இந்து மதப்படி நடத்தும் கிரக பிரவேச விழாவின் முக்கியத்துவம்!

By: Ashok CR
Subscribe to Boldsky

புதியதாக கட்டப்பட்ட வீட்டிற்குள் குடி புகுவதற்கு முன் நடத்தப்படும் விழா தான் கிரக பிரவேசம். வீடு தயாரானவுடன் குடும்பத்துடன் அந்த வீட்டிற்கு செல்ல ஜோதிட அட்டவணைகள் கொண்டு ஒரு நல்ல நாள் பார்க்கப்படும்.

கிரக பிரவேசத்தின் போது நல்ல நாள் (பஞ்சாங்கம்) மற்றும் நல்ல நேரம் (முகூர்த்தம்) பார்ப்பது அவசியம். நமது பண்டைய நூல்களில் மூன்று வகையான கிரக பிரவேசங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை அபூர்வ, சபூர்வ, த்வந்த்வ போன்றவை. இப்போது அவற்றைப் பற்றியும், கிரக பிரவேசத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அபூர்வ

அபூர்வ

புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட வீட்டிற்குள் புகுவது அபூர்வ கிரக பிரவேசம்.

சபூர்வ

சபூர்வ

ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டில் வெளிநாட்டு பயணங்களுக்குப் பின்னோ அல்லது இடப்பெயர்வுக்கு பின்னோ குடி புகுவது சபூர்வ கிரக பிரவேசம்.

 த்வந்த்வ

த்வந்த்வ

புனரமைப்பு அல்லது வெள்ளம், நெருப்பு, பூகம்ப சேதம் போன்றவற்றிற்கு பின் சீரமைத்த வீட்டிற்குள் குடி புகுவது த்வந்த்வா (பழைய) கிரக பிரவேசம் எனப்படும். அபூர்வ கிரக பிரவேசத்தை பொறுத்தவரை, சரியான முகூர்த்த நேரம், பின்பற்றப்பட வேண்டும். சபூர்வ மற்றும் த்வந்த்வ கிரக பிரவேசங்களுக்கு பஞ்சாங்கத்தின் புனிதத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.

மங்கள நேரம் அல்லது முகூர்த்தம்

மங்கள நேரம் அல்லது முகூர்த்தம்

புதிதாக கட்டப்பட்ட வீட்டில் நுழையும் புனிதமான நாளில் சூரியன் உத்தராய நிலையில் இருத்தல் வேண்டும். பழைய அல்லது புனரமைத்த வீடுகளில் நுழையும் போது குரு (வியாழன்) அல்லது சுக்கிரன் அமைதல் வேண்டும் (நட்சத்திரம் இதில் ஒரு விஷயமே இல்லை).

வாஸ்து பூஜை

வாஸ்து பூஜை

உண்மையாக வீட்டிற்கு குடி புகும் முன்னே, வாஸ்து பூஜையானது வீட்டிற்கு வெளியே வாஸ்து தேவதைக்கு நடத்தப்படும். ஒரு செம்பு பானையானது நீர், நவதானியம் (ஒன்பது வகையான தானியங்கள்) மற்றும் ஒரு ரூபாய் நாணயங்களால் நிரப்பப்பட்டிருக்கும். அந்த பானையின் மேல் தேங்காயானது வைக்கப்படும். தேங்காயானது சிவப்பு துணியால் மூடப்பட்டு, சிவப்பு நூலால் கட்டப்படும். பூசாரி பூஜைகளை முடித்த பின் கணவன் மற்றும் மனைவி இருவரையும் ஒன்றாக சேர்ந்து அந்த பானையை எடுத்து ஹோமத்திற்கு (சடங்கு தீ) அருகில் வைக்க செய்வார்.

வாஸ்து சாந்தி

வாஸ்து சாந்தி

வாஸ்து சாந்தி அல்லது கிரக சாந்தி என்பது ஹோமத்தை உள்ளடக்கும். தீய தாக்கங்களையும், எதிர்மறையான அதிர்வுகளையும் தடுத்து அமைதியான சூழலை உருவாக்க ஹோமம் நடத்தப்படுகிறது. அனைத்து பூஜைகளும் முடிந்த பின் பூசாரிக்கு விருந்து வழங்கப்படுகிறது. அவரது சேவை மற்றும் வாழ்த்துக்களுக்காக அவருக்கு சில தக்ஷணை அல்லது கட்டணங்கள் வழங்கப்படும். கணபதி பூஜை, லக்ஷ்மி பூஜை மற்றும் சத்யநாராயண பூஜை போன்ற பூஜைகளும் பூசாரியின் பரிந்துரையின் படி செய்யப்படும்.

கிரக பிரவேசத்தின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை

கிரக பிரவேசத்தின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை

* வீட்டின் கதவுகள் பொருத்துதல், கூரை வேய்தல், வாஸ்து கடவுளை வணங்குதல், பலி செலுத்துதல் மற்றும் பூசாரிக்கு விருந்து கொடுத்தல் போன்றவற்றிற்கு முன் கிரக பிரவேசம் முழுமை அடைவது இல்லை.

* முக்கியமாக வீட்டில் உள்ள பெண் கர்ப்பமாக இருக்கும் போது கிரக பிரவேசம் நடத்தக் கூடாது.

குறிப்பு

குறிப்பு

புதிய வீட்டிற்கு நகரும் போது மேற்குறிப்பிட்டவற்றை கருத்தில் கொள்ளவில்லை என்றால் அவை பிரச்சனை மற்றும் கவலைகளை கொண்டு வந்து சேர்க்கும். கொடுக்கப்பட்ட நடைமுறைகளின் படி, எல்லா சடங்குகளையும் செய்து முடித்த பின்னரே புதிய வீட்டிற்குள் செல்ல வேண்டும். கிரக பிரவேச விழா முடிந்த பின் புதிய வீட்டிற்குள் குடியேறலாம். அன்றிலிருந்து சில நாட்களுக்கு வீட்டை பூட்டி வைக்கக் கூடாது. அது அமங்கலமாக கருதப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Significance of Hindu House Warming Ceremony(Griha Pravesh)

Griha Pravesh is a ceremony performed on the occasion of ones first entry into a new house. Three types of griha pravesh have been mentioned in our ancient scriptures.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter