சமூக வலைத் தளங்கள் கற்றுத் தரும் 5 முக்கிய வாழ்க்கைப் பாடங்கள்!!

By: Karthikeyan Manickam
Subscribe to Boldsky

சமூக வலைத் தளங்கள் நாள்தோறும் பெருகி வருகின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், லிங்க்ட்-இன் உள்ளிட்ட ஏராளமான சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கினர், அதாவது 100 கோடிக்கும் அதிகமான பேர் ஃபேஸ்புக்கையும், 30 கோடி பேர் ட்விட்டரையும் பயன்படுத்தி வருகின்றனர். இதுப்போன்ற சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தேவையில்லாத பிரச்சனைகளை நிறையப் பேர் சந்திப்பதும், மேலும் நிறைய நேரம் அநாவசியமாக செலவழிவதும் உண்மை தான்.

மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!

இருந்தாலும் இந்த சமூக வலைத் தளங்கள் நமக்கு வாழ்க்கையில் நிறையப் படிப்பினைகளையும் கற்றுக் கொடுக்கிறது. எனவே, இவற்றிலிருந்து நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டால், நமக்கு மிகவும் நல்ல விஷயங்களைத் தான் அவை கற்றுத் தரும்.

சமூக வலைத் தளங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய 5 முக்கியப் பாடங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லைக் பண்ணுங்க!

லைக் பண்ணுங்க!

சமூக வலைத் தளத்தில் ஏதாவது ஒரு மெசேஜையோ, வீடியோவையோ, படத்தையோ பார்த்தால், தைரியமாக லைக் போடலாம். யாரும் ஏதும் சொல்வார்களோ என்று பயப்பட வேண்டியதில்லை. அதே தைரியத்துடன் உங்கள் ரியல் வாழ்க்கையிலும் உங்களுக்குப் பிடித்திருப்பவர்களை லைக் பண்ணுங்கள். வெளிப்படையாக உங்கள் விருப்பத்தைத் தெரியப்படுத்துங்கள்.

அன்லைக் வேண்டாம்!

அன்லைக் வேண்டாம்!

ஃபேஸ்புக்கைப் போலவே, உண்மை வாழ்க்கையிலும் 'அன்லைக்' பட்டனைத் தூக்கிக் கடாசி விடுங்கள். அனைத்தையும் விரும்புங்கள்; அனைவரையும் விரும்புங்கள்!

கமெண்டஸ் வீசுங்க!

கமெண்டஸ் வீசுங்க!

சமூக வலைத் தளங்களில் கமெண்ட்ஸ் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. தயங்காமல் உங்கள் கமெண்ட்டுகளை அள்ளி வீசுங்கள். மற்றவர்கள் என்ன கமெண்ட்ஸ் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளக் கற்றுக் கொள்ளுங்கள். நல்ல கமெண்ட்டுகளை மட்டும் மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரிஜினல் வாழ்க்கையிலும் கமெண்ட்ஸ் எனப்படும் விமர்சனங்கள் முக்கியம்!

ஷேர் பண்ணுங்க!

ஷேர் பண்ணுங்க!

சமூக வலைத் தளங்களில், நீங்கள் லைக் பண்ணிய விஷயங்களை பிறரிடம் ஷேர் செய்வது வழக்கம். அதேப்போல் உண்மை வாழ்க்கையிலும் உங்களுக்குக் கிடைத்த சந்தோஷ அனுபவங்களை உறவினர்களிடமும் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். அது உங்களையும் அவர்களையும் அதிகம் மகிழ்விக்கும்.

புதிய நட்புகள்!

புதிய நட்புகள்!

சமூக வலைத் தளங்களில் புது உறவுகளையும், நட்புக்களையும் ஏற்படுத்திக் கொள்ள எத்தனையோ அழைப்புகளை அனுப்புகிறோம்; பெறுகிறோம். ரியல் வாழ்க்கையிலும் இதே போல் புது நட்புக்களைத் தயங்காமல் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 Life Lessons From The Social Media

There are many lessons that you can learn from social media. Here are some of those. Try to apply these rules in your life and this way facebook will show you right ways to success. 
Please Wait while comments are loading...
Subscribe Newsletter