For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இசையால் இவ்வுலகை ஆண்ட எம்.எஸ்.சுப்புலட்சுமி!

மதுரையைச் சேர்ந்த கர்நாடக இசைப்பாடகி மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி அவர்களின் முக்கியத் தருணங்கள்

|

தன்னுடைய இனிமையான குரலால் உலக மக்களை கட்டிப்போட்டவர் இசையரசி எம்.எஸ் சுப்புலட்சுமி. குழந்தைப் பருவம் முதலே இசையே மூச்சாக கொண்டு, இசையை தன்னோடு ஐக்கிப்படுத்திக் கொண்டார். எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருக்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்து நூற்றாண்டைக் கடந்தாலும் இன்றளவும் நம் மனங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

பாமர மக்கள் மட்டுமல்லாமல் உலகத் தலைவர்களையும் தன்னுடைய இசையால் கட்டிவைத்த சுப்புலட்சுமியின் பிறந்த தினமான இன்று அவருடைய வாழ்க்கையை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இசைக்குடும்பம் :

இசைக்குடும்பம் :

மதுரையில் வாழ்ந்த சங்கீத மேதை சுவாமிநாதன் பீடில் கலைஞரான மனைவி அக்கம்மாளின் மகள் வீணை இசைக்கலைஞர் சண்முக வடிவு.இவருக்கும் வழக்கறிஞர் சுப்பிரமணிய அய்யருக்கும் மகளாக 1916 ஆம் ஆண்டு பிறந்தார் எம்.எஸ் சுப்புலட்சுமி.

இவரது சகோதர் மிருதங்க வித்வான்.

Image Courtesy

முதல் இசைத் தட்டு :

முதல் இசைத் தட்டு :

எம்.எஸ் சுப்புலட்சுமியின் முதல் குரு வீணைக்கலைஞரான அவரது தாயார் தான். துவக்கத்தில் அம்மாவின் வீணைக் கச்சேரிகளில் பாடி வந்தார். 1926 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு இசைத் தட்டில் மரகத வடிவும் செங்கதிர் வேலும் என்னும் பாடலில் சுப்புலட்சுமியின் தாயார் சண்முக வடிவின்வீணையும், சுப்புலட்சுமியின் பாட்டும் இணைந்தது.

Image Courtesy

எதிர்பாராத அரங்கேற்றம் :

எதிர்பாராத அரங்கேற்றம் :

மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் சண்முகவடிவு அம்மாள் வீணைக்கச்சேரி நடத்திக் கொண்டிருந்தார். அப்போது திடிரென தான் வாசிப்பதை நிறுத்திவிட்டு தன்னுடைய பத்து வயது மகளான சுப்புலட்சுமியை மேடைக்கு அழைத்து பாடச் சொல்கிறார்.

சிறுமியான சுப்புலட்சுமியும் சிறிதும் பயமின்றி ஹிந்துஸ்தானி மெட்டில் அமைந்திருக்கும் ஆனந்த ஜா என்ற மராட்டியப் பாடலை பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

Image Courtesy

திரையில் அறிமுகம் :

திரையில் அறிமுகம் :

அம்புஜம்மாள் என்ற எழுத்தாளர் சேவாதனம் என்ற நாவல் எழுதியிருந்தார். ஒரு முதியவருக்கு மனைவியான இளம் பெண்ணின் கதை. அது பயங்கர வரவேற்பை பெற்றதை அடுத்து அந்த நாவல் திரைப்படமாக எடுக்க நினைத்தார் அன்றைய முன்னணி இயக்குநர் கே. சுப்பிரமணியம்.

இவர் தான் எம்.எஸ்.சுப்புலட்சுமியை சேவாதனம் படத்தில் நடிக்க வைத்தார். 1938 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

Image Courtesy

திருமணம் :

திருமணம் :

ஒருமுறை மும்பைக்கு கச்சேரி செய்ய சென்றபோது ரெயிலில் அறிமுகமானார் இளைஞர் சதாசிவம். எம்.எஸ்.ஸின் தீவிர ரசிகர்.பின்னாளில் இசை அரசியை திருமணம் செய்துகொண்டார். சங்கீதத்திலும், சமூகத்திலும் தன் மனைவி சிறப்பு எய்த வேண்டும் என்ற ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர்.

Image Courtesy

சினிமா :

சினிமா :

சேவாசதனம் திரைப்படம் வெளியான அடுத்த ஆண்டு சகுந்தலை எனும் திரைப்படத்தில் நடித்தார். குளோஸ் அப் காட்சிகள் முதன் முதலாக இந்த படத்தில் தான் அறிமுகமானது.

இதனைத் தொடர்ந்து மீரா திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் சுப்புலட்சுமியை இந்திய அளவில் பெருமையை தேடித்தந்தது.

இதோடு திரைப்படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தனர். ஆனால் சதாசிவம் பத்திரிகை துவங்க நிதி தேவைப்பட்டதால் சுப்புலட்சுமியை நடிக்க சம்மதித்தார். இந்தப்படத்தில் பிரபல மராட்சிய நடிகை சாந்தா ஆப்தே சாவித்திரியாக நடிக்க சுப்புலட்சுமி நாரதராக நடித்தார்.

Image Courtesy

ஐ.நா.சபை :

ஐ.நா.சபை :

1966 ஆம் ஆண்டு ஐ.நா., சபையில் பாடினார் சுப்புலட்சுமி. உலக அமைதியை வலியுறுத்தி மூதறிஞர் ராஜாஜி எழுதிய மே தி லார்ட் பர்கிவ் அவர்சின்ஸ் என்ற ஆங்கிலப்பாடலை பாடினார். இப்பாடலுக்கு ஹாண்டல் மேனுபல் இசையமைத்தார்.

Image Courtesy

திருப்பதியில் :

திருப்பதியில் :

எம்.எஸ் சுப்புலட்சுமி பாடிய வேங்கடேச சுப்ரபாதம் எச்.எம்.வி நிறுவனம் இசைத்தட்டாக வெளியிட்டபோது அது உலகளவில் பிரபலமடைந்தது.

திருப்பதியில் வேங்கடேச சுப்ரபாதம் தினமும் கோவில் நடை திறக்கும் போது பாடப்படும். முதலில் அண்ணங்கராச்சாரியார் எனும் வைணவப் பெரியவரின் குரலில் தான் ஒலிபரப்பட்டது.

முதலில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சுப்ரபாதத்தை அங்கீகரிக்காமல் இருந்த திருப்பதி தேவஸ்தான, 1975லிருந்து ஏற்றுக் கொண்டு ஒலிபரப்ப ஆரம்பித்தது.

Image Courtesy

இசை :

இசை :

1997 ஆம் ஆண்டு கணவர் சதாசிவம் மரணமடைந்ததைத் தொடர்ந்து சுப்புலட்சுமி கச்சேரிகள் செய்வதை நிறுத்திக் கொண்டார். கடும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.எஸ். சுப்புலட்சுமி தன்னுடைய 88 வது வயதில் மறைந்தார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync life
English summary

Life histroy of M.S.Subbulakshmi

Life histroy of M.S.Subbulakshmi
Desktop Bottom Promotion