Just In
- 8 hrs ago
ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!
- 9 hrs ago
இந்த மந்திர வார்த்தைகள் உங்கள் திருமண வாழ்க்கையை அழகாக்குவதோடு அர்த்தமுள்ளதாகவும் மாற்றும்...!
- 9 hrs ago
இரவு உணவை தவிர்ப்பது உங்க எடையை அதிகரிக்குமா? குறைக்குமா? ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா?
- 11 hrs ago
சூட்டைக் கிளப்பும் பிகினியில் தாறுமாறு போஸ்களைக் கொடுத்து சூடேற்றிய வேதிகா!
Don't Miss
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Automobiles
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2020 பொங்கலுக்கு இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான சில யோசனைகள்!
ஒவ்வொரு பண்டிகையும் அதன் மண் மணம் மாறாமல் பாரம்பரியம் மாறாமல் கொண்டாடப்படும் போது அந்த பண்டிகை கொண்டாடப்படுவதன் நோக்கம் முற்றிலும் நிறைவேறும். குறிப்பாக நமது தென்னாட்டு பண்டிகைகளுக்கு இது பொருந்தும். தமிழ்நாட்டு பண்டிகைகளில் மிகச் சிறப்பு வாய்ந்த ஒரு பண்டிகை என்றால் அது பொங்கல் பண்டிகை. இந்த 2020 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்பது அறுவடை திருநாள் என்றாலும், இதற்கான அலங்காரங்கள் இந்த பண்டிகையை மேலும் சிறப்பாக்குகின்றன.
MOST READ: பொங்கல் பற்றிய புராணக் கதைகள்!!!
கிராமப்புறங்களில் அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படும் இந்த பண்டிகை நகர்ப்புறங்களில் அதே கருவைக் கொண்டு கொண்டாடப்படும் போது அதன் சிறப்பு நகர்ப்புறங்களிலும் சென்றடைகிறது. பாரம்பரிய முறையில் பொங்கல் பண்டிகையை நகர மக்கள் கொண்டாடி, பொங்கல் பண்டிகையைப் பற்றி பாடங்களில் மட்டுமே படிக்கும் குழந்தைகள், பாரம்பரியமான பொங்கல் பண்டிகையைப் பற்றி அறிந்து கொள்ள உதவலாம்.
MOST READ: பொங்கலுக்கு கடைப்பிடிக்கப்படும் சடங்குகள்!!!
இந்நாட்களில் இணையத்தின் மூலம் அந்த ஒரு அலங்காரத்தையும் மேம்படுத்த முடியும். எனவே, எங்கள் பதிவின் மூலம் நீங்கள் இன்று ஒரு புதிய தகவலை அறிந்து கொள்ளுங்கள். பொங்கலுக்கு உங்கள் வீட்டை அலங்கரிக்க உதவும் எட்டு தனித்துவமான யோசனைகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடி பொங்கல்
இன்று நகர்ப்புறங்களில் பெரும்பாலானவர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி வாசலில் சூரியனுக்கு முன் பொங்கல் பானை வைத்து பொங்கல் படைப்பது இயலாத காரியம். ஆகவே வீட்டிற்குள் பொங்கல் கொண்டாடுவதே சிறந்த செயல் ஆகும். பாரம்பரிய முறைப்படி செய்ய முடியாத காரணத்தால் வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. வீட்டை நீங்கள் விழாக்கோலமாய். மாற்றுவதால் உங்கள் சந்தோசம் இரட்டிப்பாகும்.

தீம் ஒன்றை உருவாக்குங்கள்
எப்போதும் ஒரே விதமான அலங்காரம் சலிப்பைத் தருகிறதா? இந்த ஆண்டு ஒரு கருவை உருவாக்கி அதற்கேற்ற விதத்தில் உங்கள் அலங்காரத்தைத் தொடங்குங்கள். முடிந்தால் உங்கள் அடுக்குமாடியில் குடியிருக்கும் அக்கம் பக்கத்தினர்களையும் அழைத்து இதே கருவைக் கொண்டு அவர்கள் வீட்டையும் அலங்கரிக்க கூறுங்கள். முடிந்தால் உங்கள் அடுக்குமாடி மொட்டை மாடியில் அனைவரும் சேர்ந்து பொங்கல் கொண்டாடுங்கள்.

கரும்பு
பொங்கல் பண்டிகையில் கரும்பு ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. காரணம் பொங்கல் பண்டிகையின் போது அறுவடை செய்யும் உணவுப்பொருட்களில் கரும்பும் ஒன்று. எனவே உங்கள் அலங்காரத்தில் பச்சை நிறத் தோகையுடன் கூடிய கரும்பைப் பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் அலங்காரம் மேலும் அழகுடன் காண்பவரை ஈர்க்கும்.

பச்சை நிறத்தைப் பயன்படுத்துங்கள்
பொங்கல் பண்டிகை என்பது வளத்தைக் கொண்டாடும் பண்டிகை என்பதால் பச்சை நிறத்தை உங்கள் அலங்காரத்தில் இணைத்துக் கொள்ளலாம். சுற்றுச்சூழலுக்கு கேடு தராத, எகோ - ப்ரெண்ட்லி பொருட்கள் அதாவது காகிதங்கள் போன்ற பொருட்களைக் கொண்டு அலங்கரிப்பதால் உங்கள் இல்லம் மேலும் அழகுடன் மிளிரும்.

பழம்பெரும் வழிபாடு
இந்துக்களின் நம்பிக்கைபடி, பசு ஒரு புனிதமான விலங்கு. எனவே, பொங்கல் பண்டிகையின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று பசுவை வழிபடுவது. ஆனால் இன்றைய நகர வாழ்க்கையில் நாம் பசுவை எங்கே தேடுவது? எனவே பொங்கலில் ஒரு பசுவின் ரங்கோலி உருவத்தை உருவாக்குவது மிகவும் நல்ல யோசனை. பச்சை நிறத்தை மையமாக வைத்து செய்யப்படும் அலங்காரத்திற்கு மேலும் அதிர்வு தரும் ஒரு படைப்பாக இந்த கோலம் இருக்கும்.

மின்விளக்குகளைப் பயன்படுத்துங்கள்
வாழை இலை, கரும்பு, மாவிலை என்று பொங்கல் அலங்காரத்திற்கு பயன்படுத்தும் எல்லாப் பொருட்களும் பொதுவாக பச்சை நிறத்தில் காணப்படும். எனவே உங்கள் அலங்காரத்திக்கு சமகால உணர்வு கொடுப்பதற்கு மின்விளக்குகளையும் பயன்படுத்தலாம். இது இல்லம் முழுக்க வெளிச்சம் தந்து மேலும் அழகை மேம்படுத்தும்.

பொங்கல் பானை அலங்காரம்
பொங்கல் பண்டிகையின் முக்கிய அம்சம் பொங்கல் சமைப்பது. எனவே பொங்கல் சமைக்கப் பயன்படுத்தும் பானை ஒரு முக்கிய இடம் பிடிக்கிறது. பொங்கல் பானையை வண்ணங்கள், மலர்கள், மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து ஆகியவற்றைக் கொண்டு அலங்கரிக்கலாம். இதனால் உங்கள் இல்லத்தின் பொங்கல் பண்டிகை மேலும் வண்ணமயமாகும்.

எல்லாமே ஒரு அளவாக இருக்கட்டும்
என்ன தான் பொங்கல் பண்டிகை எல்லோராலும் கொண்டாடப்பட்டாலும், நாம் நமது சுதந்திரத்தை நம் வீட்டில் மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே எந்த ஒரு அதீத ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அருகில் இருப்பவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் நம் இல்லத்தில் எளிமையான முறையில் கொண்டாட்டத்தை வைத்துக் கொள்வது நல்லது.