Latest Updates
-
Navratri 2026: யானை வாகனத்தில் வரும் துர்கா தேவியால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரங்க இவங்க தான்! -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. -
குரு அதிசார பெயர்ச்சி பலன் 2026 - பாதிப்பு யாருக்கு? பரிகாரம் என்ன? - ஜோதிடர் கணிப்பு! -
புரட்டாசி ஸ்பெஷல் செட்டிநாடு கல்யாண பிரிஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
ஓம நீர் Vs சோம்பு நீர் - இவற்றில் உண்மையில் செரிமானத்திற்கு சிறந்தது எது? -
அக்டோபர் 19-ல் சொந்த ராசியில் அஸ்தமனமாகும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், பணம் பெருகும்.. -
கல்யாண வீட்டு பூரி மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 11 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு வீண் செலவுகள் தேடிவரப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navaratri 2026: இந்த நவராத்திரியில் ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா உருளைக்கிழங்கோட சேர்த்து இந்த மாதிரி குருமா பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும்
Tamil New Year 2026 Chithirai Kani: சித்திரை கனி காணுதல் என்றால் என்ன? தட்டில் என்னென்ன பொருட்களை வைக்கணும்?
Tamil New Year 2026 Chithirai Kani: அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி பிறக்கவுள்ளது. தமிழில் உள்ள 60 ஆண்டுகளில், இந்த ஆண்டு பராபவ வருடம் பிறக்கப் போகிறது.
சூரியன் 12 மாதங்கள் 12 ராசிகளிலும் தனது பயணத்தை முடித்து, மேஷ ராசியில் மீண்டும் பயணத்தை தொடங்கும் போது புதிய ஆண்டு தொங்குகிறது. அந்த வகையில் ஏப்ரல் 14 ஆம் தேதி பராபவ ஆண்டின் முதல் மாதமான சித்திரை பிறக்கவுள்ளது. இந்த சித்திரை மாதத்தின் முதல் நாள் மிகவும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு பிறந்த முதல் நாளில் பாரம்பரியமாக ஒரு சடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. முக்கியமாக இந்த சடங்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பின்பற்றப்பட்டு வரும் மிகவும் முக்கியமான சடங்காகும். அது தான் 'சித்திரை கனி காணுதல்'. இதை விஷூ கனி, கனி காணுதல், சித்திரை கனி என்றும் அழைப்பர்.
சரி, இந்த சித்திரை கனி காணுதல் என்றால் என்ன? இந்த கனி காணும் தட்டில் என்னென்ன பொருட்களை வைக்க வேண்டும் மற்றும் இதன் பின்னிருக்கும் சுவாரஸ்யமான கதை என்னவென்பதை இப்போது காண்போம்.
சித்திரை கனி காணுதல் என்றால் என்ன?
காலம் காலமாக சித்திரை கனி காணும் வழக்கம் தமிழ் மக்களிடையே உள்ளது. அதாவது தமிழ் புத்தாண்டிற்கு முந்தைய நாள் இரவு வீட்டை சுத்தம் செய்துவிட்டு, ஒரு தட்டில் முக்கனிகளான மா, பலா, வாழையுடன், வெற்றிலை பாக்கு, எலுமிச்சை, தங்க நகைகள், தங்க காசுகள், வெள்ளி நாணயங்கள், மங்களரமான பொருட்களான மஞ்சள், குங்குமம், பூ மற்றும் பணம், நாணயங்கள் போன்றவற்றை வைத்து, அதற்கு முன் ஒரு கண்ணாடியை வைத்து, பூஜை அறையில் சாமிக்கு முன் வைக்க வேண்டும்.
பின் தமிழ் புத்தாண்டின் அதிகாலையில் எழுந்ததும், வீட்டில் உள்ளோர் அனைவரும் நேராக பூஜை அறைக்கு வந்து இந்த தட்டை பார்த்துவிட்டு, கண்ணாடியில் முகத்தை பார்த்து, கைகளால் அவற்றை தொட்டு வணங்க வேண்டும். இதையே கனி காணுதல் என்று அழைப்பர்.
இப்படி பித்தாண்டின் முதல் நாளில் எழுந்ததுமே இந்த மங்களகரமான பொருட்கள் நிறைந்த தட்டை காணும் போது, அந்த ஆண்டு முழுவதுமே மங்களகரமாகவும், செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்பது நம்பிக்கை.
கனி காணுதல் பின்னிருக்கும் சுவாரஸ்யமான கதை
சித்திரை கனி/விஷூ கனி காணுதல் சடங்கானது ராமாயணத்துடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. புராணங்களின் படி, ராவணன் சிவபெருமானின் தீவிர பக்தனான ராவணன், உலகில் தான் தான் பெரியவன் என்ற ஒரு அகந்தையுடன் இருந்தான். மேலும் தன்னுடைய அனுமதி இல்லாமல் எதுவும் நடக்கக்கூடாது என்றும் நினைத்தான். ஒருமுறை சூரியன் உதிப்பது கூட ராவணணுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. சூரியக் கதிர்களானது அவனது அனுமதி இல்லாமல் அவனது வீட்டிற்குள் நுழைந்தது. இதனால் கடுமையான வெப்பம் வீட்டிற்குள் நுழைந்ததைக் கண்டு ராவணன் சூரியனுடன் போர் தொடுக்க முடிவெடுத்தான்.
இதனால் சூரியன் ராவனனுடன் போர் புரிய பயந்து , தன்னுடைய கதிர்களை பூமியின் மீது படுவதை நறிறுத்தினார். இப்படி சூரிய எதிர்கள் பூமியின் மீது படுவது நின்றவுடன், பயிர்கள் வாடத் தொடங்கின, உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. ஸ்ரீராமர் மக்களை காப்பாற்ற வரும் வரை, அப்பகுதியில் உள்ள மக்கள் இருளிலேயே இருந்தனர். போரில் ராமர் இராவணனை வென்று வீழ்த்திய பின், மீண்டும் சூரிய ஒளி வீசத் தொடங்கியது. இதை நினைவு கூறும் வகையில் தான் கனி காணுதல், விஷூ கனி கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
