நடுரோட்டில் மாதவிடாய் பிரச்சனையில் தவித்த பெண், ஒதுங்கி சென்ற கல் மனம் கொண்ட மக்கள்!

Posted By:
Subscribe to Boldsky

அந்த காலத்தில் மாதவிடாய் நேரத்தில் பெண்களை வீட்டிற்கு வெளிய உட்கார வைத்ததற்கு காரணம், அன்று பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. நச்சுக்களுடன் வெளியேறும் இறந்த அணுக்கள் கொண்ட இரத்தம் வீட்டில் இருக்கும் குழந்தைகள், முதியோர்கள் எளிதாக நோய் தொற்று உண்டாக வாய்ப்பாக அமையும் என்பதற்காக அவ்வாறு செய்தனர்.

ஆனால், இன்று அப்படி எந்த அச்சமும் இல்லை. சில சமயங்களில் பெண்களுக்கு குறித்த நாளில் அன்றி, ஓரிரு நாட்கள் முன் அல்லது பின் கூட மாதவிடாய் வெளிப்படலாம். அந்த நேரத்தில் அவர்களுக்கு உதவ வேண்டியது பெண்களின் கடமை மட்டுமல்ல, ஆண்களின் கடமையும் கூட. நம் சகோதரி, மனைவிக்கு இந்த நிலை உண்டானால் சும்மா பார்த்துக் கொண்டு நிற்போமா என்ன?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனிதத்தை பரிசோதித்த நிகழ்ச்சி!

மனிதத்தை பரிசோதித்த நிகழ்ச்சி!

ட்ரால்ஸ்டேஷன் என்ற நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள். பொது இடத்தில் பெண் ஒருவருக்கு மாதவிடாய் உண்டானால், மக்கள் எப்படி அதை எதிர்கொள்கிறார்கள், எவ்வாறு உதவ முன்வருகிறார்கள் என்பதை பரிசோதிக்க ஒரு நிகழ்ச்சியை உண்டாக்கியது.

உதவிக்கு வராத மக்கள்!

உதவிக்கு வராத மக்கள்!

ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் கூட யாரும் உதவிக்கு வரவில்லை. அவர் நாப்கின் போன்ற உபகரணங்களை உதவிக்கு கேட்ட போது இல்லை என்ற பதில்கள் மட்டுமே வந்தவே தவிர, உடனே யாரேனும் அவருக்கு உதவலாம், அருகில் எங்கேனும் கிடைக்குமா என எண்ணவில்லை.

இது கேளிக்கை அல்ல...

இது கேளிக்கை அல்ல...

அவர், அவர் பொறுத்து, பொறுத்து முடியாமல், செயற்கையாக அமைக்கப்பட்ட இரத்தத்தை வடிய செய்த போது, சிலர் ஆச்சரியப்பட்டனர், சிலர் அருவருப்பாக பார்த்தனர், சிலர் நகைத்தனர், இதற்கெல்லாம் மேல், ஒருவர் புகைப்படம் எடுத்தார், சில பெண்கள் காணொளிப்பதிவு செய்தனர். இது தான் மனிதமா?

மனிதம் இறந்துவிட்டதா?

மனிதம் இறந்துவிட்டதா?

இது போலியாக சித்தரிக்கப்பட்ட நிகழ்ச்சி தான், இது உண்மையாக இருந்திருந்தளும் இவர்களின் ரியாக்ஷன் இதுதான். ஆகமொத்தம் நாம் உதவ போவதில்லை, அதை படம்பிடித்து முகநூல், ட்விட்டர் போன்ற தளங்களில் பதிவு செய்து சிரிப்போம், இரக்கம் காண்பிப்போம், சோகமாக உணர்வதாய் ஸ்மைலி இடுவோம். அவ்வளவு தான் நமது மனித நேயம்.

பெண்கள் நம் நாட்டின் கண்கள்???

பெண்கள் நம் நாட்டின் கண்கள்???

உலகின் எல்லா நாடுகளும் பெண்கள் நலன் / ஆரோக்கியம் காக்க வேண்டும் என்று தான் குரல் கொடுக்கின்றன. ஆனால், எத்தனை பேர் அதற்காக உண்மையாக போராடுகிறார்கள், நேரடியாக ஏதனும் பிரச்சனை என்றால் உதவ வருகிறார்கள் என்பது கேள்விக் குறி தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

No one came Forward to help This Girl in her Period

Is Humanity Gone Away From People, No one came Forward to help This Girl in her Period
Story first published: Monday, November 14, 2016, 11:45 [IST]
Subscribe Newsletter