வாட்ஸ்-அப் குரூப்பினால் விவசாய புரட்சி செய்து, இந்திய அரசின் கவனத்தை திருப்பிய கிராமம்!!!

Posted By:
Subscribe to Boldsky

பல்லிராஜா, அணில் பண்டவனேவின் புத்திசாலி மகன். பொறியியல் படிப்பு முடித்த பட்டதாரியான பல்லிராஜா இப்போது தனது முழுநேர வேலையாக விவசாயம் பார்த்து வருகிறார். இவர் சமூக வலைதளத்தின் உதவியோடு செய்த புரட்சி மகாராஷ்டிராவின் ஓர் கிராமத்தையே வாழ வைத்து வருகிறது. அதுமட்டுமல்ல, இந்திய நாட்டில் விவசாயத்தில் ஓர் பெரும் புரட்சி செய்ய வித்திட்டிருகிறது.

நகைச்சுவை நடிகர்கள் வாழ்வில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவங்கள் : உலக நகைச்சுவை தினம்!!!

முகப்புத்தகம் மற்றும் வாட்ஸ்-அப் என்ற இரண்டு சமூக வலைத்தளங்களை விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்த இவர் பயன்படுத்திக் கொண்டார். வாட்ஸ்-அப் குரூப் ஆரம்பிப்பதற்கு முன்பு, கிருஷ்ணா பாட்டில் எனும் உர வியாபாரியுடன் கைக் கோர்த்து கொண்டார். பிறகு வாட்ஸ்-அப் குரூப் ஆரம்பித்து அதில் விவசாயிகளை ஒன்றாக இணைத்துள்ளார்.

நாடி ஜோதிடத்தின் வரலாற்று இரகசியங்கள் மற்றும் உண்மை தகவல்கள்!!!

அதில் எப்படி உரங்களையும், பூச்சு கொல்லிகளையும் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறி தனது பயணத்தை தொடக்கியுள்ளார் பல்லிராஜா.... பிறகு நடந்தது எல்லாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொழில்நுட்பம் வளர்ந்தது

தொழில்நுட்பம் வளர்ந்தது

உரம் மற்றும் பூச்சி கொல்லிகள் மட்டுமின்றி தற்போதைய விவசாயம் குறித்த, சார்ந்த தொழில்நுட்பங்களையும் வாட்ஸ்-அப் வழியாக அனைத்து விவசாயிகளுக்கும் கற்பித்துள்ளார் பல்லிராஜா.

கூட்டு முயற்சி

கூட்டு முயற்சி

உரம் மற்றும் பூச்சிக் கொல்லி குறித்து கூற கிருஷ்ணா, மற்றும் சுஜி, ஷுபாம், ராமதாஸ் போன்றவர்களை இணைத்துக் கொண்டார். இதனால், நிறைய தகவல்களும், எப்படி நல்ல பலனடைவது போன்ற விஷயங்கள் அனைவருக்கும் எளிதாக கற்பிக்க முடிந்தது. ஒரே இடம் சார்ந்து மட்டுமின்றி பல இடங்களை சேர்ந்த நபர்களை இணைத்துக் கொண்டு, தங்களது வாட்ஸ்-அப் குரூப்பை விரிவாக்கினார் பல்லிராஜா.

விவசாய தொழிநுட்ப பயிற்சி

விவசாய தொழிநுட்ப பயிற்சி

யூனுஸ்கான் எனும் விவசாய தொழிநுட்பம் சார்ந்த நபரின் உதவியோடு, விவசாயத்தில் எப்படி நல்ல வியாபாரம் செய்வது என்று அறிந்துக்கொண்டார்கள். யூனுஸ்கான், தனது பல்வேறு இடங்களில் கண்ட முன் அனுபவங்களை கூறி விரிவாக கூறியுள்ளார்.

அரசு சாரா நிறுவனம் உதவி

அரசு சாரா நிறுவனம் உதவி

இந்த கிராமத்தில் போதிய அளவு சேமிப்பு கிடங்கு இல்லாதது,பெரும் கவலையாக இருந்து வந்தது. அதற்கு உதவு முன் வந்தார் அரசு சாரா நிறுவனரான (NGO) அமோல் சைன்வர். இவர் விவாசயிகளுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருந்தார். அமோல் சைன்வர் செய்த உதவியின் மூலமாக மீண்டும் கட்டப்பட்ட சேமிப்பு கிடங்கு அந்த கிராமத்திற்கு மட்டுமின்றி பக்கத்தில் இருந்த மூன்று கிராமங்களுக்கும் பெரும் உதவியாக இருந்தது. இதற்கெல்லாம் முதல் காரணமாக அமைந்தது அந்த வாட்ஸ்-அப் குரூப் தான்.

எதிர்காலத்திற்கான திட்டங்கள்

எதிர்காலத்திற்கான திட்டங்கள்

இதனால் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் வளர்ச்சி பாதையில் பயணிக்க தொடங்கிய யாவத்மால் (Yavatmal) எனும் அந்த கிராமம், சில எதிர்கால திட்டங்களை வகுக்க ஆரம்பித்தது.

நம் கையில் விலைப்பட்டியல்

நம் கையில் விலைப்பட்டியல்

அனைத்து சந்தை வியாபார பொருட்களுக்கும் MRP இருக்கிறது. பிறகு ஏன் விவசாய பொருட்களுக்கு மட்டும் இருக்க கூடாது. விவசாயிகளின் காரணமாக தானே பயிர் விளைகிறது. எனவே, விவசாய பொருட்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட விலை இருக்க வேண்டும் (Fixed Price). பேரம் பேசக்கூடாது.

காப்பீடு

காப்பீடு

விவசாயிகளுக்கு என்று விசாலமான காப்பீடு ஏதும் இதுநாள் வரை இல்லை, இயற்கை சீரழிவுகள் ஏற்பட்டால் ஏதோ, நிவாரணங்கள் தரப்படுகிறதே தவிரே, சரியான காப்பீடுகள் எதுவும் இல்லை. எனவே, காப்பீடு அவசியம்.

தன்னிறைவு வேண்டும்

தன்னிறைவு வேண்டும்

இந்தியாவின் பெரும் பகுதிகளில் உணவை தவிர்த்து, நல்ல சாலை, பள்ளி, எலெக்ட்ரிக், மருத்துவமனைகள் என அனைத்தும் நகர பகுதிகளில் மட்டுமே இருக்கிறது. இதற்கான மாற்றம் வேண்டும். கிராம புறங்களிலும் தன்னிறைவு வேண்டும்.

நிலம் கைய்யகப்படுத்தும் சட்டம்

நிலம் கைய்யகப்படுத்தும் சட்டம்

தற்போதைய நிலம் கைய்யக படுத்தும் சட்டம், விவசாய நிலத்தையும் கூட அரசு கைய்யகப்படுத்தலாம் என்று இருக்கிறது. ஆனால், விவசாயத்திற்கென தங்களுக்கு, தங்கள் நிலம் வேண்டும். இதற்கேற்ற மாற்றங்கள் வர வேண்டும்.

தனி பட்ஜெட்

தனி பட்ஜெட்

ரயில்வே, தொழிநுட்பம் என தனி தனியாக அரசு பட்ஜெட் போடும் போது, ஏன் விவசாயத்திற்கு என ஓர் தனி பட்ஜெட் இருக்க கூடாது?? விலை ஏறும் போதும், குறையும் போதும் விவசாயிகளை குறைக் கூறும் அரசாங்கம் தான் இதற்கான தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பல்லிராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

மரியாதை

மரியாதை

இன்று, மற்ற எல்லா துறைகளுக்கும் இருக்கும் மரியாதை விவசாயிகளுக்கு மட்டுமில்லை. ஏனெனில், எங்களது நிலை இதற்கு காரணமாக இருக்கிறது. அதை நாங்களாக மாற்றிக் கொள்ள, மேற்கூறியவை உதவும். என்று பல்லிராஜா மற்றும் சுஜய் குழுவினர் கூறியிருக்கின்றனர்.

பல்லிரஜாவின் இறுதி உரை

பல்லிரஜாவின் இறுதி உரை

"அனைத்து விவசாயிகளிடமும் மொபைல் இல்லை மற்றும் அவர்கள் அனைவராலும் எங்களோடு இணையவும் முடியாத நிலையும் உள்ளது. எனவே, இதற்கான சரியான முடிவை அரசாங்கம் தான் எடுக்க வேண்டும். தயவு செய்து ஓர் நல்ல முடிவு எடுங்கள்" என்று தனது இறுதி உரையில் கூறியிருக்கிறார் பல்லிராஜா.

பிரதமருக்கு வேண்டுகோள்

பிரதமருக்கு வேண்டுகோள்

பல்லிராஜா மற்றும் அவரோடு கூட்டாக இணைந்து செயல்படும் கிராம மக்கள், இவற்றை இந்திய அரசிடமும், பிரதமரிடமும் வேண்டுகோளாக கேட்டு, ஓர் கடிதமும் எழுதவிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Image Courtesy: usf.vc

English summary

One Whatsapp Group is Trying to Change Indian Agriculture

One Whatsapp Group of Farmers in Rural Maharashtra is Trying to Change Indian Agriculture, read here for further details.
Subscribe Newsletter