For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல்லி சாஸ்திரப்படி, பல்லி நம் உடலில் எங்கே விழுந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?

By Ashok CR
|

இந்திய புராணத்தின் படி, மிருகங்கள் என்பது என்றுமே ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளது. ஆனால் அதில் நமக்கு மிகவும் பிடிக்காத ஒன்று உள்ளது என்றால் அது தான் வீட்டில் காணப்படும் பல்லி. ஊர்ந்து செல்லும் உயிரின வகைகளில் நாம் அதிகமாக வெறுப்பது இந்த வீட்டு பல்லியாக தான் இருக்கும்.

சிவபுராணத்தின் படி ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

அப்படி நாம் வீட்டில் பல்லியை பார்க்கும் போது, நாம் உடனே கொடுக்கும் ரியாக்ஷன் - அருவருப்பாக உணர்வது. அதோடு நில்லாமல் அதனை விரட்டுவதில் குறியாக இருப்போம். ஆனால் நம் பண்டைய இந்திய புராணத்தில் இதற்கனவே ஒரு படிப்பு இருந்தது உங்களுக்கு தெரியுமா? அது தான் பல்லி சாஸ்திரம்.

கருட புராணத்தில் கூறப்பட்டுள்ள கொடிய தண்டனைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 பல்லி - கேது

பல்லி - கேது

பல்லி என்பது கேதுவை குறிக்கிறது. கேது என்பது ஸ்வரபானு அசுரனின் உடலாகும். அவனுடைய தலையை வெட்டியது விஷ்ணு பகவானாகும். பல்லி கத்துவது முதல், அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை பல முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் ஓர் அர்த்தத்தை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. தீபாவளியன்று வீட்டில் பல்லியை காணவில்லை என்றால் வெளிச்சங்களின் பண்டிகையான தீபாவளி முழுமை பெறுவதில்லை. தீபாவளி அன்று பல்லியை காண நேர்ந்தால் குடும்பத்திற்கு செல்வமும் வளமும் வந்து சேரும் என நம்பப்படுகிறது.

பல்லி தலையில் விழுவதன் அர்த்தம்

பல்லி தலையில் விழுவதன் அர்த்தம்

பல்லி ஒருவரின் தலையில் விழுந்தால், வரப்போகும் கெட்ட நேரத்திற்கு அவர் தன்னை தானே தேற்றிக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு மற்றவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு, அலைக்கழிக்கப்பட்ட மன நிம்மதி அல்லது குடும்பத்தில் மரணம் ஏற்படலாம். ஆனால் தலையில் விழுவதற்கு பதிலாக முடியின் மீது விழுந்தால் ஏதோ வகையிலான நன்மை கிட்டும்.

முக பகுதியில் புருவம், கன்னத்தில் விழுந்தால்...

முக பகுதியில் புருவம், கன்னத்தில் விழுந்தால்...

ஒருவரின் முகத்தில் பல்லி விழுந்தால், சீக்கிரமே உங்கள் வீட்டு கதவை உறவினர் தட்டலாம். உங்கள் புருவத்தின் மீது விழுந்தால், ராஜ பதவியில் இருப்பவரிடம் இருந்து உங்களுக்கு உதவி கிடைக்கும். ஆனால் அதுவே உங்கள் கன்னம் அல்லது கண்களில் விழுந்தால், ஏதோ ஒன்றுக்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.

மேல் உதடு, கீழ் உதடு, மூக்கு, வலது காதில் விழுந்தால்...

மேல் உதடு, கீழ் உதடு, மூக்கு, வலது காதில் விழுந்தால்...

மேல் உதட்டின் மீது விழும் போது செல்வ இழப்பு ஏற்படும். அதுவே கீழ் உதடு என்றால் சொத்து பெருகும் என அர்த்தமாகும். உங்கள் மூக்கின் மீது பல்லி விழுந்தால், நீங்கள் நோய்வாய் படலாம். வலது காதின் மீது பல்லி விழுந்தால் நீண்ட ஆரோக்கியமான வாழ்வை நீங்கள் வாழ்வீர்கள் என அர்த்தமாகும்.

வாயில் அல்லது கழுத்தில் விழுந்தால்...

வாயில் அல்லது கழுத்தில் விழுந்தால்...

உங்கள் வாயின் மீது விழுந்தால், ஏதோ ஒன்றை கண்டு நீங்கள் பயப்பட போகிறீர்கள் என அர்த்தமாகும். ஆனால் கழுத்தின் மீது விழுந்தால் உங்கள் விரோதிகள் அழிக்கப்படுவார்கள்.

இடது கை அல்லது வலது கையில் விழுந்தால்...

இடது கை அல்லது வலது கையில் விழுந்தால்...

இடது கையின் மீது பல்லி விழுந்தால், உங்களுக்கு பாலியல் ரீதியான சந்தோஷங்கள் கிடைக்கும். இதுவே வலது கை என்றால் உங்கள் உடல்நலம் பெருவாரியாக பாதிக்கப்படும்.

வலது மணிக்கட்டு, தொப்புள், தொடை, முட்டி, கணுக்கால், பிட்டம்

வலது மணிக்கட்டு, தொப்புள், தொடை, முட்டி, கணுக்கால், பிட்டம்

வலது மணிக்கட்டில் விழுந்தால், ஏதோ வகையில் பிரச்சனை எழலாம். பல்லி விழும் இடம் உங்கள் தொப்புள் என்றால் உங்களுக்கு மதிப்புமிக்க கற்களும், ரத்தினங்களும் கிடைக்கும். மறுபுறம், அது உங்கள் தொடையில் விழுந்தால் உங்கள் பெற்றோருக்கு நீங்கள் வருத்தத்தை ஏற்படுத்துவீர்கள். முட்டி, கணுக்கால் மற்றும் பிட்டத்தின் மீது விழுந்தால் பொதுவான நன்மை ஏற்படும்.

பாதத்தில் அல்லது பிறப்புறுப்பில் விழுந்தால்...

பாதத்தில் அல்லது பிறப்புறுப்பில் விழுந்தால்...

பாதத்தில் பல்லி விழுந்தால் வருங்காலத்தில் பயணம் மேற்கொள்வீர்கள். பிறப்புறுப்பின் மீது விழுந்தால் கஷ்டகாலம் மற்றும் வறுமையை அது குறிக்கும்.

குறிப்பு

குறிப்பு

மேற்கூறிய பட்டியல் ஒரு சாராம்சம் மட்டுமே. காரணம் பல்லி விழுந்தால் ஏதோ பலன் உண்டு என்பதை குறிக்கும் வகையில் நம் உடலில் 65-க்கும் அதிகமான உறுப்புகள் உள்ளது. அதே போல் ஒருவரின் பாலினத்தை பொருத்தும் இது மாறுபடும்.

பல்லி கத்துவது

பல்லி கத்துவது

பல்லி கத்துவதையும் கூட இந்த வகையில் கூறலாம். எந்த திசையில் இருந்து உங்களுக்கு சத்தம் கேட்கிறது, அந்த நாளின் நேரம், அந்த வாரத்தின் நாள் போன்ற சில விஷயங்களையும் நீங்கள் கருத வேண்டும். அப்போது தான் அதன் சரியான அர்த்தம் புரியும்.

 பரிகாரம்

பரிகாரம்

பல்லி விழுவதால் ஏற்படும் தீமைகளுக்கு பரிகாரம் உள்ளது என ஏடுகள் கூறுகிறது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உடனே குளித்து விட்டு கோவிலுக்கு செல்ல வேண்டும். அப்படி இல்லையென்றால், உங்கள் பூஜை அறையில் விளக்கு ஏற்றலாம், ம்ரித்யுன்ஜெய மந்திரத்தை ஜெபிக்கலாம், பஞ்சகவ்யா உண்ணலாம், தங்கத்தை தானமாக அளிக்கலாம், விளக்கெண்ணெய் கொண்டு மண் விளக்குகள் ஏற்றலாம்.

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட பல்லி உள்ளது. அதனுடன் சூரியன் மற்றும் சந்திரனின் சித்திரத்தையும் காணலாம். அந்த பள்ளிகளை தொடுவதால் நம் மீதுள்ள தீய தாக்கங்கள் மற்றும் முன்னாள் மற்றும் வருங்காலத்தில் வரப்போகும் தோஷங்கள் நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Gauli Shastra And How It Affects Our Life

Did you know that ancient Indian mythology has a whole stream of study dedicated to it called the Gauli Shastra? The lizard is thought to represent Ketu. Ketu is the body of the asura Swarabhanu, who's head was cut off by Lord Maha Vishnu. Everything, from the lizard's chirping to the part of our body it falls upon, is thought to have a specific significance and is supposed to mean something.
Desktop Bottom Promotion