30 வயதை தாண்டிய திருமணமாகாத ஆண்களைப் பற்றி நினைக்கும் 10 விஷயங்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

திருமணமாகாத அனைத்து ஆண்களும் சல்மான் கானை போல் தகுதியான பேச்சுலருக்கான அதிர்ஷ்டத்தையும், அழகையும் பெறுவதில்லை. 30 வயதை அடையும் எந்த ஒரு ஆணாக இருந்தாலும் சரி, சமுதாயத்தின் பார்வையில் படத் தொடங்கி விடுவார்கள். திடீரென பார்த்தால் அவர்களைப் பற்றி தான் பரவலாக பேசுவார்கள். அதற்கு காரணம் அவருக்கு இன்னும் திருமணம் ஆகாதது தான். இந்தியாவில் 30 வயதாகியும் திருமணமாகாத ஆண்களின் நிலை சற்று கஷ்டம் தான்.

அவர்களின் திருமணம் பற்றி அனைவரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்து விடுவார்கள். அவர்களிடம் இருந்து திருப்திகரமான பதில்கள் வரவில்லை என்றால் தாங்களாகவே சில யூகங்களை உருவாக்கி கொள்வார்கள். "அவன் சந்நியாசி போல இருக்கானாமே", "அவர் போதை பொருட்களுக்கு அடிமை ஆயிட்டானமே", "அவன் ஆம்பளையே இல்லையாமே" என்றெல்லாம் இஷ்டத்திற்கு கதை கட்டி விட ஆரம்பித்து விடுவார்கள். திருமணமாகாத ஆண்களைப் பற்றி இப்படி பல கதைகளை உருவாக்கி விடுவார்கள். ஆனாலும் மறுபக்கம் இருந்து பார்த்தால் அதற்கான காரணம் அப்படியே வேறு மாதிரியாக இருக்கும்.

சில ஆண்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் திருமணம் செய்யாமல் இருப்பார்கள். இன்னும் சிலரோ சரியான பெண்ணை தேடிக் கொண்டிருப்பார்கள். எப்படி இருந்தாலும் சரி, திருமணமாகாத ஆண்கள் என்றால் தவறாகவே புரிந்து கொள்ளப்படுவார்கள். ஆனால் கல்யாணமான அவர்களின் ஆண் நண்பர்களோ கல்யாணம் செய்யாமல் இருந்த போதே சொர்க்கமாக இருந்தது என கூறுவார்கள். ஆனால் அவர்களின் உறவினர்கள், குடும்பம் மற்றும் அக்கம் பக்கத்தினர்கள் எல்லாம் அவர்களை திருமணம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவார்கள். இந்தியாவில் கல்யாணமாகாமல் இருப்பது ஒன்றும் லேசுபட்ட காரியமல்ல. 30 வயதிலும் கூட கல்யாணமாகாத ஆண்களைப் பற்றி அனைவரும் பேசும் விந்தையான விஷயங்களைப் பற்றி பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொறுப்பின்மை

பொறுப்பின்மை

நீங்கள் சாதாரணமாக இருந்தாலுமே கூட நீங்கள் பொறுப்பில்லாமலும், மன ரீதியாக முதிர்ச்சி அடையாமலும் இருப்பதாக அவர்கள் கூறுவார்கள். திருமணத்தின் மீது உங்களுக்கு அவ்வளவு தீவிரம் இல்லை என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.

வேலையில்லாதது

வேலையில்லாதது

நீங்கள் நல்லதொரு நிறுவனத்தில் பணி புரிந்தாலும் கூட, உங்களுக்கு நல்ல வேலை இல்லை என்றே அனைவரும் நினைப்பார்கள். அதனால் தான் உங்களுக்கு இன்னும் பெண் அமையவில்லை எனவும் அவர்கள் கூறுவார்கள்.

இரவு முழுவதும் பார்ட்டி கொண்டாடுவது

இரவு முழுவதும் பார்ட்டி கொண்டாடுவது

உங்களுக்கு கிடைக்கும் அத்தனை நேரத்தையும் பார்ட்டி செய்து கொண்டாடி வருகிறீர்கள் என நண்பர்கள் நினைப்பார்கள். ஆனால் உங்களுக்கு தான் தெரியும், சனி ஞாயிறு ஆனாலும் கூட உங்கள் முதலாளி உங்களை அலுவலகத்திற்கு வரவழைத்து பிழிந்து எடுக்கிறார் என்பது.

 பார்க்கும் பெண்களை எல்லாம் வளைத்து போடுவது

பார்க்கும் பெண்களை எல்லாம் வளைத்து போடுவது

உங்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டாம் என்பதாலும், நீங்கள் தனியாக இருப்பதாலும், நீங்கள் ஊரில் இருக்கும் பெண்களுடன் சுற்றி திரிகிறீர்கள் எனவும் கதை கட்ட ஆரம்பித்து விடுவார்கள்.

போதைப் பொருட்கள்

போதைப் பொருட்கள்

நீங்கள் போதைக்கு அடிமை ஆகியுள்ளீர்கள் என உங்கள்ளின் அக்கம் பக்கத்தினர் உங்களை ஒரு மாதிரியாக பார்க்க தொடங்கி விடுவார்கள். அதற்கு அவர்கள் கூறும் ஒரு காரணம் - 30 வயது ஆகியும் கூட இன்னும் நீங்கள் திருமணம் செய்யாமல் இருப்பது. திருமணமாகாத ஆண்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளில் இதுவும் ஒன்றாகும்.

போதிய பண வசதி கிடையாது

போதிய பண வசதி கிடையாது

மிகவும் எளியது இது! பார்ட்டி மற்றும் போதைப் பொருட்கள் என உங்கள் பணத்தை எல்லாம் அதில் தண்ணியாக செலவு செய்கிறீர்கள் என அனைவரும் பேசுவார்கள். அதனால் தான் உங்களிடம் போதிய பண வசதி இல்லை. பணம் இல்லாததால் திருமணமும் இல்லை!

சந்நியாசி வாழ்க்கை

சந்நியாசி வாழ்க்கை

நீங்கள் சந்நியாசி வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க போகிறீர்கள் என பேசுவார்கள். அதனால் அனைவருடன் சேர்ந்து வாழ விரும்பமாட்டர்கள் எனவும் கூறுவார்கள். சுருக்கமாக சொன்னால், அவர்கள் சமுதாயத்துடன் சேர்ந்து வாழ தகுதியற்றவர்கள் ஆவார்கள்.

ஆணே இல்லை

ஆணே இல்லை

திருமணமாகாத ஆண்களைப் பற்றி அனைவரும் செய்து கொள்ளும் மிகவும் விந்தையான கற்பனை இதுவாகத் தான் இருக்கும். பெண்களை விட உங்களுக்கு ஆண்களின் மீது நாட்டமிருப்பதால் தான் நீங்கள் திருமணம் செய்யவில்லை என கூறுவார்கள்.

அம்மா பிள்ளை

அம்மா பிள்ளை

நீங்கள் தனியாக வாழ்ந்து, யாருடனும் அவ்வளவாக ஒட்டி வாழாததால், நீங்கள் அம்மா பிள்ளை என முடிவு கட்டி விடுவார்கள். சரி, அப்படியே இருந்தாலும் என்ன பிரச்சனை?

திருட்டுத்தனமான காதல்

திருட்டுத்தனமான காதல்

உங்கள் சொந்த பந்தங்கள் கொண்டு வரும் அனைத்து சம்பந்தங்களையும் நீங்கள் தட்டி கழிப்பதால், நீங்கள் யாரையோ ரகசியமாக காதலித்து வருகிறீர்கள் என அவர்கள் கூற தொடங்கி விடுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Things People Think Of Unmarried Men Over 30

An unmarried man at 30 and 35 face lots of problems. Life of an unmarried man in India is difficult.
Subscribe Newsletter