விசாகப்பட்டினம் புயல் நிவாரண நிகழ்ச்சியில் பங்கு கொண்ட நடிகைகள்!!!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் வீசிய 'ஹூட் ஹூட்' புயல் அதிக சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதியானது மிகுந்த பாதிப்பிற்குள்ளாது. புயல் பாதித்த பகுதிகளை சரிசெய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், நடிகர் நடிகைகள் நிதிகளை வழங்கியதோடு, கிரிக்கெட், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பார்ட்டி போன்றவற்றை ஏற்பாடு செய்து கலந்து கொண்டு நிதிகளை திரட்டி வருகிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தென்னிந்திய நடிகைகள் மிகவும் அழகாக உடைகளை அணிந்து வந்திருந்தனர். அதில் தபு, தமன்னா, காஜல் அகர்வால், அனுஷ்கா, பிரியாமணி, அனுஷ்கா, சமந்தா, சார்மி மற்றும் பலர் குறிப்பிடத்தக்கவர்கள். இங்கு அந்த டின்னரில் கலந்து கொண்ட நடிகைகள் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தபு

தபு

நடிகை தபு ஊதா நிற புடவைக்கு, ஆரஞ்சு மற்றும் கோல்டன் நிறங்கள் கலந்த முழுக்கை கொண்ட ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார்.

பிரியாமணி

பிரியாமணி

நீண்ட நாட்களுக்குப் பின்னர் பிரியாமணியை இந்த நிகழ்ச்சியில் காண்கிறோம். நடிகை பிரியாமணி இந்த நிகழ்ச்சிக்கு வரும் போது, பிங்க் நிற பார்டர் கொண்ட தங்க நிற மின்னும் அனார்கலி அணிந்து வந்திருந்தார். குறிப்பாக தற்போது இவர் சிக்கென்று அழகாக உள்ளார்.

சார்மி

சார்மி

நடிகை சார்மி காலர் நெக் கொண்ட நீளமான நீல நிற அனார்கலி அணிந்து வந்திருந்தார்.

அனுஷ்கா

அனுஷ்கா

நடிகை அனுஷ்கா க்ரீம் நிற சல்வார் அணிந்து, பூப்பிரிண்ட் போடப்பட்ட நீல நிற துப்பட்டா அணிந்து சிம்பிளாக வந்திருந்தார். அதிலும், அவர் இந்த உடைக்கு அணிந்து வந்த ஜமிக்கி மற்றும் தங்க நிற ஹீல்ஸ் அவரை சிறப்பாக வெளிக்காட்டியது.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால், கோல்டன் நிற எம்பிராய்டரி செய்யப்பட்ட நீளமான அனார்கலியில் கலக்கலாக வந்திருந்தார்.

 பூனம் கவுர்

பூனம் கவுர்

நடிகை பூனம் கவுர், கோல்டன் எம்பிராய்டரி பார்டர் கொண்ட நியான் பச்சை நிற ஷிப்பான் புடவை அணிந்து பளிச்சென்று வந்திருந்தார்.

தமன்னா

தமன்னா

நடிகை தமன்னா நீல நிற அர்மானி உடை அணிந்து, பிங்க் நிற ஹீல்ஸ் மற்றும் பிங்க் நிற காதணி அணிந்து வந்திருந்தார்.

சமந்தா

சமந்தா

நடிகை சமந்தா ஹை நெக் கொண்ட க்ரீம் நிற பாயல் சிங்கால் லெஹெங்கா அணிந்து க்யூட்டாக வந்திருந்தார். அதிலும் இந்த உடைக்கு அவர் மேற்கொண்டு வந்த ஸ்டைல் மற்றும் அணிந்து வந்த ஆபரணங்கள் அவரை அட்டகாசமாக வெளிக்காட்டியது.

ஷன்வி

ஷன்வி

நடிகை ஷன்வி முழுக்கை கொண்ட குட்டையான வெள்ளை நிற லேஸ் உடையை அணிந்து வந்திருந்தார்.

காஜல் மற்றும் தமன்னா

காஜல் மற்றும் தமன்னா

இது நடிகை காஜல் மற்றும் தமன்னா ஒன்றாக சேர்ந்து மீடியாவிற்கு போஸ் கொடுக்கும் போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Celebrities At Memu Saitam Dinner Event

Here are some photos of Celebrities attending Memu Saitham's dinner with stars. Take a look...
Story first published: Monday, December 1, 2014, 16:06 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter