Latest Updates
-
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
சைவ உணவுக்கு மாறுவதால நீங்க என்னென்ன நன்மைகளை பெறுவீங்க தெரியுமா? ஆச்சரியப்படாம படிங்க!
சைவ உணவைப் பின்பற்றுவது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல் அதை பராமரிக்கவும் உதவும் என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. தாவர அடிப்படையிலான உணவுப் பொருட்களில் குறைந்த அளவு கொழுப்பு, சோடியம் மற்றும் கொலஸ்ட்ரால
சைவத்தைக் கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி உலக சைவ தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள் முதன் முதலில் 1977 இல் வட அமெரிக்க சைவ அமைப்பால் நிறுவப்பட்டது. இது, 1978இல் பன்னாட்டு சைவ உணவாளர் ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாள் கொண்டாட்டமாகும். மகிழ்ச்சி, கருணை மற்றும் சைவ உணவு வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. சைவ உணவின் நன்மைகள் மற்றும் சைவ உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

கொரோனா சூழ்நிலையில், ஒவ்வொருவரும் தங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தாவர அடைப்படையிலான் உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.சைவத்திற்கு மாறுவதன் நன்மைகள் பற்றி ஏற்கனவே நிறைய கூறப்பட்டுள்ளது. நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால் அல்லது அசைவத்திலிருந்து காய்கறி உணவுக்கு மாற விரும்பினால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில நன்மைகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

இதய ஆரோக்கியம்
சைவ உணவைப் பின்பற்றுவது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிக நார்ச்சத்துள்ள முழு தானியங்கள், பருப்பு வகைகள், நட்ஸ்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் உங்கள் தினசரி உணவில் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டிய உணவுகள். ஏனெனில், இவை உங்கள் இதயத்தை பாதுக்காக்க உதவுகிறது. சைவ உணவைப் பொறுத்தவரை, சிவப்பு இறைச்சி உங்கள் இதயத்தின் மோசமான எதிரி, ஏனெனில் இது கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது
சைவ உணவைப் பின்பற்றுவது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல் அதை பராமரிக்கவும் உதவும் என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. தாவர அடிப்படையிலான உணவுப் பொருட்களில் குறைந்த அளவு கொழுப்பு, சோடியம் மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளது. இது உங்கள் இரத்த அழுத்தத்தில் சாதகமான விளைவை ஏற்படுத்தும். மேலும், சைவ உணவின் முக்கிய பொருட்கள்- பழங்கள் மற்றும் காய்கறிகளில் பொட்டாசியம் நிறைந்துள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

வலுவான எலும்புகள்
சைவ உணவைப் பின்பற்றும் மக்கள் போதுமான அளவு கால்சியத்தை பல்வேறு வடிவங்களில் உட்கொள்வதால் எலும்புகள் வலிமையாக இருக்கும். பால், பாலாடைக்கட்டி, நட்ஸ்கள், டோஃபு, சோயா பீன்ஸ் மற்றும் பச்சை காய்கறிகள் போன்ற உணவுகள் கால்சியத்துடன் நிறைந்துள்ளது. இது எலும்புகள் உடையாமல் தடுக்க உதவும் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும்.

எடை கட்டுப்பாடு
உங்கள் எடையைக் கண்காணிக்க விரும்பினால் சைவ உணவைப் பின்பற்றவும். கோழி இறைச்சி, மீன், ஆட்டு இறைச்சி போன்ற அசைவ உணவுகள் சில அதிக கலோரி கொண்ட உணவுப் பொருட்களாகும். அவை தினசரி உட்கொண்டால், உங்கள் உடல் எடை அதிகரிக்கும். எடையை திறம்பட நிர்வகிக்க, சைவ உணவைப் பின்பற்றும் போது கூட வறுத்த உணவுப் பொருட்களைத் தவிர்க்கவும்.

நீரிழிவு நோய்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சைவ உணவில் பயனடையலாம். முழு தானியங்கள், பருப்பு வகைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற உணவுகள் அசைவ உணவு பொருட்களுடன் ஒப்பிடும்போது குறைவான கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட சில ஆரோக்கியமான விருப்பங்கள். ஆதலால், சர்க்கரை நோயாளிகள் சைவ உணவை சாப்பிடுவது நல்லது.

சைவ உணவுகள்
நீங்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெற விரும்பினால் சைவ உணவைப் பின்பற்றுவதற்கும் அதன் கட்டுப்பாடுகள் உள்ளன. வறுத்த உணவு, அதிக கார்ப் உணவு மற்றும் சர்க்கரை நிறைந்த இனிப்பு போன்ற உணவுகள் சைவ உணவின் நன்மைகளை ரத்து செய்யலாம் மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் முக்கிய உணவுகளுக்கு கறி, பருப்பு, சப்ஜி போன்ற வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிடுங்கள்.

இறுதிகுறிப்பு
உங்கள் உணவில் பருவகால காய்கறிகள் நிறைய சேர்க்கவும். நீங்கள் தினமும் 2-3 வகையான பழங்களை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். சைவ உணவின் குறைபாடுகளில் ஒன்று, சைவ உணவு உண்பவர்களுக்கு வைட்டமின் பி -12 மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் குறைபாடு ஏற்படலாம். ஏனெனில் இந்த ஊட்டச்சத்துக்கள் அசைவ உணவுகளில் முக்கியமாக அதிகமாக இருக்கின்றன.



Click it and Unblock the Notifications