கருப்பு நிற அனார்கலியில் ஜொலிஜொலித்த ஐஸ்வர்யா!!!

By: Babu
Subscribe to Boldsky

2014 ஆம் ஆண்டு கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவின் துவக்க விழாவில் நடிகை ஐஸ்வர்யா மிகவும் அழகாக, அவருக்கு பொருத்தமான நிறமான கருப்பு நிற அனார்கலி உடையில் வந்திருந்தார். இந்த கருப்பு நிற அனார்கலியானது ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு மிகவும் பிடித்த டிசைனரான சப்யசாச்சி என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

இந்த கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவிற்கு அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஷாருக்கான் போன்றோரும் வந்திருந்தனர். இங்கு 2014 கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவிற்கு ஐஸ்வர்யா ராய் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சப்யசாச்சி அனார்கலியில் ஐஸ்

சப்யசாச்சி அனார்கலியில் ஐஸ்

இது தான் ஐஸ்வர்யா ராய் பச்சன் அணிந்து வந்த கருப்பு நிற சப்யசாச்சி அனார்கலி. இந்த உடையின் அழகே அதில் செய்யப்பட்டுள்ள கோல்டன் நிற வேலைப்பாடுகள் தான்.

ஐஸ்வர்யாவின் மேக்கப்

ஐஸ்வர்யாவின் மேக்கப்

ஐஸ்வர்யா ராய் இந்த கருப்பு நிற அனார்கலிக்கு ஏற்றவாறு மேக்கப் போட்டிருப்பதுடன், உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் மற்றும் கன்னங்களுக்கு சிவப்பு நிற பிளஷ் போட்டிருந்தது அவரது அழகை அழகாக வெளிக்காட்டியது.

ஐஸ்வர்யாவின் ஆபரணங்கள்

ஐஸ்வர்யாவின் ஆபரணங்கள்

ஐஸ்வர்யா ராய் பச்சன் கருப்பு நிற அனார்கலிக்கு பெரிய காதணி மற்றும் கைகளுக்கு கோல்டன் மற்றும் சில்வர் கலந்த வளையலை அணிந்து வந்திருந்தார்.

ஐஸ்வர்யாவின் ஹேர் ஸ்டைல்

ஐஸ்வர்யாவின் ஹேர் ஸ்டைல்

ஐஸ்வர்யா பெரும்பாலும் ப்ரீ ஹேர் தான் விட்டு வருவார். அதேப் போல் தான் இந்த கருப்பு நிற அனார்கலிக்கும் சைடு ஸ்வெப்ட் எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

அபிஷேக்குடன் ஐஸ்

அபிஷேக்குடன் ஐஸ்

நடிகர் அபிஷேக் பச்சன் கருப்பு நிற குர்தா அணிந்து சிவப்பு நிற ஷால் அணிந்து வந்திருந்தார். இது அபிஷேக் பச்சனின் அருகில் ஐஸ்வர்யா புன்னகைத்த படி கொடுத்த போஸ்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

நடிகர் ஷாருக்கான் கூட இந்த விழாவிற்கு கருப்பு நிற கோட் சூட் அணிந்து வந்திருந்தார். இது மேடையில் விளக்கேற்றும் போது, அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா மற்றும் ஷாருக்கான் ஒன்றாக நின்ற போது எடுத்த போட்டோ.

மேலும் படங்களுக்கு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Aishwarya Rai Gleams In Sabyasachi At Kolkata International Film Festival 2014

Aishwarya Rai looked stunning in a black and gold Sabyasachi anarkali at the Kolkata International Film Festival 2014. Take a look. 
Please Wait while comments are loading...
Subscribe Newsletter