ஒரு 5 நிமிஷம் வேலைய ஓரங்கட்டி வெச்சுட்டு வாங்க, வாழ்கையில நாம இழந்த ஒரு விஷயம் இங்க இருக்கு!

Subscribe to Boldsky

இங்கே நாம் பார்க்க போவது, பேசப் போவது வெறும் படங்களை பற்றி மட்டுமல்ல... இவை ஐந்தும் வாழ்க்கை பாடங்கள்.

முன்பெல்லாம் ஐந்து வயதில் கொண்டு போய் பள்ளியில் சேர்த்தனர். பிறகு, கிண்டர் கார்டன் என்று கூறி மூன்று வயதில் பள்ளியில் சேர்ந்தனர். இப்போது டூட்லர் என்று சொல்லி பிறந்த பத்து மாதத்தில், ஒரு வருடத்தில் குழந்தையை ஒரு இடத்தில் கொண்டு போய் அடைத்துவிடுகிறார்கள் படித்த பெற்றோர்கள்.

அரசியல், சினிமா செய்திகளை தாண்டி நாம் பெரும்பாலும் இணையங்களில் தேடி படிப்பது எதுவாக இருக்கிறது... ஆரோக்கியம், உறவுகள், வாழ்க்கை முறை... சாதாரண வயிற்று வலி, தலை வலிக்கான எளிய மருத்துவங்களை கூட இணையங்களில், டிவிகளில் வந்து ஒருவர் சொல்லித்தர வேண்டியிருக்கிறது. ஆனால், இதற்கு எல்லாம் வீட்டிலேயே தாத்தா, பாட்டி என்ற ஆல்-இன் ஆட்கள் இருந்தனர்.

பணத்தை தேடிய ஓட்டத்தில் நாம் இழந்தது மனதையும், உணர்வையும் தான்.

ஒரு ஐந்து நிமிடம் மனதில் இருந்து அனைத்தையும் ஓரம்கட்டி வைத்துவிட்டு.. இந்த ஐந்து படங்களை பாருங்கள்... நாம் எதையோ வாழ்வில் பெரிதாக இழந்து மெஷின் போன்ற வாழ்க்கை வாழ்ந்து வருகிறோமோ என்ற அச்சம் நெஞ்சுக்குள் பிறக்கும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிரியா!

சிரியா!

நாம் முதலாம், இரண்டாம் உலக போர்களின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை புடைப்படங்களில் மட்டுமே கண்டிருப்போம். ஆனால், அந்த காலக்கட்டத்தில் இரு வேறு நாடுகளின், தலைவர்களின் பகைக்கு அப்பாவி நாட்டு மக்கள் எப்படியான துயரங்களை சந்தித்திருப்பார்கள். அவர்களது வாழ்வில் எப்படியான பேரிழப்பு நடந்திருக்கும் என்பதற்கு நம் கண் முன் உதாரணமாக அமைந்தவர்கள் சிரியா நாட்டு மக்கள்.

ஒவ்வொரு நாளும் தங்கள் உயிரை கைகளில் பிடித்துக் கொண்டு... உண்ண உணவின்றி, தங்க இடமின்றி... குண்டுகள் வீசப்படும் போது... அடுத்து நொடி நம் உயிர் இருக்குமா என்ற பதட்டத்துடன் வாழும் வாழ்க்கை நரகத்தை விட கொடியது.

Image Source: Google

ஃபேஸ்புக்!

ஃபேஸ்புக்!

இன்று கண் விழிப்பதில் இருந்து, கண் மூடும் வரை நம் வாழ்வின் பெரும்பங்கை சீரழித்து கொண்டிருப்பது சமூக தளங்கள் தான். அருகே இருக்கும் நண்பனுடம் பேசுவதை காட்டிலும், அவனது ஃபேஸ்புக் வாலில் அவனை குறித்து டேக் செய்வது தான் அதிகமாக இருக்கிறது.

லைக்ஸ், கமெண்ட்ஸ், பகிர்வுகளுக்காக எதை வேண்டுமானாலும் பேசலாம், யாரை வேண்டுமானாலும் ஏசலாம் என்ற மனப்பான்மையை உருவாக்கி யுள்ளது இந்த ஃபேஸ்புக் கலாச்சாரம். ஆரம்பத்தில் படத்தை ரசித்தோம், பிறகு அதில் வரும் நட்சத்திரங்களை ரசித்தோம். இப்போது அந்த நடிகர்களின் வியாபாரம் குறித்து அலசி... அவர்கள் தோல்வியை தங்கள் தோல்வியென கருதி சனடையிட்டு கொள்கிறார்கள்.

மனித மூளையை தனக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்திவிட்டுருக்கிறது ஃபேஸ்புக்.

Image Source: Google

தொழிற்சாலை!

தொழிற்சாலை!

கடந்த நூறு ஆண்டுகளாக தான் தொழிற்சாலை புரட்சி உதயமானது. அதே நூறாண்டுகளில் தான் உலக மக்கள் அனைவரிடமும் பரவி இருந்த பணம் ஒரு கும்பலிடம் கைகளில் சிறைப்பட துவங்கியது. அதுதான் முதலாளித்துவம். முதலாளிகள் பல தொழிற்சாலைகளுக்கு உரிமையாளர்கள் ஆனார்கள். தொழிலாளிகள் வறுமையில் மட்டுமே வாட துவங்கினார்கள்.

இப்போது தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் மெஷின்களை உருவாக்கி தொழிலாளியை தெருவில் நிற்க வைக்கிறது முதலாளித்துவம். இது ஐடி எனும் டிஜிட்டல் தொழிற்சாலையையும் மெல்ல, மெல்ல பாதித்து வருகிறது.

Image Source: Google

இயற்கை!

இயற்கை!

இயற்கை என்பது நம்முள் ஒன்று... நாமும் இயற்கையும் வெவ்வேறு அல்ல என்பதை ஏனோ நாம் முற்றிலும் மறந்துவிட்டோம். வாழ்க்கை என்பது இயற்கையை சார்ந்தது. இயற்கை இன்றி நம்மால் ஒரு நாள் என்ன ஒரு நொடி கூட வாழக் முடியாது. காற்று, நீர், நிலம் அனைத்தும் மனிதனை ஒதுக்கி விட்டால் நாம் எங்கே போவோம்.

நமது ஆசை, ஆடம்பரம் காரணத்தால் இயற்கை வளத்தை அழித்து உலகை சீரழித்து வருகிறோம். இதில் நாம் சாதித்தது என்ன? நமக்கான காலாவதி நாளை நாமே துரிதமாக்கி வருகிறோம். அவ்வளவு தான்!

Image Source: Google

ஏழ்மை!

ஏழ்மை!

மனிதர்கள் மத்தியில் மனித நேயம் அதிகரிக்க வேண்டும். ஆனால், இங்கே ஏழ்மை தான் அதிகரித்து வருகிறது. மனிதர் மத்தியில் உருவாகி இருக்கும் பெரும் நோய் எவை? புற்று, பால்வினை தொற்று, காச நோய்? இல்லவே இல்லை... ஏழ்மையை தவிர பெரிய நோயை மனித சமூகம் கண்டதில்லை... பணம் இல்லாமல் ஒரு பத்து நாள் ஊர், பெயர் தெரியாத பகுதியில் வாழ்ந்து பாருங்கள். ஏழ்மையின் வலி எத்தகையது என்று புரிந்துக் கொள்ள முடியும்.

நம்மிடம் தினமும் எத்தனயோ பேர் பிச்சை கேட்டிருப்பார்கள். நாம் அவர்களை கண்டுக்கொள்ளாமல் போயிருப்போம். பிச்சை போடுவதற்கு நம் மனம் இவ்வளவு வலிக்கிறது எனில், பிச்சை கேட்க அவர்கள் மனம் எவ்வளவு வலிக்கும். ஆனால், பிச்சை நம் நாட்டில் ஒரு பக்கம் தொழிலாக மாறியிருக்கிறது என்பது பெரும் கொடுமை.

Image Source: Google

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Pictures That Shows The Sad Reality Of Today's World

    A Photo is equivalent to 1000 words. But, Few Pictures will teach us a life lessons. Especially in this current scenario, these 5 pics are very relevant to our life.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more