Latest Updates
-
அக்டோபர் 19-ல் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
ராகுவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு சாப்பிடுங்க - எடை டக்குனு குறையும் -
ஒரே ஃபேஸ் பேக்கில் முகம் பளிச்சுன்னு ஆகணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் பேக் போடுங்க.. -
சோப்பு நுரை ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் கஞ்சர்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
1 கப் அரிசி மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்து கோவில்கள் அனைத்தும் ஏன் எப்போதும் 12 மணிக்கு மேல் மூடப்படுகிறது தெரியுமா? -
வாஸ்துப்படி இந்த 3 செடிகளை வீட்டில் தவறான இடத்துல வெக்காதீங்க.. இல்ல பணம் தண்ணியா செலவாகும்.. -
பன்னீர் வாங்குனா இந்த மாதிரி தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்
வாஸ்துப்படி வீட்டில் இந்த 5 பொருட்களை வாங்கி வையுங்க.. பணப் பிரச்சனையே வராது!
Vastu Tips In Tamil: அனைவருமே மகிழ்ச்சியான மற்றும் செல்வ செழிப்பான வாழ்க்கையையே வாழ விரும்புகிறோம். அதற்காக கடினமாக உழைக்கவும் செய்கிறோம். ஆனால் என்ன தான் கடினமாக உழைத்தாலும், சில சமயங்களில் அதற்கான பலன் கிடைக்காமல் போகும். இதற்கு நாம் குடியிருக்கும் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நிறைந்த பொருட்கள் காரணமாக இருக்கலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு பொருளுமே ஒவ்வொரு ஆற்றலை கொண்டுள்ளன. அதனால் தான் நம் வீட்டில் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருளும் அந்த வீட்டில் உள்ளோரின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் நேர்மறை ஆற்றல் நிரம்பிய பொருட்களை வீட்டில் வைத்திருக்கும் போது, அது அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிப்பதோடு, செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியை குடியிருக்க செய்யும்.

அதுவும் குறிப்பிட்ட சில பொருட்களை வீட்டில் வாங்கி வைக்கும் போது, அது அதிர்ஷ்டத்தை ஈர்த்து, வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரும். அதுமட்டுமின்றி தொழிலில் நல்ல வளர்ச்சியையும், நிதி நிலையில் எதிர்பாராத முன்னேற்றத்தையும் கொண்டு வரும். இப்போது நல்ல அதிர்ஷ்டத்திற்காக வீட்டில் வைத்திருக்க வேண்டிய மங்களகரமான பொருட்கள் எவையென்பதைக் காண்போம்.
1. பகவத் கீதை
இந்து மதத்தில் பகவத் கீரை ஒரு புனிதமான நூலாக கருதப்படுகிறது. இந்த புனிதமான புத்தகத்தை வீட்டில் வைத்திருப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, வாழ்வில் முன்னேற்றத்தைக் காண வழிவகை செய்யும். அதுவும் இந்த பகவத் கீரையை பாராயணம் செய்வது மனதிற்கு அமைதியை தந்து, மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. ஒருவரது மனம் ரிலாக்ஸாக இருந்தாலே, அவரால் எதையும் தன்னம்பிக்கையுடன் செய்து வெற்றி காண முடியும்.
2. வெள்ளி நாணயம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் வெள்ளி நாணயத்தை வைத்திருப்பது மிகவும் நல்லது. எப்படியெனில் வெள்ளி சந்திரனுடன் தொடர்புடையது. எனவே இதை வைத்திருக்கும் போது மன அமைதி கிடைத்து, மனநிலை சிறப்பாக இருக்கும். இப்படிப்பட்ட வெள்ளி நாணயத்தை வீட்டின் பூஜை அறையிலோ அல்லது பணம் வைக்கும் இடத்திலோ வைத்திருந்தால், அது நிதி நிலையை வலுப்படுத்துவதோடு, வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்கும்.
3. ஐந்து சோழிகள்
சாஸ்திரத்தின் படி, சோழிகளானது லட்சுமி தேவியுடன் தொடர்புடையது. ஏனெனில் சோழிகளானது கடலில் தோன்றியதாக கூறப்படுகிறது. இந்த கடல் அரசனின் மகள் தான் லட்சுமி தேவி. எனவே இந்த சோழியானது செல்வத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, 5 முழு சோழிகளை எடுத்து, மஞ்சள் பூசி, வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி நாட்களில் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்து வந்தால், வீட்டில் செல்வம் பெருகுவதோடு, செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியையும் மகிழ்விக்கும்.
4. மஞ்சள் வேர்
நம்பிக்கைகளின் படி, மஞ்சள் விஷ்ணு பகவானுடன் தொடர்புடையது. விஷ்ணு பகவான் எங்கு உள்ளாரோ, அங்கு லட்சுமி தேவியும் இருப்பார். எனவே இந்த மஞ்சள் வேர் அல்லது மஞ்சள் கட்டியை பணம் வைக்கும் இடத்திலோ வைத்தால், அது பண வரவை அதிகரிப்பதோடு, வீட்டில் நிதி நிலை உயரவும் வழிவகை செய்யும்.
5. ரோஜாப்பூ செடி
ரோஜா பூக்கள் லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்த பூ. வாஸ்துப்படி, இந்த ரோஜாப் பூ செடியை வீட்டில் வைத்திருப்பது மிகவும் நல்லது. அதுவும் வீட்டில் அதை சரியான இடத்தில் வைத்து வளர்க்கும் போது, வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இதன் மூலம் வீட்டு சூழல் இனிமையாக இருக்கும். லட்சுமி தேவியும் வீட்டில் வசிப்பதோடு, அவரது பரிபூர்ண ஆசி கிடைத்து, வீட்டில் நிதி நிலையும் உயரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
