்த சிறை ரஷ்யாவில் இருக்கிறது. இந்த சிறையில் இருக்கும் அனைத்து கைதிகளும் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர். வருடத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே கைதிகளின் உறவினர்கள் வந்து பார்த்து செல்ல முடியும். இந்த சிறை ஏரியின் நடுவே அமைதுருப்பதால், கடும் குளிர் நிலவுகிறது.

எண்: 07

எண்: 07

பேங் க்வாங் சிறை, தாய்லாந்தில் இருக்கிறது. பேங்காக் பகுதியில் இருந்து சில மைல்களுக்கு அப்பால் இருக்கிறது இந்த சிறை. தாய்லாந்தில் இருக்கும் சிறைகளிலே மிகவும் கடுமையான சிறை இதுதான். ஏறத்தாழ இந்த சிறையில் இருக்கும் 10-ல் ஒரு நபர் தூக்கிற்காக காத்திருக்கின்றனர். ஊட்டச்சத்து குறைபாட்டினால் பல கைதிகள் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார்கள். ஒரு நாளுக்கு ஒரு கப் சாதம் தான் வழங்கப்படுகிறதாம்.

எண்: 06

எண்: 06

லா சபனேட்டா, இந்த சிறை வெனிசுலாவில் இருக்கிறது. வெனிசுலா நாட்டவர்களுக்கு இந்த சிறை என்றாலே பயமாம். ஏனெனில் இந்த சிறையில் தான் அதிகமானோர் இறந்ததாக கருதப்படுகிறது. கூட்டம், கூட்டமாக கைதிகள் பிரிந்திருக்கும் சிறை இது. கற்பழிப்புகள் கூட ஏராளம் நடக்குமாம். கடந்த 2012ஆம் ஆண்டு மட்டுமே 591 கைதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கொகைன், கஞ்சா எல்லாம் கூட இந்த சிறையில் கிடைக்கிறது.

எண்:05

எண்:05

தியர்பக்கிர் சிறை, துர்கியில் இருக்கிறது இந்த சிறை. துர்கியின் மிகவும் பாதுகாப்பான சிறை இது என்று கூறப்படுகிறது. இந்த சிறை கடந்த 1980தில் தான் திறக்கப்பட்டது. இந்த சிறையை மக்கள் ஓர் நரகத்தை போல தான் பார்கிறார்கள். அளவுக்கு அதிகமானோர் அடைக்கப்பட்டிருக்கும் சிறை இது. இன்றைய கணக்கிற்கு, 350 ஆண், பெண் குழந்தைகள் (13 - 17 வயதுக்குட்பட்டோர்) சிறை தண்டனை பெறுவது இங்கு வழக்கமாக இருக்கிறது.

எண்: 04

எண்: 04

க்ளடாணி சிறை, ஜார்ஜியாவில் இருக்கிறது இந்த சிறை. தொழிநுட்பம் மிகுதியாக இருக்கும் சிறை இது. இங்கு, அடி, உதை, கற்பழிப்பு, சித்திரவதை போன்றவை அதிகமாக நடக்கிறது. இதன் காணொளி வெளிவந்து உலகையே உலுக்கியது.

எண்:03

எண்:03

கொன்டோனெள உள்நாட்டு சிறை, பெனின் இருக்கிறது இந்த சிறை. மேற்கு ஆப்ரிக்காவில் இருக்கும் ஓர் சிறிய நாடு தான் பெர்லின். 400 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 2400 பேர் இருக்கிறார்கள். 90% கைதிகள் விசாரணை கைதிகள் தான். தடுக்க கூடிய நோய்களின் காரணமாகவே பல கைதிகள் இறக்கிறார்கள் என்பது தான் மிகவும் கொடுமையானது.

எண்:02

எண்:02

தட்மோர் சிறை, இந்த சிறை சிரியாவில் இருக்கிறது. அரசியல் கைதிகள், குற்றவாளிகள் என நிரம்பி வழிகிறது இந்த சிறை. ஏற்றத்தாழ்வு இன்றி அனைவருக்கும் சம அளவிலான சித்திரவதை இழைக்கப்படுகிறது. புத்தகம், ரேடியோ, டிவி என பொழுதுபோக்கு ஏதுமின்றி அடைக்கப்பட்டுள்ளனர்.

எண்: 01

எண்: 01

ஜிடாரமா மத்திய சிறை, இந்த சிறை ர்வண்டாவில் இருக்கிறது. ர்வண்டா (Rwanda) என்றால் திகில். அடித்தே கொலை செய்யப்பட்ட கைதிகள் ஏராளமானோர். இது போக வியாதி, துன்புறுத்தல் என மீதி பேர். போதிய அறைகள் இல்லாததால், படுக்கையின் கீழும், கூரையின் மேலும், வெளியிடங்களில் தரையிலும் கைதிகள் தூங்க வேண்டிய நிலை நிலவி வருகிறது. 500 பேர் இருக்க வேண்டிய சிறையில், ஐந்து மடங்கிற்கும் மேலானோர் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Most Dangerous Prisons In The World

Do you know about the most dangerous Prisons in the world? Take a look.