For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆபிஸ்-ல மதிய நேரத்துல தூக்கம் வராம இருக்க இத மதியம் சாப்பிடுங்க...

பொதுவாக மதிய வேளையில் சாதம், ரொட்டி, சப்பாத்தி, பரோட்டா, சாண்விட்ச், பர்கர், பிட்சா போன்றவற்றை சாப்பிடுவார்கள். நீங்கள் சற்று வித்தியாசமான மதிய உணவை முயற்சித்துப் பாருங்களேன். அதாவது, மதிய வேளையில் தூ

|

சில நேரங்களில் அலுவலகத்தில் மதிய நேரத்தைக் கடப்பது என்பதே மிகவும் கடினமாக இருக்கும். ஏனெனில் மதிய வேளையில் தான் பலருக்கும் தூக்கம் சொக்கும். அதுவும் உணவு உட்கொண்ட பின் இருக்கைக்கு வந்துவிட்டால் போதும், ஏசி காற்று அமைதியான சூழல் போன்றவற்றால் நம் உடல் நம் பேச்சைக் கேட்காமல் தூக்கத்தை வரவழைத்துவிடும்.

Whats The Best Lunch To Avoid Sleepiness?

ஒருவருக்கு மதிய வேளையில் தூக்கம் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முந்தைய நாள் இரவு நல்ல தூக்கத்தைப் பெறாமல் இருப்பது, மோசமான வாழ்க்கை முறை, சர்க்கரையை உட்கொள்ளும் அளவு, உடலின் ஆற்றல் அளவு மற்றும் அதிகளவு மதிய உணவு போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பொதுவாக மதிய வேளையில் சாதம், ரொட்டி, சப்பாத்தி, பரோட்டா, சாண்விட்ச், பர்கர், பிட்சா போன்றவற்றை சாப்பிடுவார்கள். நீங்கள் சற்று வித்தியாசமான மதிய உணவை முயற்சித்துப் பாருங்களேன். அதாவது, மதிய வேளையில் தூக்கம் வராமல் தடுக்கும் சில சிறப்பான மதிய உணவுகளை முயற்சிக்கலாம் அல்லவா? அதற்கு முதலில் நினைவில் கொள்ள வேண்டியது, ஹெவி மீல்ஸ் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஹெவி மீல்ஸ் சோம்பலைத் தூண்டிவிடும்.

இக்கட்டுரையில் அலுவலகத்தில் வேலை செய்யும் போது மதிய வேளையில் தூக்கம் வராமல் இருக்க சாப்பிட ஏற்ற சில மதிய உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த உணவுகள் எளிதில் செரிமானமாவதோடு, பசியைப் போக்கும். சரி, இப்போது அந்த உணவுகள் எவையென்று காண்போமா...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெஜிடேபிள் ஆம்லெட்

வெஜிடேபிள் ஆம்லெட்

மதிய வேளையில் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை ஆம்லெட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் பசி போவதோடு, உடலுக்கு வேண்டிய புரோட்டீனும் கிடைக்கும். அதன் பின் வேண்டுமானால் ஆப்பிள் சாப்பிடுங்கள்.

சாண்விட்ச் மற்றும் க்ரீன் ஜூஸ்

சாண்விட்ச் மற்றும் க்ரீன் ஜூஸ்

ஒரு வெஜிடேபிள் சாண்விட்ச் உடன் காய்கறி மற்றும் கீரையால் ஆன க்ரீன் ஜூஸ் குடிக்கலாம். க்ரீன் ஜூஸ்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இவற்றில் புரோட்டீன், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், நார்ச்சத்து போன்றவை உள்ளன. இவற்றை மதிய வேளையில் உட்கொள்வதால், பசி கட்டுப்படுவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும்.

ரொட்டி மற்றும் பீட்ரூட் பொரியல்

ரொட்டி மற்றும் பீட்ரூட் பொரியல்

ரொட்டி சாப்பிடாமல் இருக்க முடியாதவர்களானால், மதிய வேளையில் ரொட்டிக்கு சைடு டிஷ்ஷாக பீட்ரூட் பொரியலை எடுத்துக் கொள்ளுங்கள். அதுவும் இரண்டு துண்டு ரொட்டி மற்றும் பீட்ரூட் பொரியல் தான் சாப்பிட வேண்டும். இதனால் ஆரோக்கியமாக இருப்பதோடு, மயக்க உணவு ஏற்படாமல் நீண்ட நேரம் சாதாரணமாக இருக்க உதவும்.

இட்லிக்கு பின் சிறிது பேரிச்சம் பழம்

இட்லிக்கு பின் சிறிது பேரிச்சம் பழம்

பேரிச்சம் பழம் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் என்பது தெரியுமா? இதில் அத்தியாவசிய கனிமச்சத்துக்களான பொட்டாசியம் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ஆகவே நீங்கள் மதிய வேளையில் இட்லி சாப்பிட்ட பின், சிறிது பேரிச்சம் பழத்தை சாப்பிடுங்கள். இதனால் மதிய வேளையில் தூக்கம் வராமல் இருக்கும்.

வாழைப்பழம், முந்திரி

வாழைப்பழம், முந்திரி

மதிய வேளையில் ரொட்டி சாப்பிட்டாமலும் இருக்க முடியும் என்பவர்கள், இந்த வழியை முயற்சிக்கலாம். அது ஒரு கப் யோகர்ட்டுடன், ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழங்கள், சிறிது முந்திரி சேர்த்து சாப்பிட வேண்டும். இப்படி உண்பதால், வயிறு நிறைவதோடு, மதிய வேளையில் தூக்கம் வராமலும் இருக்கும்.

சாண்விட்ச் மற்றும் பேக் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு

சாண்விட்ச் மற்றும் பேக் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு

பேக் செய்யப்பட்ட உருளைக்கிழங்கை முயற்சித்துப் பாருங்கள். இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு, உடலுக்கு ஆற்றலை வழங்கி சுறுசுறுப்பையும் அளிக்கும். ஆனால் இதை மதிய வேளையில் சாண்விட்ச் சாப்பிட்ட பின் அளவாக உட்கொள்ள வேண்டும்.

சப்பாத்தி மற்றும் சாலட்

சப்பாத்தி மற்றும் சாலட்

நீங்கள் சாலட்டை விரும்பி சாப்பிடுபவராயின், மதிய வேளையில் தூக்கம் வராமல் இருக்க வேண்டுமானால், சாலட்டை உட்கொள்ளுங்கள். இதனால் தூக்கம் வராமல் இருப்பதோடு, உடலும் சுத்தமாகும். அதற்கு மதிய வேளையில் இரண்டு சப்பாத்தி சாப்பிட்ட பின், ஒரு பௌல் விருப்பமான காய்கறிகளால் ஆன சாலட் சாப்பிடவும்.

யோகர்ட் மற்றும் பெர்ரிப் பழங்கள்

யோகர்ட் மற்றும் பெர்ரிப் பழங்கள்

ஒரு கப் யோகர்ட்டில் சிறிது ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளாக் பெர்ரி பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை மதிய வேளையில் சாப்பிடுவதால் மயக்க உணர்வு ஏற்படாமல் வயிற்றை நிரப்பும். ஒருவேளை இந்த மதிய உணவு போதாவிட்டால், வேக வைத்த முட்டைகளை இரண்டு சாப்பிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What's The Best Lunch To Avoid Sleepiness?

Whats the best lunch to avoid sleepiness? To begin with, it is better to avoid a heavy lunch as that can induce drowsiness.
Story first published: Monday, November 11, 2019, 15:00 [IST]
Desktop Bottom Promotion