உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த ஆச்சரியமான பொருட்கள்!!!

By: John
Subscribe to Boldsky

நாம் கனவில் மட்டும் நினைத்துப் பார்க்கும் சில பொருள்கள் விலையில் மட்டும் அதிகமாக இருக்கும். ஆனால், கனவிலும் கூட நினைக்க முடியாத அளவு சில பொருள்கள், விலையையும் தாண்டி, பணம் இருந்தால் இப்படி கூடவா பொருள்கள் தயாரிப்பார்கள் என்று உச்சுகொட்ட வைக்கிறது.

உலகத்தில் உள்ள மிகவும் அதிகச் செலவுள்ள முதன்மையான 5 நகரங்கள்!!!

பெரும்பாலும் இந்த பொருள்களின் விலைகள் பல மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் முக்கிய புள்ளிகளின் பொருள்களும் இதில் உள்ளடங்கி இருக்கின்றது. இனி, வாயை பிளக்க ஆயத்தமாக இருங்கள்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிறிஸ்டல் பியானோ

கிறிஸ்டல் பியானோ

மெல்லிசை கருவியான பியானோவை முழுக்க கிறிஸ்டல் கற்கள் கொண்டு உருவாக்கியுள்ளனர். இது, உலகிலேயே வைத்து மிகவும் விலை உயர்ந்த இசைக்கருவி என்ற புகழ் கொண்டுள்ளது. இதன் விலை 3.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

Image Courtesy

மிதக்கும் காந்த படுக்கை

மிதக்கும் காந்த படுக்கை

நமது நாட்டில் காந்த படுக்கை என்றாலே பித்தலாட்டம் தான் நினைவிற்கு வரும். ஆனால், இது, உண்மையிலேயே காற்றில் மிதந்த நிலையில் இருக்கும் காந்த படுக்கை ஆகும். இது நிலத்தில் இருந்து 1.2 அடி உயரத்தில் மிதக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் எடை 2000 பவுண்ட்ஸ். விலை, 1.6 மில்லியன் டாலர்கள்.

Image Courtesy

இணையதளம்

இணையதளம்

Insure.com எனும் இணையதளத்தின் மதிப்பு 16 மில்லியன் அமெரிக்க டாலர்களாம். உலகிலேயே வைத்து அதிக விலையில் இருக்கும் இணையம் இதுதான்.

லியோபோல்டா வில்லா

லியோபோல்டா வில்லா

பிரெஞ்சு நாட்டின் ஓர் கடற்கரை ஓரமாக கட்டப்பட்டிருக்கும் இந்த வில்லாவின் மதிப்பு 506 மில்லியன் அமெரிக்க டாலர்கள். உலகிலேயே இரண்டாவது விலை உயர்ந்த வீடு இதுதான். இதனுள், மருத்துவமனைகளும் இருக்கின்றது.

Image Courtesy

தங்கம் பதிக்கப்பட்ட புகாட்டி

தங்கம் பதிக்கப்பட்ட புகாட்டி

உலகின் முதன்மை கார்களில் ஒன்றானது புகாட்டி.ப்ளோ ரிட்டா எனும் ஓர் பெரும் பணக்காரார், புகாட்டி வேய்ரோன் (Bugatti Veyron) என்னும் காரை தங்க தட்டுகள் கொண்டு உருவாக்கி வைத்துள்ளார். இதன் விலை, 10 மில்லியன் டாலர்கள். 2.8 வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டது இந்த கார்.

Image Courtesy

201 காரட் ரத்தினகற்கள் பதித்த கடிகாரம்

201 காரட் ரத்தினகற்கள் பதித்த கடிகாரம்

201 காரட் ரத்தினகற்கள் பதித்த கடிகாரம், இதன் விலை 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

Image Courtesy

புகைப்படம்

புகைப்படம்

அன்றியாஸ் குர்ஸ்கி எனும் ஜெர்மன் கலைஞன் எடுத்த இந்த புகைப்படம் 4.3 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போய் சாதனை செய்துள்ளது. உலகிலேயே மிக அதிகமாக ஏலம் எடுக்கப்பட்ட புகைப்படம் இதுதானாம். இது, 1999ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம்.

Image Courtesy

பிக்காசோவின் ஓவியம்

பிக்காசோவின் ஓவியம்

உலகின் சிறந்த ஓவிய கலைஞன் என்று புகழப்படும் பிக்காசோ கடந்த 1905ஆம் ஆண்டு வரைந்த ஓவியம் இது. இது, 104 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போனது.

Image Courtesy

வைர சிறுத்தை காப்பு

வைர சிறுத்தை காப்பு

எட்வர்ட் VIII மற்றும் வால்லிஸ் சிம்ப்சன் ஆகிய இருவருக்கு மத்தியில் காதல் சின்னமாய் திகழ்ந்த இந்த வைர சிறுத்தை காப்பு தான் உலகிலேயே விலை உயர்ந்த காப்பாக கருதப்படுகிறது. இதன் விலை 12.4 மில்லியன் டாலர்கள்.

Image Courtesy

பறவையின் இறகு

பறவையின் இறகு

அழிந்த பறவை வகையான "Huia Bird" எனும் பறவையின் இறகு 10,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புடையதாக இருக்கிறது. இதை பெயர் தெரியாத ஒருவர் ஏலத்தில் எடுத்ததாகக் கூறப்படுகிறது.

Image Courtesy

கார்டு விளையாடுபவர்களின் ஓவியம்

கார்டு விளையாடுபவர்களின் ஓவியம்

கத்தார் நாட்டின் அரச குடும்பத்திற்கு சொந்தமாக இருக்கும் இந்த ஓவியம் 260 மில்லியன் டாலர் கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதை, பிரபல பிரெஞ்சு கலைஞர் பபவுல் செஸ்சேன் (Paul Cezzane) என்பவர் வரைந்துள்ளார்.

Image Courtesy

அண்டில்லா வீடு

அண்டில்லா வீடு

அம்பானியின் "அண்டில்லா" இல்லம் உலகிலேயே மிக விலை உயர்ந்த வீடாக கருதப்படுகிறது. இதன் மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

படகு

படகு

"யாச் ஹிஸ்ட்ரி சுப்ரீம்" எனப்படும் 100,000 கிலோ தங்கம் மற்றும் பிளாட்டினம் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த படகின் மதிப்பு 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். கண்ணாடிகளாக 18 காரட் வைரத்தை பயன்படுத்தியுள்ளனர் என்பது கொசுறு தகவல்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Most Expensive Things On This Planet

Do you know about the most expensive things on this planet? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter