விஷ்ணு பகவானைப் பற்றி அதிகமாக தெரியாத சில தகவல்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

இந்து மதத்தில், மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஸ்வரன் (அதாவது சிவபெருமான்) தான் உச்ச சர்வ வல்லமையுள்ள கடவுள்களாக கருதப்படுகின்றனர். இந்தியா, நேபால் மற்றும் உலகத்தில் உள்ள பல பகுதிகளில் இந்த மூன்று கடவுள்களுக்கும் பல கோவில்கள் உள்ளது.

சிவபெருமானுக்கு மிக அதிக அளவிலான பக்தர்கள் உள்ளனர். ஆனால் விஷ்ணுவும் பிரம்மனும் இந்த எண்ணிக்கையில் மிக தொலைவில் எல்லாம் இல்லை. விஷ்ணு பகவானும் கூட இந்து மதத்தில் மிக புகழ் பெற்ற கடவுளாகும். பக்தர்கள் மத்தியில் இவர் பிரபலமாக இருப்பதற்கான சில காரணங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரம்மனின் பிறப்பு மற்றும் அண்டத்தின் உருவாக்கம்

பிரம்மனின் பிறப்பு மற்றும் அண்டத்தின் உருவாக்கம்

அண்டம் உருவாவதற்கு முன்பு, ஒன்றுமில்லாத மிகப்பெரிய கடலில் மிதந்த படி, விஷ்ணு பகவான் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் விழிக்கும் போது, அவர் கலக்கியதால் அவர் வயிற்றில் இருந்து ஒரு தாமரை பிறந்தது. மலர்ந்த அந்த தாமரை பிரம்மனை பிறக்க செய்தது. அதன் பிறகு தான் பிரம்மன் நம் அண்டத்தை உருவாக்கினார்.

விஷ்ணு பகவானின் 10 அவதாரங்கள்

விஷ்ணு பகவானின் 10 அவதாரங்கள்

இந்து மதத்தின் பல பிரதான கடவுள்கள் முக்கிய அவதாரங்களை எடுத்துள்ளனர். விஷ்ணு பகவானோ பத்து அவதாரங்களை எடுத்துள்ளார். மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமண, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, கல்கி ஆகியவைகள் தான் அந்த அவதாரங்கள்.

விஷ்ணு பகவானின் உறைவிடம்

விஷ்ணு பகவானின் உறைவிடம்

விஷ்ணு பகவானின் உறைவிடத்தை பரம் பத்மம் என கூறுவார்கள்; அதாவது உச்ச வானளாவிய உறைவிடம். மோட்சம் பெறுகிற ஆன்மாக்கள் இங்கே தான் வாழ்கின்றன.

விஷ்ணு நாராயணன்

விஷ்ணு நாராயணன்

நாராயணன் என்பது மாறுவேடத்தில் உள்ள விஷ்ணு பகவானே. பூலோகத்திற்கு வந்து, முக்கியமான தகவல்களை தெரிவித்து, விஷயங்கள் இடக்கு முடக்காக போகாமல் தடுக்க அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைக்க அவர் இந்த வடிவத்தை தேர்ந்தெடுத்தார்.

விஷ்ணுவும் லக்ஷ்மியும்

விஷ்ணுவும் லக்ஷ்மியும்

தன் மனைவியான லக்ஷ்மி தேவி இல்லாமல் விஷ்ணு பகவானை பார்க்க முடியாது. அனைத்து படைப்பாற்றல் திறனுக்கும், லக்ஷ்மி தேவியின் ஆற்றல் திறனே வேராக உள்ளது. அவர் விஷ்ணுவை எப்போதும் எங்கேயும் பின் தொடர்வார்.

விஷ்ணு பகவானின் நான்கு கைகள்

விஷ்ணு பகவானின் நான்கு கைகள்

பெரும்பாலும் நான்கு கைகள் உள்ளபடி தான் விஷ்ணு பகவான் சித்தரிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு கையும் கீழ்கூறியவற்றை பிரதிபலிக்கிறது - நல்லொழுக்கம், கடமை, வெற்றி மற்றும் பொருள் செல்வம், இன்பம் மற்றும் விடுதலை.

புத்தர் விஷ்ணு பகவானின் அவதாரமா?

புத்தர் விஷ்ணு பகவானின் அவதாரமா?

சொல்லப்போனால், புத்தர் விஷ்ணு பகவானின் அவதாரமா என்பது விவாதமாகவே இருந்து வருகிறது. பல இந்து மத பிரிவுகள் புத்தரை விஷ்ணு பகவானின் அவதாரமாக நம்பி, ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் பிறரோ புத்தரை மிகவும் வளர்ச்சியடைந்த ஆன்மாவின் அவதாரமாக கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lesser Known Facts About Lord Vishnu

Lord Vishnu too, is a very popular deity in Hinduism. So let us explore what makes him so popular among his devotees:
Story first published: Sunday, September 6, 2015, 11:01 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter