தன்னை விட வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்து கொண்ட இந்திய பிரபலங்கள்!!!

By: Babu
Subscribe to Boldsky

காதலுக்கு கண்ணில்லை என்ற பழமொழியை, காதலுக்கு வயது வரம்பில்லை என்று மாற்றி காட்டிய இந்திய பிரபலங்கள் ஏராளம். அதேப்போல் அவர்களை முன்மாதிரியாக கொண்டு இந்தியாவில் பல ஆண்கள் அல்லது பெண்கள், அவர்களைப் போல் செயல்பட்டு, தன் பெற்றோர்களிடம் அடி வாங்கியவர்களும் ஏராளம்.

திருமணமான ஆண்களின் மீது காதல் கொண்ட நடிகைகள்!!!

அது என்னவென்று கேட்கிறீர்களா? ஆம், திருமணத்திற்கு வயது என்பது மிகவும் முக்கியம். பொதுவாக திருமணம் செய்யும் போது, பெண்ணை விட ஆண் மூத்தவனாக இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால் காதல் என்ற ஒன்று மக்களிடையே பரவிய பின், குறிப்பாக பிரபலங்களுக்கிடையே வந்த பின், தன்னை விட வயது அதிகமான பெண்களையும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

விவாகரத்தில் முடிந்த பிரபலங்களின் காதல் திருமணங்கள்!!!

அவர்களுள் பலரும் அறிந்த ஒரு ஜோடி தான் நம் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர். இதுப்போன்று இந்தியாவில் பல பிரபலங்கள், தன்னை விட வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளனர். சரி, இப்போது அவர்கள் யார் யார் என்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

சச்சன் டெண்டுல்கர், தன்னை விட ஆறு வயது மூத்த பெண்ணான அஞ்சலியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் இவர்கள் 18 வருடங்களுக்கு மேலாக மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். வாழ்த்துக்கள் சச்சின்.

ராஜ் குந்த்ரா

ராஜ் குந்த்ரா

ராஜ் குந்த்ரா, ஷில்பா ஷெட்டியை ஒரு 'S2' பெர்ப்யூம் நிகழ்ச்சியின் போது சந்தித்தார். மேலும் இவர்கள் இருவரும் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ராஜ் குந்த்ரா ஷில்பா ஷெட்டியை விட 3 மாதங்கள் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ்

தனுஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளான ஐஸ்வர்யாவை, நடிகர் தனுஷ் 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தனுஷ் தன் மனைவியை விட ஒரு வருடம் சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அபிஷேக் பச்சன்

அபிஷேக் பச்சன்

பாலிவுட்டில் பலராலும் பல நாட்கள் பேசப்பட்ட ஒரு ஜோடி தான் அபிஷேக்-ஐஸ்வர்யா ஜோடி. நடிகர் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயை விட 2 வருடம் சிறியவர். இந்த ஜோடிக்கு 2007 ஆம் ஆண்டு திருமணமானது.

ஃபர்ஹான் அக்தர்

ஃபர்ஹான் அக்தர்

திறமைமிக்க இயக்குநர்-பாடகர்-நடிகருமான ஃபர்ஹான் அக்தர், தன்னை விட ஆறு வயது மூத்த பெண்ணான அதுனா பாபனியை 2000 ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதும் போது சந்தித்தார். மேலும் அந்த வருடமே அவர்கள் இருவரும் திருமணம் செய்தும் கொண்டனர்.

மகேஷ் பாபு

மகேஷ் பாபு

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிகை நம்ரதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை நம்ரதா மகேஷ் பாபுவை விட 2 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷிரிஷ் குந்தெர்

ஷிரிஷ் குந்தெர்

இயக்குநர் ஷிரிஷ் குந்தெர், ஃபராஹ் கானை, தன் முதல் திரைப்படத்தை எடிட்டி செய்யும் போது சந்தித்தார். ஷிரிஷ், ஃபராஹ் கானை விட 8 வயது இளையவர். மேலும் இந்த ஜோடிக்கு 2 மகள்களும் உள்ளனர்.

சைஃப் அலி கான்

சைஃப் அலி கான்

நடிகர் சைஃப் அலி கான் கரீனா கபூரை திருமணம் செய்யும் முன், அம்ரிதா சிங் என்பவரை திருமணம் செய்திருந்தார். சைஃப் அம்ரிதாவை விட 12 வயது இளையவர். மேலும் இந்த ஜோடி 13 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து, பின் 2004 இல் விவாகரத்து வாங்கி பிரிந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Celebrities Who Married Older Women

Gone are the days, during which, the bride-to-be always was younger than the groom. But many couples in India ducked the trend and have had a successful married life. Here’s a list of top couples who debunked the age-angle theory when it came to their marriage.
Story first published: Friday, June 12, 2015, 16:27 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter