106 வயதில் லட்சங்களை வாரிக் குவிக்கும், இந்த பாட்டி செய்யிற வேலைய பாருங்க!

Posted By:
Subscribe to Boldsky

இந்த நவீன யுகத்தில் சம்பாதிக்க, பிழைக்க வழியிலை என்று கூறுபவரை தான் உண்மையில் ஊனமானவர் என குறிப்பிட வேண்டும். தங்கள் திறமையை யாருடைய உதவியும் இல்லாமல் உலகிற்கு பறைசாற்ற பெரிதும் உதவுகிறது இணையதளம்.

முக்கியமாக ஃபேஸ்புக், யூடியூப் போன்றவை. தங்களுக்கு தெரிந்த காமெடி, பாட்டு, நடனம், சமையல் குறிப்பு, அழகு குறிப்பு போன்றவற்றை வீடியோக்களாக பதிவு செய்து லட்சங்களில் சம்பாதிக்கும் இளைஞர்கள் ஏராளம்.

அதில், ஒரு மாஸ் பாட்டி தான் நாம் இங்கு காணவிருக்கும் மாஸ்தானம்மா...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

குடிவாடா!

மஸ்தானம்மா, 106 வயது மூதாட்டி. இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த குடிவாடா என்ற இடத்தை சேர்ந்தவர். இந்த வயதிலும் தனது எல்லா வேலைகளையும் தானே செய்துக் கொள்கிறார் மாஸ்தானம்மா.

சொந்த காலில்!

குடும்பத்தார் உதவி எதையும் எதிர்பாராமல், சொந்த காலில் நிற்கிறார் மாஸ்தானம்மா. ஆனால், இவர் சொந்த காலில் நிற்பது யூடியூப் உதவியுடன் என்பது தான் ஆச்சரியமே!

பேரன்!

மாஸ்தானம்மா பேரன் ஒரு நாள் இரவு நண்பர்களுடன் சேர்ந்த சமைத்து யூடியூப் சேனல் ஆரம்பித்து வீடியோ பதிவு செய்துள்ளனர். அது வைரலாகவே. பாரம்பரிய கிராமத்து உணவு பக்கம் அவர்களது பார்வை திரும்பியது.

டிரென்ட்!

உடனே, பாரம்பரிய உணவுகள் பற்றி அறிந்துக் கொள்ள தனது பாட்டி மாஸ்தானம்மா உதவி நாடி, வீடியோக்கள் பகிர துவங்கியுள்ளார். இந்த மூதாட்டியுன் பேரன் லக்ஷ்மன்.

மகிழ்ச்சி!

ஆரம்பத்தில் தனது பேரன் தன்னை வைத்து என்ன செய்கிறான் என புரியாமல் தவித்துள்ளார் மாஸ்தானம்மா. பிறகு விவரம் தெரிய பேரனை எண்ணி மகிழ்ந்து பாராட்டியுள்ளார்.

பிரபலமானவை!

விதவிதமான சிக்கன், மீன், கடல்வாழ் உயிரின உணவுகள், தோசை போன்ற உணவுகளை சமைப்பதில் மஸ்தானம்மா செம மாஸ். இவரது சமையலுக்கு அந்த ஊரே அடிமை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சாதிக்க வயது தடையில்லை!

சாதிக்க வயது தடையில்லை!

சாதிக்க, சம்பாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார் மாஸ்தானம்மா. இதற்கு பெரும் உதவியாய் இருந்தவர் பேரன் லக்ஷன். நூறு வயதை தாண்டி ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார் இந்த தளர்ச்சி அடையாத மூதாட்டி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

106 YO Granny Rocks in Youtube!

Are you still searching for jobs? look at thi 106 years old granny is the Owner of Country Foods Youtube Channel.
Subscribe Newsletter