For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மார்பக புற்றுநோய் குறித்த "கோக்" பானத்தின் மகா மட்டமான, கேவலமான பிரச்சாரம்!!!

By John
|

இன்றைய உலக கலாச்சாரத்தை என்னவென்று உருவகப்படுத்துவது என்று தெரியவில்லை. ஒவ்வொரு கலாச்சார மாற்றமும் ஏதேனும் ஒன்றை சார்ந்து இருக்கும். அவ்வாறு தான் மனிதனின் பரிமாணம் கற்காலத்தில் இருந்து கணினி யுகம் வரை மருவி வந்துள்ளது.

கொக்கோகோலா உங்க தாகத்த மட்டும் தான் அடக்குதுன்னு நினைக்கிறீங்களா?? இதப்படிங்க பாஸ்!!!

ஆனால், இன்றைய சமூக வலைதளம், கலாச்சாரத்தை மிகவும் மோசமான, கேவலமான நிலைக்கு தள்ளிக்கொண்டு போகிறது. #IceBucketChallenge, #ScreenShotChallenge என்று தொடங்கி, இன்று பிரபல குளிர்பான நிறுவனமான "கோக்" (Coke) பானங்கள் கொண்டு, #HoldACokeWithYourBoobs Challenge என்ற மகா மட்டமான, கேவலாமான ஒரு பிரச்சாரம் பரவி வருகிறது.

"ரெட் புல்", "மான்ஸ்டர்" போன்ற எனர்ஜி ட்ரிங்க்ஸில் காளை மாட்டின் விந்தணு கலப்புள்ளதா?- அதிர்ச்சி!!

அதாவது, பெண்கள் தங்களது மார்பகங்களுக்கு நடுவில் ஏதேனும் ஓர் கோக் பானத்தின் பாட்டில்களை இறுக்க பிடித்தது போன்று புகைப்படங்கள் எடுத்து வெளியிடுவது. இன்ஸ்டாகிராம் தளத்தில் இது வைரலாக பரவி வருகிறது. ஆனால், இந்த பிரச்சாரம் மார்பக புற்றுநோய் குறித்தது என்பது தான் வியப்பிற்குரியது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள்

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள்

மார்பக புற்றுநோய் குறித்த இந்த மகா மட்டமான பிரச்சாரத்திற்கு, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளங்களில் பதிவு செய்துள்ளனர்.

மார்பக புற்றுநோயின் நிலை

மார்பக புற்றுநோயின் நிலை

சமீபத்திய கணக்கெடுப்பின் படி, உலக அளவில் பெண்களை தாக்கும் புற்றுநோய்களில் முதன்மையாக இருப்பது மார்பகப் புற்றுநோய் தான் என்று கண்டறியப்பட்டுள்ளது.

நிதித் திரட்ட

நிதித் திரட்ட

இந்த #HoldACokeWithYourBoobsChallenge என்ற பிரச்சாரம் மார்பக புற்றுநோய்க்கான நிதித் திரட்ட என்று இதில் கலந்துக் கொண்ட பலரும் கூறியிருக்கின்றனர். ஆனால், அதற்கு இதுப் போன்ற கேவலமான முறையை தான் கையாள வேண்டுமா என்ன?

கேலியாக தொடங்கப்பட்டது

கேலியாக தொடங்கப்பட்டது

#IceBucketChallenge போல. இந்த #HoldACokeWithYourBoobsChallenge வும் வெறும் கேலியாக தான் தொடங்கப்பட்டது என்று கூறுகிறார்கள்.

பிரச்சாரக்காரர்கள்

பிரச்சாரக்காரர்கள்

இதுக் குறித்து இந்த பிரச்சாரக்காரர்கள், "அமைப்பாளர்கள் மார்பக புற்றுநோயை கவர்ச்சியாக மாற்ற தான் இவ்வாறு செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்,மேலும் இதை இவர்கள் இணையத்தில் ஓர் செக்ஸியான விஷயமாக மாற்றிவிட்டனர் என்றும் அமைப்பாளர்கள் மீது இவர்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

மேலாடை இன்றி புகைப்படங்கள்

மேலாடை இன்றி புகைப்படங்கள்

பல பெண்கள், தங்களது மேலாடை இன்றி வெறும் கோக் பானத்துடன் காட்சியளித்த புகைப்படங்களை இணையங்களில், "புற்றுநோய்காக நிதித் திரட்ட" என்று பதிவேற்றி வருகின்றனர்.

லாஸ் வேகாஸில் பரவி வருகிறது

லாஸ் வேகாஸில் பரவி வருகிறது

லாஸ் வேகாஸ் பகுதியில் மார்பக புற்றுநோய் குறித்த இந்த #HoldACokeWithYourBoobsChallenge மிகவும் வைரலாக பரவி வருகிறது.

ஆண்களின் கேலி, கிண்டல்

ஆண்களின் கேலி, கிண்டல்

இதைக் கண்ட ஆண்கள், தாங்களும் அதே போன்று, புகைப்படங்களை எடுத்து இணையங்களில் பதிவு செய்து வருகின்றனர். ஆனால், இது பெண்களை கேலி, கிண்டல் செய்வது போன்று தான் இருக்கிறது.

கோக் நிறுவனத்திற்கு சம்மந்தம் இல்லை

கோக் நிறுவனத்திற்கு சம்மந்தம் இல்லை

இந்த மகா மட்டமான பிரசாரத்திற்கும், கோக் நிறுவனத்திற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லையென்றும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.

தொண்டு நிறுவனங்களும் தொடங்கவில்லை

தொண்டு நிறுவனங்களும் தொடங்கவில்லை

மார்பக புற்றுநோய் குறித்த இந்த #HoldACokeWithYourBoobsChallenge'ஐ எந்த தொண்டு நிறுவனங்களும் தொடங்கவில்லை என்றும் லாஸ் வேகாஸ் பகுதியில் கூறப்படுகிறது. பிறகு எப்படி இந்த கேவலமான பிரச்சாரத்தை ஊக்குவித்து பெண்கள் மேலாடை இன்றி புகைப்படங்களை பதிவேற்றி வருகின்றனர் என்று தான் தெரியவில்லை.

பல தரப்பு மக்கள் கண்டனம்

பல தரப்பு மக்கள் கண்டனம்

மார்பகம் என்பது ஓர் உறுப்பாக மட்டுமின்றி பெண்மையின் இலக்கணமாகவும் கருதப்படுவது. அது பெண்மையின் புனிதமாக கூறப்படுவது. மற்றும் பெண்களின் அங்கங்களை வைத்து இப்படி ஓர் கேவலமான பிரச்சாரம் மேற்கொள்வதை பல தரப்பு மக்களும் கடுமையாகக் கண்டித்து தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Worst and Blithering Challenge Of Coke For Breast Cancer

Do you know about the worst and blithering challenge of coke for breast cancer? read here.
Desktop Bottom Promotion