தமிழ் புத்தாண்டு நாளான இன்று நடந்த திகைக்க வைக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

ஆரியர்களின் வருகைக்கு பிறகே தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாள் அன்று கொண்டாடப்படுகிறது என்று சில வரலாற்று கூற்றுகள் கூறுகின்றன. அதற்கு முன்பே வரை, தை முதல் நாளை தான் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடி வந்தனர். உழவை அடிப்படைத் தொழிலாக வைத்திருந்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முட்டாள்கள் தினத்தன்று நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள்!!!

ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல, ஒவ்வொரு மனிதனின் மனதும் ஆயிரம் எண்ணங்களை பிரதிபலிப்பதைப் போல. ஒவ்வொரு நாளும் நமது உலகத்தில் வியக்கவைக்கும் வகையிலும், திகைக்க வைக்கும் வகையிலும் பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.

இயற்கை சீற்றத்தினால் அழிந்த உலக நகரங்கள்!!!

பல முக்கியமான நபர்களின் பிறந்த நாட்கள், ஒரு கிலோ எடையுள்ள பனிக்கட்டி மழை பெய்தது, இயற்கை சீற்றங்கள், போர் நிகழ்வுகள் என நன்மைகளும், தீமைகளும் கலந்த நாளாக இருக்கிறது சித்திரை ஒன்று. இதைப் பற்றி விரிவாக இனி தெரிந்துக் கொள்வோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உலக சித்தர்கள் நாள்

உலக சித்தர்கள் நாள்

உலக சித்தர்கள் நாள் (World Siddha day) என்பது சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

அம்பேத்கர் பிறந்தநாள்

அம்பேத்கர் பிறந்தநாள்

இந்திய சட்டப்புதகத்தை இயற்றிய பெருமைக்கு உரிய டாக்டர். அம்பேத்கர் அவர்களுடைய பிறந்தநாள் இன்று. பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர், இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகப் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபிரகாம் லிங்கன் சுடப்பட்டார்

ஆபிரகாம் லிங்கன் சுடப்பட்டார்

கடந்த 1865 ஆண்டு இதே நாளன்று, அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஜோன் வில்க்ஸ் பூத் என்பவனால் சுடப்பட்டார்

தாமஸ் ஆல்வா எடிசன்

தாமஸ் ஆல்வா எடிசன்

தொமஸ் எடிசன் ஒளிப்படங்களைப் பாவித்து அசையும் படக்காட்சியை காட்டும் கினட்டஸ்கோப் (kinetoscope) என்ற அசையும் ஒளிப்படக்கருவியை கடந்த 1894 ஆம் ஆண்டு இதே நாளில் தான் காட்சிப்படுத்தினார்.

டைட்டானிக்

டைட்டானிக்

உலகின் மிக உயர்ந்த கேளிக்கை கப்பலான டைட்டானிக் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளான நாள் இன்று. கடந்த 1912 ஆம் ஆண்டு இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. மறுநாள் இந்த விபத்தினால் 1,503 பலியானதாக செய்திகள் வெளியாயின.

பம்பாயில் குண்டுவெடிப்பு

பம்பாயில் குண்டுவெடிப்பு

இதே நாளில், கடந்த 1944 ஆம் ஆண்டு பம்பாய் துறைமுகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர்

பனிக்கட்டி மழை

பனிக்கட்டி மழை

வங்காள தேசத்தில் 1 கிலோ எடையுள்ள பனிக்கட்டி மழை கடந்த 1986 ஆம் ஆண்டு பொழிந்தது. இந்த சம்பவத்தினால் 92 பேர் மரணமடைந்தனர்.

சரியாக 13 ஆண்டுகள் கழிந்து...

சரியாக 13 ஆண்டுகள் கழிந்து...

ஆஸ்திரேலியா, சிட்னியில் பலமான பனிக்கட்டி மழை பொழிந்ததில் $ 1.7 பில்லியன் பெறுமதியான சேதம் ஏற்பட்டது. சரியாக 13 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற பனிக்கட்டி மழை வங்காள தேசத்தில் பொழிந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

April Fourteen Isn't Alone A Tamil New Year

Do you know April 14 is not alone Tamil new year, there are so many interesting and astonishing things happened on this same day.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter