Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...! -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா? -
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...! -
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
வாஸ்துப்படி, வீட்டில் இந்த ஓவியங்களை வையுங்க.. அது அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் கொண்டு வரும்..
Vastu Tips In Tamil: நம் ஒவ்வொருவருக்குமே நாம் குடியிருக்கும் வீடு தான் சொர்க்கம். இப்படிப்பட்ட வீட்டை ஒவ்வொருவரும் அழகாக வைத்துக் கொள்ள விரும்புவோம். அதற்காக வீட்டின் அழகை மேம்படுத்த பல்வேறு பொருட்களை வாங்கி வைப்போம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கும்.
சிலருக்கு வீட்டை செடிகளால் அலங்கரிக்க பிடிக்கும். இன்னும் சிலருக்கு வீட்டை பழங்கால பொருட்களால் அல்லது அழகான போட்டோக்கள் அல்லது ஓவியங்களால் அலங்கரிக்க பிடிக்கும். உங்களுக்கு ஓவியங்கள் பிடிக்குமானால், உங்கள் வீட்டை ஓவியங்களால் அழகுபடுத்த விரும்பினால், சந்தைகளில் ஏராளமான அழகான ஓவியங்கள் விற்கப்படுகின்றன.

வாஸ்துப்படி நமது வீட்டில் வைத்துள்ள ஒவ்வொரு பொருட்களுமே அந்த வீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே ஓவியங்களை வாங்கி வீட்டில் வைப்பதாக இருந்தால், வாஸ்துப்படி ஓவியங்களை தேர்வு செய்யுங்கள்.
சில ஓவியங்கள் உங்கள் வாழ்க்கை, அன்பு மற்றும் அதிர்ஷ்டத்தை மேம்படுத்தும் வல்லமை கொண்டவை . கீழே வாஸ்துப்படி வீட்டில் வைக்கக்கூடிய 5 ஓவியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு எந்த ஓவியம் பிடிக்குமோ, அதை வாங்கி வைத்து நன்மை பெறுங்கள்.
1. ஏழு குதிரைகள் ஓவியம்
வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டில் வைக்க ஏற்ற சிறந்த ஓவியங்களாக பரிந்துரைக்கப்படும் ஒரு ஓவியம் என்றால், அது ஏழு குதிரைகள் ஓவியம். அதுவும் இது வெள்ளை குதிரைகள் நீர் அல்லது மணலில் ஓடுவது போல, நீலநிற அல்லது சூரிய அஸ்தமன வானத்துடன் இந்த ஓவியம் காணப்படும்.
பொதுவாக குதிரைகள் வேகம், வெற்றி, மற்றும் வலிமையின் அடையாளங்களாக திகழ்கின்றன. இந்த ஓவியத்தை வீட்டில் வைப்பது சமநிலை, நல்லிணக்கம், அத்துடன் ஆற்றல் மற்றும் உறுதியை உருவாக்கும். குறிப்பாக இந்த ஓவியத்தை கிழக்கு அல்லது தெற்கு திசை சுவர்களில் தொங்கவிடலாம்.
2. மலை ஓவியம்
வீட்டில் வைக்க ஏற்ற மற்றொரு ஓவியம் தான் மலை ஓவியங்கள். இந்த மலை ஓவியம் உயரமான பகுதிகளை விரும்புவோருக்கு மட்டுமல்ல, தங்கள் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பையும் விரும்புபவர்களுக்கும் ஏற்றது.
இந்த மலை ஓவியங்களை வீட்டு சுவர்களில் தொங்கவிட்டால், அது நேர்த்தியாகத் தோற்றமளிக்கும். ஆனால் இந்த ஓவியத்தை வீட்டின் தென்மேற்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு திசைகளில் தொங்க விட வேண்டும்.
3. நீர்வீழ்ச்சி ஓவியம்
இயற்கை பிரியர்களுக்கு நிச்சயம் நீர்வீழ்ச்சி ஓவியம் பிடிக்கும். இந்த நீர்வீழ்ச்சி ஓவியம் மனதிற்கு அமைதியைத் தந்து, வீட்டில் உள்ளோருக்கு மகிழ்ச்சியைத் தருவதாக கருதப்படுகிறது. மேலும் இது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தி, புதிய தொடக்கங்களுக்கு வழிவகுக்கும். அதுவும் இப்படியான ஓவியங்கள் ஆறுகள் மற்றும் ஏரிகளிலிருந்து நீர் பாய்வது போல இருக்கும்.
ஏனெனில் இந்த ஓவியம் பாயும் ஆற்றலை குறிக்கிறது. இதை வீடு அல்லது அலுவலகத்தின் வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு சுவரில் வைக்கலாம். முக்கியமாக இந்த வகை ஓவியத்தை தேர்வு செய்யும் போது, கவனமாக இருக்க வேண்டும். எப்போதும் அழகற்ற மற்றும் இருண்ட தோற்றமளிக்கும் நீர்வீழ்ச்சி ஓவியங்களைத் தவிர்க்க வேண்டும்.
4. மயில் ஓவியம்
வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க விரும்பினால் மயில் ஓவியத்தை தேர்வு செய்யலாம். மயில் ஓவியங்கள் கண்கவர் வண்ணங்களால் வீட்டிற்கு அழகையும் மகிழ்ச்சியையும் சேர்க்கின்றன. இவை உயிர்ப்பு மற்றும் செழிப்பின் சின்னங்களாகவும் திகழ்கின்றன.
அதுவும் ஜோடியாக அல்லது கூட்டமாக இருக்கும் போது மயில்கள் மிகவும் அழகாகத் தோற்றமளிப்பதுடன், வீட்டில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கின்றன. இந்த ஓவியத்தை வீட்டின் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் தொங்கவிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
5. கணபதி ஓவியம்
வாஸ்துப்படி விநாயகர் ஓவியம் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வந்து, வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்தில் உள்ள தடைகளை நீக்குகிறது. பெரும்பாலானோர் விநாயகர் சிலைகளை வைத்தாலும், ஓவியங்களும் மங்களகரமானதாகக் கருதப்படுகின்றன.
குறிப்பாக வீட்டில் பூஜை அறை இல்லாதவர்களுக்கு இது மிகவும் ஏற்றது. இந்த விநாயகர் ஓவியத்தை வீட்டு வாசலில் தொங்க விடுவது தடைகளை நீக்கும். அதுவே அலுவலகங்களில் வைத்தால் நல்ல அதிர்ஷ்டத்தையும், சாதகமான ஆற்றலையும் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












