Latest Updates
-
1 வருடம் கழித்து கன்னி ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த ராசிக்காரங்க தொழிலில் நல்ல வளர்ச்சியை பாக்கப்போறாங்க.. -
ராகி இட்லியும், வெங்காய கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சுவையானதும், சத்தானதும் கூட -
செப்டம்பர் 12, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்! -
செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் நவம்பர் மாதம் வரை டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அம்ரித்சரி பன்னீர் புர்ஜி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 5 ராசிக்காரங்க மற்றவர்களை விட வாழ்க்கையில் ஈஸியாக ஜெயிக்கும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்க ராசி என்ன? -
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா?
தர்பூசணி சாப்பிட்டதும் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது தெரியுமா?
நீர்ச்சத்துள்ள தர்பூசணியை சாப்பிட்ட பின் பலருக்கு தாகம் ஏற்படும். தர்பூசணி சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்கக்கூடாது என்று நம் வீட்டில் உள்ள பெரியோர்கள் சொல்வார்கள். ஏனெனில் அப்படி குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்குமாம்.
பழங்களில் தர்பூசணி நீர்ச்சத்து அதிகம் கொண்ட ஒரு சுவையான பழம். பொதுவாக பழங்களை சாப்பிட்டால் தாகம் எடுக்காது. இதற்கு அவற்றில் உள்ள நீர்ச்சத்து நமக்கு ஏற்படும் தாகத்தைத் தணிக்கிறது. ஆனால் நீர்ச்சத்துள்ள தர்பூசணியை சாப்பிட்ட பின் பலருக்கு தாகம் ஏற்படும் என்பது தெரியுமா? ஆம். இருப்பினும், தர்பூசணி சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்கக்கூடாது என்று நம் வீட்டில் உள்ள பெரியோர்கள் சொல்வார்கள். ஏனெனில் அப்படி குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்குமாம்.

சரி, தர்பூசணி சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும், எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம். ஆகவே தான், தமிழ் போல்ட்ஸ்கை தர்பூசணியை சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பதால் சந்திக்கும் விளைவுகளை உங்களுக்காக கீழே கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு
தர்பூசணியில் 92% தண்ணீர் மற்றும் 6% சர்க்கரை உள்ளது. ஆகவே இதை சாப்பிட்டாலே உடலுக்கு நிறைய தண்ணீர் கிடைத்துவிடும். ஆனால் தர்பூசணி சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால், உடலில் நீரின் அளவு அதிகரித்து, உடலை கனமாக்கிவிடுகிறது. இதன் காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

நீரிழப்பு
தர்பூசணி சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதன் மூலம், அடிக்கடி கழிவறைக்கு செல்ல வேண்டியிருக்கும். ஏனெனில், தர்பூசணி ஒரு டையூரிக் பண்புகளைக் கொண்ட பழம். இதன் காரணமாக, சாதாரணமாக இந்த பழத்தை சாப்பிட்டாலே அதிகம் கழிவறைக்கு செல்லக்கூடும். அதுவும் இப்பழத்தை சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால், உடலில் இருந்து இன்னும் அதிக நீர் வெளியேறி, நீரிழப்புக்கு ஆளாக நேரிடும்.

செரிமானம் தாமதமாகும்
தர்பூசணி சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடித்தால், உடல் கனமாகி, இதன் விளைவாக செரிமானம் மெதுவாக ஆரம்பிக்கும் மற்றும் உடல் சர்க்கரையை ஜீரணிப்பதில் சிரமத்தை சந்திக்கத் தொடங்கும். ஆகவே தான் தண்ணீர் குடிக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்.

குமட்டல்
ஏற்கனவே ஒருவர் வயிறு சரியில்லாமல் இருந்தால், அவர் தர்பூசணியை சாப்பிடக்கூடாது. ஒரு வேளை சாப்பிட்டுவிட்டால், அதன் பின் எக்காரணம் கொண்டும் தண்ணீர் குடிக்கக்கூடாது. இல்லாவிட்டால், அவர் குமட்டல் மற்றும் உடல்நலக் குறைவால் அவதிப்படுவார். எனவே கவனமாக இருங்கள்.

உடல் பலவீனம்
தர்பூசணி சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பதால், உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் சமநிலையில் இல்லாமல் இருக்கும். தர்பூசணி மற்றும் தண்ணீரை ஒருவர் ஒன்றாக உட்கொள்ளும் போது, அது உடலின் செல்களை அழித்து, மிகவும் பலவீனமாக உணர ஆரம்பிக்கும். ஆகவே தான் தண்ணீரை தர்பூசணி சாப்பிட்ட உடனே குடிக்கக்கூடாது என்று கூறுகிறார்கள்.
செரிமான பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க பழங்களை சாப்பிட்ட பின் ஒரு மணிநேரம் கழித்து தண்ணீர் குடிக்கலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தர்பூசணி, முலாம் பழம் போன்றவற்றுடன் மற்ற பழங்களை சேர்த்து சாப்பிடக்கூடாது. குறிப்பாக கிரேப்ஃபுரூட், ஸ்ட்ராபெர்ரி போன்ற அசிட்டிக் பழங்கள் அல்லது ஆப்பிள், மாதுளை, பீச், வாழைப்பழம் மற்றும் உலர் திராட்சை போன்றவற்றை சேர்த்து சாப்பிட வேண்டாம்.
ஆயுர்வேதத்தின் படி, தர்பூசணி மற்றும் பால் ஆகிய இரண்டும் எதிர் இயல்புடையவை. அதில் பால் இனிப்பு இயல்புடையதாகவும், தர்பூசணி சிட்ரிக் தன்மையைக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆகவே, இந்த இரண்டையும் ஒன்றாக ஒரே நேரத்தில் உட்கொள்ளும் போது, அது வயிற்றுப் பிரச்சனைகள் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.



Click it and Unblock the Notifications
