Latest Updates
-
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் கொழுப்பைக் குறைக்க உதவுமாம்.. இயற்கையாக அதை எவ்வாறு அதிகரிப்பது?
தற்போது பலரும் சந்திக்கும் முக்கியமான பிரச்சினை என்னவென்றால் உடல் பருமன் சார்ந்த பிரச்சினை ஆகும். உடல் எடையைக் குறைப்பதில் நல்ல பாக்டீரியாக்கள் மிகவும் உதவியாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.
தற்போது பலரும் சந்திக்கும் முக்கியமான பிரச்சினை என்னவென்றால் உடல் பருமன் சார்ந்த பிரச்சினை ஆகும். நமது உடல் எடை அதிகரித்தால் அது இரத்த அழுத்தம், உயர் இரத்த சர்க்கரை மற்றும் உயர் கொழுப்பு போன்ற பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்த்துவிடும்.

ஆகவே உடல் எடையைக் குறைப்பதில் நல்ல பாக்டீரியாக்கள் மிகவும் உதவியாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. நமது உடல் எடையைக் குறைப்பதற்கு நல்ல பாக்டீரியாக்கள் எவ்வாறெல்லாம் உதவி செய்கின்றன என்பதை இங்கே பார்க்கலாம்.

புரோபயோடிக்குகள் (Probiotics) என்றால் என்ன?
புரோபயோடிக்குகள் (Probiotics) என்று அழைக்கப்படும் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் ஈஸ்ட்டுகள் நமது செரிமான அமைப்புக்கு மிகவும் உதவி செய்கின்றன. அதாவது நாம் ஆரோக்கியமாக இருக்க இவை பெரிதும் உதவி செய்கின்றன. இந்த நல்ல பாக்டீரியாக்கள் தயிர் போன்ற புளிக்க வைத்த துணை உணவுப் பொருள்களில் அதிகம் இருக்கின்றன. ஆகவே செரிமான கோளாறை சரி செய்ய மருத்துவர்கள் தயிரை அதிகம் பரிந்துரை செய்கின்றனர்.

எடையைக் குறைக்க உதவும் லாக்டோபேசில்லஸ்
நல்ல பாக்டீரியாக்கள் நமது உடல் எடையைக் குறைப்பதோடு மட்டும் அல்லாமல், நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவையும் குறைப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக லாக்டோபேசில்லஸ் என்ற நல்ல பாக்டீரியா உடல் எடை மற்றும் வயிற்றுக் கொழுப்பு போன்றவற்றைக் குறைப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கின்றன என்று அறிவியல் பூர்வமாக நீரூபிக்கப்பட்டிருக்கிறது.

நல்ல பாக்டீரியாக்கள் எவ்வாறு உடல் எடையையும், வயிற்று கொழுப்பையும் குறைக்கின்றன?
நமது உடலில் ஏராளமான சிறிய நுண்ணுயிர்கள் நிறைந்திருக்கின்றன. அவை நமது உடலுக்கு நன்மை பயக்கும் நண்பர்களாக இருக்கின்றன. அவற்றில் சில நமது உடல் எடையைக் குறைப்பதற்கும் அல்லது உடல் எடையைப் அதிகரிப்பதற்கும் பெரிதும் உதவி செய்கின்றன.
நல்ல பாக்டீரியாக்கள் உணவை செரிக்க வைப்பதற்கு பெரிதும் உதவி செய்கின்றன. அதே நேரத்தில் நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவற்றை உருவாக்குவதிலும் இந்த நல்ல பாக்டீரியாக்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றன.

லாக்டோபேசில்லஸ் உடல் பருமனை குறைப்பதற்கு எவ்வாறு உதவி செய்கிறது?
நல்ல பாக்டீரியாவான லாக்டோபேசில்லஸ் உடல் பருமனை குறைப்பதற்கு எவ்வாறு உதவி செய்கிறது என்பதைப் பற்றிய ஆய்வை த பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷியன் என்ற பத்திரிக்கை மேற்கொண்டது. அந்த ஆய்வின் போது நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் கொண்ட உணவை உண்ட பெண்கள், நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் இல்லாத உணவை உண்ட பெண்களைவிட கணிசமான அளவில் தங்களுடைய எடையைக் குறைத்தனர். மேலும் நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த துணை உணவை உண்ட அந்த பெண்கள் அந்த ஆய்வு காலம் முடிந்த பிறகும் தொடர்ந்து தங்கள் உடல் எடையைக் குறைத்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஆண்களுக்கு ஆய்வு செய்ததில் இந்த பலன் கிடைக்கவில்லை.

மற்றொரு ஆய்வு முடிவு
2013 ஆம் ஆண்டு ஜர்னல் ஆஃப் ஃபங்ஷனல் ஃபூட்ஸ் என்ற பத்திரிக்கை ஒரு ஆய்வை வெளியிட்டது. அதாவது லாக்டோபேசில்லஸ் அதிகம் நிறைந்த உணவை உண்ட அதிக உடல் எடை கொண்டவர்களின் உடல் எடையில் ஏற்பட்ட மாற்றம் கண்காணிக்கப்பட்டது. ஆய்வின் முடிவில் லாக்டோபேசில்லஸ் அதிகம் நிறைந்த உணவை உண்டவர்களின் உடலில் இருந்த கொழுப்பு 3 முதல் 4 விழுக்காடு அளவிற்கு கரைந்ததாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த உணவுகள்
புளிக்க வைத்த உணவுகளில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் நிறைந்திருக்கும். குறிப்பாக நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த உணவிற்கு தகுந்த உதாரணமாக தயிரைக் கூறலாம். மேலும் செரிவூட்டப்படாத பாலாடைக் கட்டிகள், ஆப்பிள் சாறிலிருந்து தயாரிக்கப்படும் வினிகர், கிமிச்சி, மிசோ போன்ற உணவுகளிலும் நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கின்றன.

நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த உணவுகள் அளிக்கும் பக்கவிளைவுகள்
சில சமயங்களில் நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த உணவுகளை உண்பதால் சிறிய அளவிலான உடல் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. அதாவது வயிறு கோளாறு, வயிற்றுப்போக்கு, வாயுத் தொல்லை மற்றும் வீக்கம் போன்ற பிரச்சினைகள் இந்த உணவுகளை உண்ண தொடங்கிய 2 நாட்களுக்கு இருக்கும். அதே நேரத்தில் இந்த உணவுகள் அலர்ஜி சம்பந்தமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். அவ்வாறு அலர்ஜி ஏற்பட்டால் மருத்துவரை சந்திப்பது நல்லது.



Click it and Unblock the Notifications