ஒரு நல்ல விசயத்திற்காக நிர்வாண போஸ் கொடுத்த 35 வயது ஆசிரியை!

Posted By:
Subscribe to Boldsky

டெபோரா ஜேம் 35 வயது நிரம்பிய ஆசிரியை. இவர் மக்கள் அவசரமாக குடல் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு கொள்ள வேண்டும் என்பதற்காக, அவர்களது கவனத்தை பெற, இந்த புற்றுநோய் குறித்த காரணிகள், அறிகுறிகள் பற்றி விவரங்கள் பகிர்ந்து கொள்ள தனது அறுவைச் சிகிச்சை காயங்களுடன் நிர்வாண படத்தை வெளியிட்டுள்ளார்.

நான் இப்படிப்பட்ட முடிவை எடுக்க ஒரே ஒரு காரணம், மக்கள் இந்த புற்றுநோய் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே என டெபோரா ஜேம் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

புற்றுநோய் சிகிச்சை தழும்புகள் உடனான தன் நிர்வாண உடலை, விழிப்புணர்வு வாசகம் எழுதிய பலகை ஏந்தி போஸ் கொடுத்த டெபோரா ஜேம்.

#2

#2

ஆரம்பக் காலக்கட்ட அறிகுறிகளை அறிந்துக் கொண்டால், இந்த புற்றுநோயில் இருந்து மக்களை காக்க முடியும் என டெபோரா ஜேம் இந்த விழிப்புணர்வு செயலில் ஈடுபட்டுள்ளார்.

#3

#3

டெபோரா ஜேம் இரு குழந்தைகளுக்கு தாய். இவர் மட்டுமின்றி இவரது சொகதறி சாரா ஜேம், தோழிகள் கரோலின், லின், சாரா கிவான், நிகோலா டார்லிங் போன்றவர்களும் இந்த விழிப்புணர்வு நிகழ்வுக்காக நிர்வாண போஸ் கொடுத்துள்ளனர்.

#4

#4

இந்த குடல் புற்று நோய்க்கு அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னர் டெபோரா ஜேம் லண்டனில், மிகவும் ஆரோக்கியமாக வாழ்க்கை வாழ்ந்து வந்த பெண்மணி.

#5

#5

சீராக மருத்துவ பரிசோதனைகள் பெற்று, மூன்று நிலை குடல் புற்றுநோய் சிகிச்சை கடந்து வந்துள்ளார் டெபோரா ஜேம்.

#6

#6

ஈஸ்டர்க்கு முன்னர் டெபோரா ஜேம்க்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சமீபத்தில் இவரது வலது நுரையீரலில் இருந்த எல்லா புற்றுநோய் கட்டிகளும் கீமோ தெரபி மூலம் அகற்றப்பட்டன.

#7

#7

இப்போதும் நிச்சயமற்ற சில சிகிச்சைகளை டெபோரா ஜேம் பின்பற்றி தான் வருகிறார். நான்காம் நிலை புற்றுநோய் கணிக்க முடியாதது. அது எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என டெபோரா ஜேம் கூறுகிறார்.

#8

#8

இன்னும், டெபோரா ஜேம்-ன் இடது நுரையீரலில் புற்றுநோய் கட்டிகள் இருக்கின்றன, அதை சீக்கிரமே அகற்றி விடுவோம் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

#9

#9

நானும் எனது தோழிகளும் இணைந்து எத்தனையோ விஷயங்கள் பற்றி பேசியுள்ளோம். ஆனால், இப்படி ஒரு புற்றுநோய் இருக்கிறது என நாங்கள் அறியவில்லை, அதிலும், எங்களில் ஒருத்திக்கே இந்த பாதிப்பு ஏற்படும் என்றும் எண்ணவில்லை. அதனால் தான் இந்த விழிப்புணர்வு செயலில் இறங்கினோம் என்கிறார் டெபோரா ஜேம்.

#10

#10

டெபோரா ஜேம்-ன் குடும்பத்தார், தோழிகள் மிகவும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். அவரது மொத்த தைரியமும் இவர்கள் தான். இந்த உறுதுணையுடன் இது சார்ந்த விழிப்புணர்வு வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார் டெபோரா ஜேம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

35 Years Old Teacher Goes Naked for an Awareness Purpose!

Deborah Jame, the 35-year-old teacher needs your attention urgently and right now.
Story first published: Saturday, May 6, 2017, 11:20 [IST]
Subscribe Newsletter