For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ள பெண்கள் இந்த யோகாசனங்களை செய்யுங்கள்போதும்…!

|

வளர்ந்து வரும் காலகட்டத்திற்கு ஏற்ப நம்முடைய உணவு முறையும், வாழ்க்கை முறையும் மாறி வருகிறது. இதன் காரணமாக நம் உடலில் ஏராளமான நோய்கள் உண்டாக வாய்ப்புள்ளது. பொதுவாக பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். சிறுவயதிலே சிறுமிகள் பூப்படைந்துவிடுகின்றன. மேலும், பல பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாயால் தவித்துவருகின்றனர்.

yoga-asanas-that-will-cure-irregular-periods-and-menstrual-p

பெண்கள் ஆண்களுக்கு நிகராக எல்லா துறைகளிலும் தங்களுக்கென்று தனி முத்திரைகளை பதித்து வருகின்றனர் பெண்கள். அத்துடன் வீட்டு நிர்வாகத்தையும் கவனித்து வருகின்றனர். இத்தனை சவால்களுக்கு மத்தியில் வயிற்று வலி, தசைப்பிடிப்பு, வீக்கம், மற்றும் அதிக இரத்தப்போக்கு என ஒவ்வொரு மாதமும் ஐந்து நாட்கள் பெண்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக உதிரப்போக்கு அந்த நேரங்களில் மட்டும் கடுமையான இடுப்புவலி மற்றும் வயிற்றுவலி என அனைத்திற்கும் ஒரே மருந்தாக இருப்பது தான் யோகா பயிற்சி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாதவிடாய்

மாதவிடாய்

மாதவிடாய் என்பது ஒரு பூப்பெய்த பெண்ணின் உடலில் மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும். இது பெண்ணின் இனப்பெருக்க தொகுதியிலுள்ள ஒரு உறுப்புகளில் ஒன்றான கருப்பையிலிருந்து, யோனியினூடாக மாதத்தில் மூன்று முதல் ஏழு நாட்கள் குருதியுடன் சேர்ந்து கருப்பையின் உள் சீதமென்சவ்வும்( mucous membrane ) வெளியேறுவதை குறிக்கும்.

ஒழுங்கற்ற மாதவிடாய்

ஒழுங்கற்ற மாதவிடாய்

மாதவிடாய் பொறுத்தவரை இந்த சமூகம் அதை அசுத்தம் என்றும், அதைச் சுற்றி ஏகப்பட்ட முடிச்சுகளை போட்டு வைத்துள்ளது. ஆனால், அது உடலில் ஏற்படும் மாற்றம் என்பதை அனைவரும் உணர வேண்டும். பெண்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல பிரச்னைகளை சமாளிக்க வேண்டியுள்ளது. இளம் பெண்கள் தொடங்கி வேலைக்கு செல்லும் பெண்கள் வரை அனைவரையும் தாக்கக் கூடிய ஒரு பிரசனை என்னவென்றால் அது ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை.

MOST READ: மீண்டும் காதலிக்கப்போறீங்களா?...அப்ப இந்த விஷயத்தை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க...!

உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்கள்

உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்கள்

மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்கள் நிறைய ஏற்படும். சில பெண்கள் அடிக்கடி கோபப்படுவார்கள். இன்னும் பலருக்கு, மாதாந்திர இரத்தபோக்கு மிகவும் சோதனையாக இருக்கும். ஒழுங்கற்ற காலங்களைக் கையாள்வது மற்றும் அந்த நான்கு நாட்களிலும் மிகுந்த வேதனையைத் தாங்குவது மற்றும் அதற்கு வழிவகுக்கும் என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.

அனுபவிக்கும் வலிகள்

அனுபவிக்கும் வலிகள்

பெண்களுக்கு மாதவிடாயின் போது வயிற்றுப்பகுதியின் கீழ் பகுதியில் தசைப்பிடிப்பு, மார்பக வலி, மார்பக வீக்கம், தலைவலி, தோள்மூட்டு வலி, மனச்சோர்வு, எரிச்சல், வயிற்று வலி, பிறப்புறுப்பு பகுதியில் வலி, உடல்சோர்வு போன்றவை ஏற்படும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

பொதுவாக மாதவிடாய் நாட்களில் உடற்பயிற்சி செய்வதை பலர் நிறுத்திவிடுகிறார்கள். ஆனால், அவ்வாறு செய்ய வேண்டாம். மிதமான உடற்பயிற்சி பிஎம்எஸ்-ஐ குறைப்பது மட்டுமின்றி அதிக வலியை ஏற்படுத்தும் மாதவிடாய் பிடிப்புகளையும் (menstrual cramps) குறைக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை . எனவே அரை நேரமாவது தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

MOST READ: உடலுறவின்போது உங்களுடைய உச்சகட்ட இன்பத்தை அதிகரிக்க இத செய்யுங்க போதும்...!

யோகா எவ்வாறு உதவுகிறது?

யோகா எவ்வாறு உதவுகிறது?

ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்களையும், அதிக இரத்த ஓட்டத்தையும் குணப்படுத்துவதற்கும், பிடிப்புகள் மற்றும் வலியைக் குறைப்பதற்கும் யோகா மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாதவிடாய் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் குணப்படுத்த யோகா சிறந்த மருந்து.

ஹார்மோன்கள்

ஹார்மோன்கள்

பெண்களின் உடல்ரீதியான பெரும்பாலான பிரச்னைகளுக்கு ஹார்மோன்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோட்டோசோன் போன்றவை சரியான நிலையில் வேலை செய்யவில்லை என்றால் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னையில் துவங்கி தொடர்ச்சியாக ஒவ்வொரு பிரச்னையாக உருவாகும். யோக செய்வதன் மூலம் அது உங்கள் ஹார்மோன்களில் வேலை செய்கிறது மற்றும் அவற்றை சமன் செய்கிறது.

மன அழுத்தம் குறையும்

மன அழுத்தம் குறையும்

பொதுவாக மனழுத்தம் அதிகமாக இருந்தால் யோகா செய்வது நல்லது. இது மன அழுத்தத்தை குறைத்து உங்கள் மனதையும் உடலையும் முழுமையாக பாதுகாக்கும். யோக செய்வதன் மூலம் இனப்பெருக்க உறுப்புகள் தூண்டப்படுகின்றன. இது அவற்றின் சிறந்த செயல்பாட்டிற்கு வழிவகுக்கிறது. யோகா வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. எனவே உங்கள் சிறந்த எடையை பராமரிக்கவும் இது உதவுகிறது.

MOST READ:வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா?

அதோமுக சுவானாசனம்

அதோமுக சுவானாசனம்

பெண்களுக்கு 40 வயதுக்கு மேல் மாதவிடாய் நின்றுவிடும். இந்நிலையில், அவர்களுக்கு வியர்வை வெளியேறுவது தூக்கமின்மை, மன அழுத்த பிரச்னை போன்றவை இருக்கும். இது எல்லாவற்றையும் அதோமுக சுவானாசனம் சரிசெய்யும்.

உஷ்டிராசனம்

உஷ்டிராசனம்

ஒட்டக போஸ் என்று பிரபலமாக அழைக்கப்படும் உஷ்டிராசனம் ஒரு இடைநிலை நிலை பின்தங்கிய வளைவு ஆகும். உஷ்டிரா என்றால் சமஸ்கிருதத்தில் ஒட்டகம் என்று பொருள். இது இதயத்திற்கு தேவையான வலிமையை அதிகரிக்கும்.

பரத்வாஜாசனம்

பரத்வாஜாசனம்

பரத்வாஜாசனம் செய்வதால் உடலில் உள்ள செரிமான உள் உறுப்புகள் அதன் வேலையினை சரியான முறையில் செய்யத் துவங்கும். வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும். இது அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தப்படும். அட்ரீனல் சுரப்பியை வேலை செய்ய வைக்கும். வயிறு தொடர்பான அனைத்து பிரச்னைக்கும் இந்த ஆசனம் ஏற்றது.

MOST READ: கள்ள உறவில் நீங்கள் இருக்கிறீர்களா? அப்ப கண்டிப்ப இத தெரிஞ்சிக்கோங்க...!

தனுரசன ஆசனம்

தனுரசன ஆசனம்

தனுரசனா அல்லது வில் போஸ் என்பது 12 அடிப்படை ஹத யோகங்களில் ஒன்றாகும். இது மூன்று முக்கிய பின்புற நீட்சி பயிற்சிகளில் ஒன்றாகும். இது முழு முதுகையும் வளைப்பதன் மூலம் ஒரு நல்ல நீட்டிப்பை அளிக்கிறது. இதனால் உடலின் பின்புறத்திற்கு வலிமையையும் அளிக்கிறது.

பரிவர்த திரிகோணாசனம்

பரிவர்த திரிகோணாசனம்

இந்த ஆசனம் சிறுகுடல், கல்லீரல், கணையம், சிறுநீரகங்கள் போன்ற உள் உறுப்புகளின் வேலையை சமநிலைப்படுத்துகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குவதால் மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்துகிறது. யோகா என்பது உடலுக்கும், மன அமைத்திக்கும் நன்மை பயக்கிறது. மேலும், பெண்கள் யோகா பயிற்சி தினமும் செய்வதால், உடலில் உண்டாகும் பல சிக்கல்களை தீர்க்க யோக உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Yoga asanas that will cure irregular periods and menstrual pain

Here are the yoga asanas that will cure irregular periods and menstrual pain.
Story first published: Tuesday, December 24, 2019, 14:41 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more