Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் அடுத்த 40 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சனிபகவானின் ஆசியால் டிசம்பர் மாதம் முதல் 2027 வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
முட்டைக்கோஸ் இருந்தா இப்படி குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
புடலங்காய் வாங்குனா அதனுடன் பால் சேர்த்து நெல்லை ஸ்டைலில் பால் கூட்டு செய்யுங்க - அட்டகாசமா இருக்கும் -
Hair Care: தலைக்கு எண்ணெய் வைக்கும் போது இந்த தவறுகளை தெரியமா கூட செஞ்சுராதீங்க - இல்லனா அவ்வளவுதான் -
இந்த 4 ராசிக்காரங்க உடம்பை இரும்பு மாதிரி வைச்சுக்க ஆசைப்படுவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முடி கொட்டுதா? முடியின் வளர்ச்சியை அதிகரிக்க.. விளக்கெண்ணெயை வெச்சு இப்படி ஹேர் மாஸ்க் போடுங்க.. -
வாஸ்து படி உங்க குடும்ப போட்டோவை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும்? எந்த திசையில் வைக்கக்கூடாது? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
ஒரு நாள் மட்டும் இந்தியாவின் தலைநகராக இருந்த இந்திய நகரம் எது தெரியுமா? அதற்குப்பின் என்ன நடந்தது தெரியுமா?
தினமும் இந்த விஷயங்கள செஞ்சா போதுமாம்... உங்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் வராதாம் தெரியுமா?
தினசரி உடற்பயிற்சியின் தாக்கத்தை நீங்கள் ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது. உடற்பயிற்சியின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, அது உங்கள் அமைப்பை உள்ளே இருந்து சமநிலைப்படுத்துவதாகும்.
கொழுப்பு கல்லீரல் நோய் உங்கள் ஆரோக்கியத்தை அமைதியாக தாக்கும் நோய்களில் ஒன்றாகும். இது எந்த முக்கிய அறிகுறிகளையும் காட்டாமல் உங்கள் உடலில் ஊர்ந்து செல்கிறது. உடல் பருமன் மற்றும் வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த நோய் ஏற்படலாம். இருப்பினும் இது அதிகப்படியான மது அருந்தும் நபர்களுக்கு ஏற்பட வாய்ப்பு அதிகம். இது பொதுவாக எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. அறிகுறிகள் ஏற்படும் போது, அவை சோர்வு, எடை இழப்பு மற்றும் வயிற்று வலி ஆகியவை அடங்கும். இது மிகவும் ஆபத்தானது. கல்லீரலில் கொழுப்பு அதிகமாக இருக்கும் போது கொழுப்பு கல்லீரல் ஒரு நபரை பாதிக்கிறது. கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு வீக்கத்திற்கு வழிவகுக்கும் மற்றும் உங்கள் கல்லீரலுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும்.

சில நேரங்களில், இது கல்லீரல் சேதத்திற்கு வழிவகுக்கும். உங்கள் வாழ்க்கையில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படுவதை தடுக்கலாம். உங்கள் கல்லீரலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும் வழிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

கொழுப்பு கல்லீரலை மாற்றுவது சாத்தியமா?
உங்கள் வாழ்க்கை முறையை மாற்றுவது கொழுப்பு கல்லீரலை மாற்ற உதவும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொழுப்பு கல்லீரல் என்பது உங்கள் கல்லீரலில் கொழுப்பு படியும் சுகாதார நிலை. இந்த நிலைமையை மாற்றியமைக்க மற்றும் சிக்கல்களைத் தவிர்க்க நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும். இல்லையெனில், இது உறுப்புக்கு சேதத்தை ஏற்படுத்தும். கொழுப்பு கல்லீரலைச் சமாளித்து, உங்கள் வாழ்க்கையைத் திரும்பப் பெறுவதற்கான சில எளிய வழிகளை இங்கு காணலாம்.

கூடுதல் கிலோவைக் குறைக்க வேண்டும்
உங்கள் உடல் பருமனை சிறிது குறைப்பது கூட உங்கள் கல்லீரலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், காஸ்ட்ரோஎன்டாலஜி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், உங்கள் உடல் எடையில் 10 சதவீதத்தை குறைப்பது கல்லீரல் கொழுப்பு மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும் என்று கண்டறிந்துள்ளது. உங்கள் எடையை நிர்வகிப்பது கொழுப்பு கல்லீரலுக்கு உதவுகிறது என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. ஆதலால், உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டு உங்கள் எடையை குறைக்க வேண்டிய நேரம் இது.

மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்
கொழுப்பு கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கும் முக்கிய காரணிகளில் மதுவும் ஒன்று. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மது அருந்துவது அவர்களின் உடல்நிலையை மேலும் மோசமாகிறது. எனவே, உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், மது அருந்துவதைக் கட்டுப்படுத்துங்கள்.

ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்
உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான காய்கறிகள் மற்றும் முழு பழங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது கல்லீரல் கொழுப்பை குறைக்க உதவுகிறது. ஆரோக்கியமான கொழுப்புகள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவை உண்ணுங்கள். மீன், ஆளி விதைகள், நட்ஸ்கள் மற்றும் அவகேடோ போன்ற கொழுப்புகள் நிறைந்த உணவுகளையும் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

உடற்பயிற்சி அவசியம்
தினசரி உடற்பயிற்சியின் தாக்கத்தை நீங்கள் ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது. உடற்பயிற்சியின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, அது உங்கள் அமைப்பை உள்ளே இருந்து சமநிலைப்படுத்துவதாகும். நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்களின் (CDC) படி, ஒரு வயது வந்தவர் வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான மற்றும் தீவிரமான உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். அது ஒரு பூங்காவில் நீண்ட வேகமான நடைப்பயிற்சி, யோகா போன்ற உடல்செயல்பாடுகளிலும் நீங்கள் ஈடுபடலாம்.

கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்
உங்கள் அமைப்பில் அதிகப்படியான கலோரிகள் கொழுப்பு கல்லீரல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் கல்லீரலில் கொழுப்புகளை உடைக்க முடியவில்லை என்றால், கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு குவிந்துவிடும். மேலும் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பது உங்கள் கல்லீரல் அதன் வேலையைச் செய்வதை மேலும் கடினமாக்குகிறது. ஏற்கனவே கொழுப்பு கல்லீரல் உள்ளவர்களுக்கு, அதிக கொழுப்பை சாப்பிடுவது வீக்கம் அல்லது வடுவை ஏற்படுத்தும்.

அதிக புரதத்தை சாப்பிட மறக்காதீர்கள்
போதுமான புரதத்தை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், விரைவாக குணமடையவும் உதவுகிறது. லிவர் இன்டர்நேஷனல் இதழில் வெளியிடப்பட்ட ஜெர்மன் ஆய்வில், அதிக புரதச்சத்து கொண்ட உணவை உட்கொள்வது கல்லீரல் கொழுப்பைக் குறைக்க உதவும் என்று கண்டறிந்துள்ளது. எனவே, மீன், கடல் உணவுகள், குறைந்த கொழுப்புள்ள பால், சீஸ், தயிர், முட்டை, பீன்ஸ் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.



Click it and Unblock the Notifications
