Latest Updates
-
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சல்மான் கான் தங்கை அர்பிதாவின் திருமண வரவேற்பிற்கு க்யூட்டாக வந்த கர்ப்பிணி ஜெனிலியா!
சல்மான் கானின் தங்கை அர்பிதாவின் திருமண வரவேற்பானது சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பிற்கு நிறைய பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் கர்ப்பமாக இருக்கும் நடிகை ஜெனிலியா, தனது கணவர் ரிதேஷ் தேஷ்முக்குடன் கலந்து கொண்டார்.
ஏற்கனவே க்யூட்டாக இருக்கும் ஜெனிலியா, கர்ப்பமான பின்னர் இன்னும் அழகாக காணப்படுகிறார். மேலும் சமீப காலமாக நிறைய நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுகிறார். அந்த வகையில் தவறாமல் சல்மான் கானின் தங்கையான அர்பிதா கானின் திருமண வரவேற்பிற்கும் வந்திருந்தார். அப்போது அழகான அடர் நீல நிற லெஹெங்காவை அணிந்திருந்தார். இங்கு சல்மான் கான் தங்கை அர்பிதாவின் திருமண வரவேற்பிற்கு க்யூட்டாக வந்த கர்ப்பிணி ஜெனிலியாவின் சில போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
For More Pics Click Here

ஜெனிலியாவின் உடை
கர்ப்பிணி ஜெனிலியா ரோஹித் பால் என்னும் பிரபல டிசைனர் வடிவமைத்த அடர் நீல நிற லெஹெங்காவை அணிந்து வந்திருந்தார். இந்த உடையானது காலர் நெக் கொண்டிருப்பதுடன், கோல்டன் நிற நூலால் எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது. மேலும் இவர் லெஹெங்காவின் துப்பட்டாவை வயிற்றை மறைத்த படி போட்டிருந்தார்.

ஜெனிலியாவின் ஹேர் ஸ்டைல்
நடிகை ஜெனிலியா நீல நிற லெஹெங்காவிற்கு நேர் உச்சி எடுத்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

ரித்தேஷ் தேஷ்முக்
நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் அடர் நீல நிற டாக்ஷிடோ அணிந்து வந்திருந்தார்.

ஜெனிலியாவின் மேக்கப்
ஜெனிலியா கண்களுக்கு கண் மை மற்றும் கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் அடித்து, உதடுகளுக்கு பிங்க் நிற மின்னும் லிப்ஸ் கிளாஷ் போட்டு வந்திருந்தார்.

ஜெனிலியாவின் ஆபரணங்கள்
ஜெனிலியா அடர் நீல நிற லெஹெங்காவிற்கு ஏற்றவாறு காதுகளுக்கு பெரிய காதணியையும், கைக்கு தங்க நிற வளையலும் அணிந்து வந்திருந்தார்.

க்யூட்டான சிரிப்பில் ஜெனிலியா
பொதுவாக பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது அழகாக காணப்படுவார்கள். அப்படித் தான் ஜெனிலியாவும் அழகாக காணப்படுகிறார். மேலும் தற்போது அவரது கன்னங்கள் கொழுகொழுவென்று உள்ளது. இதனால் இவரது சிரிப்பு இன்னும் அழகாக உள்ளது.

புதுமணத்தம்பதியருடன்....
இது புதுமணத் தம்பதியருடன், ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் போஸ் கொடுத்த போது எடுத்தது.



Click it and Unblock the Notifications
