For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகத்தில் உள்ள மிகவும் ஆபத்தான 10 போதைப் பொருட்கள்!!!

By Ashok CR
|

சில போதை வஸ்துக்கள் நமக்கு மிகவும் தீமையான மற்றும் அழிவை ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை நம் உடலில் ஏற்படுத்தும் என எண்ணிலடங்கா ஆய்வுகள் உறுதி செய்துள்ளது. அடிமையாவது என்பது பொதுவாக மூளை சம்பந்தப்பட்ட நோயாகும். ஆனால் ஹெராயின் மற்றும் மீதம்ஃபீடமைன் போன்ற போதை பொருட்களைப் பயன்படுத்தினால், அதன் தாக்கங்கள் மூளையோடு நின்றுவிடுவதில்லை என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

உடல் ரீதியான சிக்கல்களும் கூட எழலாம். உலகத்தில் உள்ள மிக ஆபத்தான போதை வஸ்துக்களைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். உலகத்தில் உள்ள ஆபத்தான சில போதைப் பொருட்கள், நம்மை அடிமையாக்கும் போதைப் பொருட்களின் பட்டியலிலும் இடம் பெறுகிறது.

இவ்வகை போதைப் பொருட்களை பயன்படுத்துவது பல நாடுகளில் சட்ட விரோதம் என்றாலும் கூட, போதிய சட்டமின்மை மற்றும் போதிய கைது நடவடிக்கைகள் இல்லாததால், போதைக்கு அடிமையாகும் பிரச்சனை பெரியளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலகத்தில் உள்ள ஆபத்தான போதைப் பொருட்களை பற்றி இப்போது பார்க்கலமா? "உலகத்தில் உள்ள மிக கொடிய போதைப் பொருட்கள்" என்ற அடைமொழிக்கு கீழும் இவைகளை கொண்டு வரலாம்.

இதோ உலகத்தில் உள்ள மிகவும் தீங்கான 10 போதை பொருட்கள்... தொடர்ந்து படியுங்கள்! ஆபத்தின் விளைவை கொண்டு ஏறுவரிசையில் அவைகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மரிஜுவானா

மரிஜுவானா

மரிஜுவானா என்பது பெரும்பாலும் ஒரு பொழுதை கழிக்கும் போதை பொருளாகும். இந்த பட்டியலில் இதுவும் இடம் பிடித்திருந்தாலும் கூட மற்ற போதை பொருட்களின் ஒப்பிடுகையில் இதனை பெரும்பாலும் காண முடிவதில்லை. இருப்பினும், இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்துவதன் காரணத்தினால் இதுவும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

MDMA

MDMA

எக்ஸ்டஸி (மெய்மறந்த இன்பம்) என பொதுவாக அழைக்கப்படும் MDMA என்பதும் ஒரு குறிப்பிட்ட அளவு வரையில் பெரிய ஆபத்தை ஏற்படுத்துவதில்லை. பல நாடுகளில் இதனை பயன்படுத்துவது சட்ட விரோதமானது. இதனை தொடர்ச்சியாக பயன்படுத்தினால், உங்கள் மத்திய நரம்பியல் அமைப்பை அது வெகுவாக பாதிக்க கூடும். MDMA என்பது பார்ட்டிகளில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான போதை பொருளாகும். இது நெருக்க உணர்வை ஏற்படுத்தி நன்னிலை உணர்வு தூண்டி விடும். அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால் ஆபத்தில் போய் முடியும்; குறிப்பாக, மதுபானத்துடன் சேர்ந்து பயன்படுத்தினால்.

கேட்டமைன்

கேட்டமைன்

உலகத்தில் உள்ள மிக தீங்கான போதை பொருட்களின் பட்டியலில் அடுத்த வருவது கேட்டமைன். இதனை சிறிது காலத்திற்கு பயன்படுத்தி வந்தாலே போதும், அது சித்தப் பிரமையை தூண்டி விடும். பிரமைகள் என்ற நூதனக் காட்சிகள் கேட்டமைனுடன் சம்பந்தப்பட்டுள்ளது.

கிரிஸ்டல் மெத்

கிரிஸ்டல் மெத்

ப்ரேகிங் பேட் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பிறகு இந்த போதை பொருள் பெரியளவில் புகழை அடைந்துள்ளது. கிரிஸ்டல் மெத் பல அளவிலான தாக்கங்களை ஏற்படுத்தும். இது பெரும்பாலும் மூளையின் செயல்பாட்டை தான் பெரிதும் பாதிக்கிறது. இதனை அடிக்கடி பயன்படுத்தினால் பிரமை, ஞாபக மறதி மற்றும் இதர தாக்கங்களையும் ஏற்படுத்தும். இதை பயன்படுத்துவதை நிறுத்தினாலும் கூட அதன் தாக்கங்கள் கடுமையாகவே இருக்கும்.

கோகைன்

கோகைன்

புகழ் பெற்ற பார்ட்டி போதைப் பொருளான கோகைன், மிகவும் ஆபத்தான போதை பொருட்களின் பட்டியலில் அடுத்த இடத்தை பிடிக்கிறது. அதிகமாக அடிமைப்படுத்தும் போதை பொருட்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது. இது அதிக அளவிலான டோப்பமைன் என்ற மூளை உண்டாக்கும் நல்ல உணர்வை ஏற்படுத்தும் ரசாயனத்தை வெளியேற்றும். இதன் பயன்பாட்டை நிறுத்தினால், அதன் தாக்கங்களை எடுத்துக் கொள்வதும் கஷ்டமாக இருக்கும். இதனால் மன ரீதியாக ஏற்படும் பாதிப்பை தவிர உடல் ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படும்.

அல்கஹால்

அல்கஹால்

அதிக அளவிலான விபத்துக்களுக்கு காரணமாக இருக்கும் அல்கஹால், இங்குள்ள அனைத்து போதைப் பொருட்களை விட ஆபத்தானவையாக கருதப்படுகிறது.

புகையிலை

புகையிலை

மரணங்களின் எண்ணிகையை பொருத்தவரை, உலகத்திலேயே மிக கொடிய போதை பொருளாக புகையிலை கருதப்படுகிறது. மரிஜுவானா மற்றும் இதர பொழுபோக்கு போதைப் பொருட்களை விட இது மோசமானதாகும். பல நாடுகளில் அரசாங்கத்திற்கு பெரிய அளவிலான வருவாயை ஈட்டித்தடும் மூலமாகவும் இது விளங்குகிறது. அதனால் தான் என்னவோ இது இன்னமும் சட்ட விரோதம் ஆக்கப்படவில்லை.

LSD

LSD

சக்தி வாய்ந்த மாயத்தோற்ற போதைப் பொருளாக விளங்குகிறது LSD (லைசெர்ஜிக் ஆசிட் டைதிலமைத்). இதனை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் மிக கொடிய, மீள முடியாத சித்த பிரம்மையை உண்டாக்கி விடும். பிரம்மை மற்றும் மருட்சியையும் இது தூண்டி விடும். ஒரு முறை பயன்படுத்தினால், இதனால் ஏற்படும் போதை 12 மணி நேரத்திற்கு நீடிக்கும்.

ஹெராயின்

ஹெராயின்

போதைப் பொருட்களின் ராணியாக அறியப்படும் ஹெராயின் தான் இந்த உலகத்தில் உள்ள மிகவும் தீங்கான போதை பொருளாக கருதப்படுகிறது. ஹெராயின் பயன்படுத்தியுள்ள போது, மூளையில் வெளிப்படுத்தப்படும் டோப்பமைனின் அளவு புணர்ச்சி பரவச நிலையின் போது வெளிப்படுவதை விட 100 மடங்கு அதிகமாக இருக்கும். ஹெராயின் பழக்கத்தை நிறுத்துவதால் ஏற்படும் தாக்கத்தை குறைக்க மீதம்ஃபீடமைன் போன்ற மிதமான போதைப் பொருட்களை லேசாக பயன்படுத்த வேண்டி வரும். இந்த பழக்கத்தை நிறுத்துகையில் அது மரணத்தில் போய் முடிகிறது என பல சான்றுகள் கூறுகிறது. இதனை நீண்ட காலத்திற்கு பயன்படுத்தி வந்தால், மூளையில் உண்டாகும் தாக்கங்களை மறுபடியும் சீர்படுத்த முடிது.

ஸ்பீட்பால்

ஸ்பீட்பால்

ஹெராயின் மற்றும் கோகைனின் மரண சேர்க்கை தான் ஸ்பீட்பால். இது உங்களை மற்றொரு புதிய கோணத்திற்கே அழைத்துச் செல்லும். ஹெராயினுக்கு அடிமையானவர்களுக்கு அதிலிருந்து போதிய போதை கிடைக்கவில்லை என்றால் அவர்கள் ஸ்பீட்பாலை விரும்புவார்கள். ஸ்பீட்பாலை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் மரணம் ஏற்படுவது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Most Dangerous Drugs In The World

Let us now look at these 10 most dangerous drugs in the world. They also come under the tag of "deadliest drugs in the world". Here are the 10 most harmful drugs in the world. Read on... The drugs in the list are ranked in ascending order of their deadly quotient.
Desktop Bottom Promotion