'லிங்கா' இசை வெற்றிக் கொண்டாட்டத்திற்கு கலக்கலாக வந்த அனுஷ்கா மற்றும் சோனாக்ஷி!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் 'லிங்கா' படத்தின் இசை வெற்றிக் கொண்டாட்டமானது நடைபெற்றது. அதில் அப்படத்தின் கதாநாயகிகளான அனுஷ்கா ஷெட்டி மற்றும் சோனாக்ஷி சின்ஹா கலந்து கொண்டனர். அப்போது அனுஷ்கா மற்றும் சோனாக்ஷி, அனைவரது கவனமும் அவர்களின் மேல் படும்படி கலக்கலான உடையில் வந்திருந்தனர்.

அதில் அனுஷ்கா கருப்பு மற்றும் க்ரீம் நிறங்கள் கலந்த புடவையிலும், சோனாக்ஷி மஞ்சள் நிற சூட்டிலும் வந்திருந்தனர். இதனால் அங்குள்ளோரால் யாரைக் காண்பது என்றே தெரியவில்லை. ஏனெனில் அந்த அளவில் அவர்கள் இருவருமே அட்டகாசமாகவும், அழகாகவும் வந்திருந்தனர்.

இங்கு 'லிங்கா' இசை வெற்றிக் கொண்டாட்டத்திற்கு வந்த அனுஷ்கா மற்றும் சோனாக்ஷியின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

மேலும் படங்களுக்கு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அனுஷ்காவின் புடவை

அனுஷ்காவின் புடவை

இது தான் நடிகை அனுஷ்கா 'லிங்கா' இசை வெற்றிக் கொண்டாட்டத்தின் போது அணிந்து வந்த டிசைனர் சப்யசாச்சி டிசைன் செய்த கருப்பு மற்றும் க்ரீம் நிறங்கள் கலந்த புடவை.

அற்புதமான ஜாக்கெட்

அற்புதமான ஜாக்கெட்

அனுஷ்காவை இந்த புடவையில் அற்புதமாக காட்டியது அவரது ஜாக்கெட் என்று சொல்லலாம். ஏனெனில் அனுஷ்கா இந்த புடவைக்கு அணிந்து வந்த ஜாக்கெட் அவ்வளவு அழகாக இருந்தது.

அனுஷ்காவின் ஹேர் ஸ்டைல்

அனுஷ்காவின் ஹேர் ஸ்டைல்

அனுஷ்கா தான் அணிந்து வந்த புடவைக்கு ஏற்றவாறு சைடு ஸ்வெப்ட் எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

அனுஷ்காவின் மேக்கப்

அனுஷ்காவின் மேக்கப்

அனுஷ்கா மிகவும் சிம்பிளாகத் தான் மேக்கப் போட்டு வந்திருந்தார். அதுவும் கன்னங்களுக்கு அளவாக பிங்க் நிற பிளஷ், உதடுகளுக்கு மின்னும் பிங்க் நிற லிப்ஸ்டிக் மற்றும் கண்களுக்கு கண் மை போட்டு வந்திருந்தார்.

அனுஷ்காவின் ஆபரணங்கள்

அனுஷ்காவின் ஆபரணங்கள்

அனுஷ்கா ஆபரணங்கள் அதிகம் அணியவில்லை. ஆனால் காதுகளுக்கு மட்டுமி கருப்பு நிற கல் பதித்த பெரிய காதணியை அணிந்திருந்தார்.

அழகான புன்னகை

அழகான புன்னகை

அனுஷ்காவின் புன்னகையே ஒரு தனி அழகு தான். இந்த சிரிப்பால் தான் இவர் பல ரசிகர்களை கவர்ந்துவிட்டார். அதிலும் இந்த கருப்பு நிற புடவையின் புன்னகைக்கும் போது இன்னும் அழகாக இருந்தார்.

சோனாக்ஷியின் மஞ்சள் நிற சூட்

சோனாக்ஷியின் மஞ்சள் நிற சூட்

இது தான் நடிகை சோனாக்ஷி சின்ஹா அணிந்து வந்த மஞ்சள் நிற அனார்கலி உடை. இந்த அனார்கலியை டிசைன் செய்தவர் பிரபல டிசைனர் அனிதா டாங்ரே.

சோனாக்ஷியின் ஹேர்கட்

சோனாக்ஷியின் ஹேர்கட்

சோனாக்ஷி ஹேர்கட் செய்த பின்னர், அவர் அணியும் உடைகள் அனைத்திலுமே வித்தியாசமாக காணப்படுகிறார். அதிலும் இந்த உடையில் சோனாக்ஷி க்யூட்டாக உள்ளார்.

சோனாக்ஷியின் மேக்கப்

சோனாக்ஷியின் மேக்கப்

சோனாக்ஷி லிங்கா இசை வெற்றிக் கொண்டாட்டத்தின் போது அளவாக மேக்கப் போட்டு, உதடுகளுக்கு பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

சோனாக்ஷியின் ஆபரணங்கள்

சோனாக்ஷியின் ஆபரணங்கள்

சோனாக்ஷியும் ஆபரணங்கள் அதிகம் அணியவில்லை. ஆனால் காதுகளுக்கு மட்டும் அனிதா டாங்ரே டிசைன் செய்த காதணியை அணிந்து வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Anushka Shetty And Sonakshi Sinha At Lingaa Audio Success Meet

Here are some of the images of anushka shetty and sonakshi sinha at the Lingaa Audio Success Meet. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter