இந்து மத புனிதக் கயிறுகளின் முக்கியத்துவம்!

By: Ashok CR
Subscribe to Boldsky

உடலின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு நிற நூல்கள் அணிந்த பல மக்களை நீங்கள் கடந்து வந்திருப்பீர்கள். புனித நூல்களை அணிவது இந்துக்களின் ஒரு பொதுவான நடைமுறையாகும். கழுத்து, மணிக்கட்டு, இடுப்பு போன்ற இடங்களில் கருப்பு, வெள்ளை, மஞ்சள், சிவப்பு நிற கயிறுகளை கட்டி இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

ஒவ்வொரு புனித நூலும் இந்து மதத்தில் ஒரு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இவை கண் திருஷ்டி, நல்ல உடல் நிலை, செழிப்பு ஆகியவற்றிற்காக உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் கட்டப்பட்டிருக்கும்.

இந்து மதத்தில் உள்ள இந்த புனித கயிறுகளைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அனைத்துக் கயிறுகளையும் எல்லோராலும் அணிய முடியாது. எடுத்துக்காட்டாக பூநூலை இந்து மதத்தின் மேல் ஜாதியினர் மட்டுமே அணிய முடியும். மேலும் மஞ்சள் கயிறு அல்லது மாங்கல்யமானது திருமணமான பெண்களால் மட்டுமே அணிய முடியும். இந்து மதத்தில் உள்ள புனித கயிறுகளைப் பற்றி நீங்கள் மேலும் அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா? எனில் தொடர்ந்து படிக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவப்பு கயிறு

சிவப்பு கயிறு

மணிக்கட்டில் சிவப்பு நூல் அணிவது என்பது இந்தியாவில் பொதுவான ஒன்றாகும். ஆண்கள் மற்றும் பெண்களும் அணிந்திருக்கும் இந்த சிவப்பு நூல், நீண்ட ஆயுள் மற்றும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பை குறிக்கும். இந்த சிவப்பு கயிறானது ஆண்கள் மற்றும் திருமணமாகாத பெண்களுக்கு வலது கையிலும், திருமணமான பெண்களுக்கு இடது கையிலும் கட்டப்படும்.

கருப்பு கயிறு

கருப்பு கயிறு

கருப்பு நிறம் தீயவற்றின் பார்வையிலிருந்து தரும் பாதுகாப்பை குறிக்கும். கறுப்புக் கயிறானது குழந்தைகளுக்கு இடுப்பில் அணிவிக்கப்படுகிறது. இது கண் திருஷ்டி மற்றும் தீயவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கும்.

ஆரஞ்சு அல்லது காவி நிறக் கயிறுகள்

ஆரஞ்சு அல்லது காவி நிறக் கயிறுகள்

ஆரஞ்சு அல்லது காவி நிறக் கயிறுகளும் மணிக்கட்டில் கட்டப்படும். மேலும் இது புகழ், அதிகாரம் சேர்க்கும் என்றும், தீயவற்றிலிருந்து பாதுகாப்பு தரும் என்றும் நம்பப்படுகிறது.

வெள்ளை நூல்

வெள்ளை நூல்

புனித வெள்ளை நூல் உபநயன விழாவோடு தொடர்புடையது. வெள்ளை நிறம், தூய்மையை குறிக்கும். இந்து மத நடைமுறையின் படி வெள்ளை நூலானது மேல் ஜாதியினரால் மட்டுமே அணிய முடியும்.

மஞ்சள் கயிறு

மஞ்சள் கயிறு

மஞ்சள் கயிறு என்பது திருமணத்தின் சின்னமாகும். திருமண நாளின் போது பூசாரி வேத மந்திரங்கள் ஓத மஞ்சள் கொண்டு செய்யப்பட்ட மஞ்சள் கயிறு மணமகளின் கழுத்தில் கட்டப்பட்டு மூன்று முடிச்சு போடப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Sacred Threads In Hinduism: Significance

What do sacred threads in Hinduism signify? Find out all about the sacred threads of the Hindus. Read on.
Story first published: Saturday, July 11, 2015, 14:46 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter