For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகை கலக்கிய அமெரிக்க ஜனாதிபதிகளின் சில விசித்திரமான செயல்பாடுகள்!!!

|

ஓர் நாட்டை கட்டி ஆட்சி செய்பவர் ஜனாதிபதி அல்லது பிரதமராக இருக்க கூடும். ஆனால், உலகின் பெரும்பாலான பிரதமர்களும், ஜனாதிபதிகளும் ஒருவரிடம் பணிந்து நடக்கிறார்கள் என்றால் அது அமெர்க்க ஜனாதிபதியாக தான் இருக்க கூடும். உலகின் பெரிய வல்லரசு நாடு என்ற அடைமொழி கொண்டு, ஊரான் வீட்டு பிரச்சனைகளில் மூக்கை நுழைப்பது இவர்களின் அன்றாட பழக்கம்.

"ஏழ்மையில் முளைத்த விடிவெள்ளி" அப்துல் கலாம் பற்றிய அழியாத நினைவுகள்!!!

உலக மக்களின் மத்தியில் பெரும் பெயரும், புகழும் கொண்ட அமெர்க்க அதிபர்கள் பற்றிய சில வேடிக்கையான, சுவாரஸ்யமான நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் குறித்து தான் நாம் இங்கு காணப்போகிறோம். சிலவன சிந்திக்கவும், சிலவன சிரிக்கவும்.....

உலக வரலாற்றில் பெரும் மாற்றங்கள் மற்றும் புரட்சி ஏற்படுத்திய கடிதங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதலைகளை வளர்த்த அமெரிக்க ஜனாதிபதிகள்

முதலைகளை வளர்த்த அமெரிக்க ஜனாதிபதிகள்

அமரிக்காவின் ஜனாதிபதிகளில் இருவர் முதலைகளை செல்ல பிராணியாக வளர்த்தனர். ஆடம்ஸ் என்பவர் பிரெஞ்சு ஜெனரலிடம் முதலையை பரிசாய் பெற்று வளர்த்தார். இது வெள்ளை மாளிகையின் குளியலறையில் வைத்து வளர்க்கப்பட்டது. மற்றும் ஹூவர் அன்பவரது மகன் இரண்டு முதலைகளை வளர்த்து வந்துள்ளார், இவை வெள்ளை மாளிகையின் மைதானத்தில் ஜாலியாக உலா வந்துக் கொண்டிருந்தனவாம். இதை இரகசியமாக வைத்திருந்ததாக சிலர் கூறுகிறார்கள்.

Image Courtesy

கிரேக்க மற்றும் இலத்தின் மொழிகள்

கிரேக்க மற்றும் இலத்தின் மொழிகள்

அமெரிக்காவின் 20வது ஜனாதிபதியான ஜேம்ஸ் கர்ஃபீல்ட் இரு கைகளிலும் எழுதக்கூடிய திறன் வாய்ந்தவராக இருந்தார். இதில் சிறப்பு என்னவெனில், ஒரு கையால் கிரேக்க மொழியும், மற்றொரு கையால் இலத்தின் மொழியும் எழுதும் அளவிற்கு திறமை வாய்ந்திருந்தார் என்பது தான்.

Image Courtesy

பணியாட்களை சோதித்த கெல்வின் கூளிஜ்

பணியாட்களை சோதித்த கெல்வின் கூளிஜ்

ஒருமுறை வெள்ளை மாளிகளியில் இருந்த கெல்வின் கூளிஜ் பணியாட்கள் துரிதமாகவும், கவனமாகவும் இருக்கிறார்களா என சோதிக்க, அனைத்து எச்சரிக்கை மணிகளையும் ஒலிக்க செய்தார். இதனால், அனைத்து பணியாட்களும், என்ன ஏதென்று தெரியாமல் தலை தெறிக்க ஓடினார்களாம்.

Image Courtesy

குண்டடிபட்டு 90நிமிடங்கள் பேசிய டெட்டி ரூஸ்வெல்ட்

குண்டடிபட்டு 90நிமிடங்கள் பேசிய டெட்டி ரூஸ்வெல்ட்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டெட்டி ரூஸ்வெல்ட், மில்வௌகீ (Milwaukee) எனும் இடத்தில பேசிக்கொண்டிருக்கும் துப்பாக்கியால் மார்பில் சுடப்பட்டார். அனைவரும் அவரை மருத்துவமனைக்கு கூட்டி செல்ல முனைந்த போதும் கூட, தொடர்ந்து 90 நிமிடங்கள் உரையாற்றினார் டெட்டி ரூஸ்வெல்ட்.

Image Courtesy

ஃபேஷன் மாடல் ஜெரால்ட் போர்ட்

ஃபேஷன் மாடல் ஜெரால்ட் போர்ட்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜெரால்ட் போர்ட், ஜனாதிபதியாக இருப்பதற்கு முன்பு ஃபேஷன் மாடலாக இருந்துள்ளார். கடந்த 1942ஆம் ஆண்டு காஸ்மோபாலிட்டன் எனும் பிரபல பத்திரிக்கையின் அட்டைப்படத்திலும் இவரது புகைப்படந்திருக்கிறது.

Image Courtesy

ஏலியனை கண்ட அமெரிக்க ஜனாதிபதி

ஏலியனை கண்ட அமெரிக்க ஜனாதிபதி

ஜிம்மி கார்ட்டர் அமெரிக்காவின் ஜனாதிபதியாவதற்கு முன்பு, தான் ஏலியன் வரும் பறக்கும் தட்டுகளை கண்டதை சர்வதேச யூ.எப்.ஓ-விடம் தெரிவித்திருந்தாராம். தான் வானத்தில் சுயமாக தோன்றிய ஓர் ஒளியை கண்டேன், அது சுற்றியப்படிய வானில் நகர்ந்து சென்றது, என அவர் கூறியிருந்தார்.

Image Courtesy

ஆபிரகாம் லிங்கன்

ஆபிரகாம் லிங்கன்

ஜனாதிபதி ஆவதற்கு முன்னர் ஆபிரகாம் லிங்கன் நிறைய கஷட்டப்பட்டார் என நாம் அறிந்தது உண்டு. இவர் மதுக்கடை விற்பனையாளராக இவரது நண்பர் வில்லியம் பெர்ரியுடன் நடத்தி வந்தாராம்.

Image Courtesy

சூதாட்டத்தில் வீட்டை இழந்த ஜனாதிபதி

சூதாட்டத்தில் வீட்டை இழந்த ஜனாதிபதி

அமெர்காவின் முன்னாள் ஜனாதிபதி வார்ரேன் ஹார்டிங் போக்கர் விளையாடுவதில் முகுந்த ஆர்வம் கொண்டவர். ஒருமுறை சூதில், சீனாவில் இருந்த விலை மதிப்பற்ற இல்லத்தை பெட் வைத்து இழந்துவிட்டார்.

Image Courtesy

வர்த்தக மாநாட்டில் வாந்தி எடுத்த புஷ்

வர்த்தக மாநாட்டில் வாந்தி எடுத்த புஷ்

ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் ஆசியாவில் ஜப்பான் பிரதமர் நடத்திய ஓர் வர்த்தக மாநாட்டில், விருந்து தொகுப்பாளர் மீது வாந்தி எடுத்து மயங்கி விழுந்தாராம். இந்த நிகழ்வு குறித்து தனி விக்கிபீடியா பக்கம் ஒன்று இருக்கிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Nine Strange Facts About American Presidents

Nine Strange Facts About American Presidents, take a look.
Desktop Bottom Promotion