பிரபல முன்னணி நடிகர் நடிகைகளின் உண்மையான லட்சியம் என்னென்னு தெரியுமா...?

By: Babu
Subscribe to Boldsky

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியம், கனவு இருக்கும். அதனை அடைய பலரும் முயற்சிப்போம். ஆனால் சூழ்நிலையின் காரணமாக நம்மால், நாம் நினைத்த துறையில் வேலை செய்ய முடியாமல் வித்தியாசமான துறையில் வேலை செய்ய வேண்டி வரும். அப்படி தான் தமிழில் முன்னணியில் உள்ள நடிகர் மற்றும் நடிகைகளில் சிலர் பிடித்த துறையில் வேலை செய்வதை விட்டு, சூழ்நிலையின் காரணமாக சினிமாவில் நடித்து பிரபலமானவர்களாக இருக்கின்றனர்.

ஒருவேளை இவர்கள் சினிமாவில் நுழையாவிட்டால் எந்த துறையில் இருப்பார்கள் என்று தெரியுமா? இங்கு சினிமாவில் நடித்து வரும், ஆனால் வேறு லட்சியம் மற்றும் கனவுடன் இருந்த பிரபல நடிகர் மற்றும் நடிகைகளின் உண்மையான கனவு பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அஜித்

அஜித்

நடிகர் அஜித் சினிமா துறையில் நுழையாவிட்டால், அவர் மிகவும் சிறந்த கார் பந்தய வீரராகியிருப்பார். இவரது கனவே கார் பந்தயத்தில் சிறந்தவராக இருக்க வேண்டுமென்பது தான். இது அனைவரும் அறிந்த ஒன்றே.

சூர்யா

சூர்யா

சூர்யா நடிகர் ஆவதற்கு முன் ஆடை ஏற்றுமதி தொழில்துறையில் 6 மாதங்களாக பணியாற்றி வந்திருந்தார். இவருக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை. இருப்பினும் குடும்ப சூழ்நிலையின் காரணமாக இவர் சினிமா துறையில் நுழைந்து தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராகத் திகழ்கிறார்.

 விஷ்ணு

விஷ்ணு

நடிகர் விஷ்ணு சிறந்த கிரிக்கெட் வீரராவார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லீக் நடத்திய போட்டியில் விளையாடிய போது இவரது கால்களில் அடிப்பட்டு பின் விளையாட முடியாமல் போனது. பின் அவர் சினிமா துறையில் நுழைந்து சிறந்த நடிகராக திகழ்ந்து வருகிறார்.

த்ரிஷா

த்ரிஷா

நடிகை த்ரிஷா ஆரம்பத்தில் குற்றவியல் உளவியலாளராக ஆசைப்பட்டார். பின் சினிமாத் துறையில் தனது கவனத்தை செலுத்தினார். இருப்பினும், இவர் சினிமாவில் நுழைய அவரது மாடலிங் ஒருவகையில் காரணமாக இருந்தது எனலாம்.

மாதவன்

மாதவன்

நடிகர் மாதவனுக்கு இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை போன்றவற்றில் ஈடுபட்டு பொது சேவை செய்வதில் ஆர்வம் அதிகம். அதற்காக அவர் விமானப் படையில் சேர முயற்சித்த போது, அவருக்கு அங்கு குறிப்பிட்டுள்ள வயதை விட 6 மாதம் அதிகம் என்பதால் அவர் நிராகரிக்கப்பட்டார். இதனால் அவர் சினிமா துறையில் தனது வாழ்க்கையை கொண்டு செய்ய வேண்டியதாயிற்று.

 ஜெய்

ஜெய்

நடிகர் ஜெய்க்கு சிறந்த இசைக் கலைஞர் ஆக வேண்டுமென்ற ஆசை உள்ளது. இவருக்கு இசை என்றால் கொள்ளைப் பிரியம். இவர் லண்டனில் உள்ள ட்ரினிட்டி கல்லூரில் கீபோட்டில் 5ஆவது கிரேடு வாங்கியுள்ளார்.

அனுஷ்கா ஷெட்டி

அனுஷ்கா ஷெட்டி

நடிகை அனுஷ்கா யோகா மாஸ்டர். இவரது கனவு சிறந்த யோகா ஆசிரியராக இருப்பது தான். இந்த விஷயமும் அனைவரும் அறிந்தது தான்.

அர்ஜுன்

அர்ஜுன்

கராத்தேவில் பிரபலமான நடிகர் புரூஸ் லீயின் 'என்டர் தி டிராகன்' படத்தைப் பார்த்துவிட்டு, தனது 16 ஆவது வயதில் கராத்தேவில் சேர்ந்து கருப்பு பெல்ட் வாங்கியவர் தான் நடிகர் அர்ஜுன். இவருக்கு கராத்தே தான் முதல் காதலியும் கூட.

நமீதா

நமீதா

நடிகை நமீதா கராத்தே, நீச்சல் மற்றும் பேட்மிண்டனில் சிறந்தவர். சினிமாவில் நடிப்பதற்கு முன், இவர் சூரட்டில் உள்ள குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சியாளராக இருந்தார். மேலும் இவருக்கு மிகவும் பிடித்தது சிறந்த நீச்சல் வீராங்கணை ஆக வேண்டும் என்பது தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Famous Tamil Celebrities Who Did NOT Want To Become Actors Or Actresses!

Many Tamil actors and actresses have had other career options in mind before going on to become stars. Read on to know their dreamcareer options.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter